பொருளடக்கத்திற்கு தாவுக

என் References

by மேல் செப்டம்பர் 10, 2010

வாசிப்பு விஷயத்தில், குறிப்பாக தமிழ் வாசிப்புக்கு, சில சுட்டிகளை நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறேன். இவற்றை என் references என்று சொல்லலாம். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட் – ஜெயமோகன் நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய விமர்சகர். வாசிப்பு அனுபவத்தைப் பற்றி, மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப்பட்ட கட்டுரைகள், பதிவுகள் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால் கூட குறைவுதான். அந்த வகையில் இது முக்கியமான பதிவு. ஒரு சீரியஸ் தமிழ் எழுத்தாளர் “வணிக எழுத்தை” பொருட்படுத்தி எழுதியதை நான் இங்கேதான் முதன் முதலில் பார்த்தேன். (இன்னமும் அது அபூர்வமே. இப்படி எழுதி இருக்கும் ஜெயமோகனுக்கே கூட “வணிக எழுத்து” என்றால் அதில் இலக்கியம் இருக்க முடியாது என்ற இளக்காரம் அவ்வப்போது தெரியும்.)

இந்த லிஸ்ட் கொஞ்சம் பழையதுதான், போட்டு பத்து வருஷங்கள் இருக்கும். அது ஒன்றுதான் இந்த லிஸ்டின் குறை. அதை அப்டேட் செய்ய வேண்டும் என்று ஜெயமோகனிடம் கேட்டிருந்தேன், அவருக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்குமோ தெரியாது.

ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் லிஸ்ட் – கொஞ்சம் பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகளுக்கு மேல் இந்த லிஸ்டில் இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட் – எஸ்.ரா.வுக்கு அறிமுகம் தேவையில்லை. :-)

எஸ்.ரா.வின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் லிஸ்ட்

அழியாசுடர்கள் தளம் – இப்போதெல்லாம் ஒரு சிறுகதையைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அது இங்கே பதிக்கப்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்கிறேன். இந்த தளத்தை நடத்தும் ராம் தனக்கு பிடித்த சிறுகதைகளை எல்லாம் இங்கே பதித்துக்கொண்டிருக்கிறார்.

இன்னும் ஒரு reference – பாவண்ணனின் எனக்கு பிடித்த சிறுகதைகள் சீரிஸ் தொகுப்பு

தொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்டிக்கி பதிவுகள்

From → Reading

2 மறுமொழிகள்
  1. உங்களின் இந்த தளத்தை பார்த்தவுடன், வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் ஒரு நம்பிக்கை வந்துள்ளது. Desktop, Laptop, Tablet, ipod, Smart Phone இப்படியே கருவிக்கடலில் கரைந்துபோகும் இந்த சமூகத்தில் வாசிப்பு பழக்கம் மறைந்து போகுமோ என்று அஞ்சுகிறேன், வாசிப்பை ஊக்குவிக்க அணில் அளவு இல்லை என்றாலும் அணுவளவேனும் என்னாலான முயற்சியை மேற்கொள்ள விரும்புகிறேன், இதோ என்னைப் பற்றி ……

    நான் கணிப்பொறி பழுது நீக்கும் தொழிலை செய்து வருகிறேன். சமீப காலமாக, எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டே வருவதை உணருகிறேன். என்னுடைய சர்விஸ் பேகில் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் எப்பொழுதும் இருக்கும். அதுமட்டுமில்லாமல், நான் கண்ட சுவையான அனுபவங்களையும், நகரத்து அவலங்களை எனது தளத்தில் பதிய விருப்படுகிறேன். ஆனால் அவற்றை எல்லாம் எப்படி பதிவது? கடுரையாகவா? சிறுகதையாகவா? மேலும் இலக்கணப் பிழையின்றி எழுத முடியுமா? என்றெல்லாம் குழப்பம். நல்லதொரு வழியை சொன்னால் நன்றியுடன் நடைபோடுவேன்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s