பொருளடக்கத்திற்கு தாவுக

படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்

by மேல் அக்டோபர் 18, 2010

நான் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்களை இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன். இவற்றை நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை அல்லது பாதி படித்துவிட்டு வைத்திருக்கிறேன். (சில சமயம் நல்ல புத்தகம் என்று தெரிந்தும் முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று எடுத்து வைப்பதுண்டு.)

  1. ஜெயமோகனின் கொற்றவை – ஆரம்பம் அற்புதமாக இருந்தது. முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன்.
  2. ஜோ டி க்ரூஸின் ஆழி சூழ் உலகு – இதுவும் பாதி படித்து வைத்திருக்கும் புத்தகம்தான்.
  3. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் – இவை இரண்டையும் ஏனோ ஒரே புத்தகமாகத்தான் கருதத் தோன்றுகிறது.
  4. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்
  5. பாலகுமாரனின் உடையார்
  6. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம்
  7. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் – இது இயக்குனர் சேரன், மற்றும் ரதி நடித்து சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமாக வந்தது.
  8. அரு. ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி
  9. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்
  10. பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை

போனஸ்:

  1. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள்
  2. கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள்
  3. கிருத்திகாவின் வாசவேஸ்வரம்
  4. தேவனின் சி.ஐ.டி. சந்துரு
  5. அ.கா. பெருமாளின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி

இதைப் படிப்பவர்களும் தாங்கள் படிக்க விரும்பும் தமிழ் புத்தகங்களை சொல்லுங்களேன்!

From → Reading

33 மறுமொழிகள்
  1. தலைகீழ் விகிதங்கள்; லிகிதங்கள் அல்ல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. எனக்கு பிடித்த தமிழின் டாப் 10 . 1 .அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.2 .வண்ணநிலவனின் கம்பா நதி.3 விட்டல் ராவின் நதி மூலம்.4 நீல.பத்மநாபனின் தலைமுறைகள்.5 .நாஞ்சில் நாடனின் சதுரங்க குதிரைகள்.6 .பாவண்ணனின் ஒரு மனிதரும் சில வருடங்களும்.7 ப.சிங்கரத்தின் புயலில் ஒரு தோணி..8 jk வின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன.9 சுஜாதாவின் எப்போதும் பெண்.10 தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்.

  3. அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18 -ம் அட்சக்கோடு
    வண்ணநிலவன்: ரெய்னீஸ் ஐயர் தெரு, கம்பா நதி, காலம்
    ஜெமோ: காடு, ஏழாம் உலகம்
    சுஜாதா: ஏறக்குறைய சொர்க்கம்

  4. நான் விரும்பும் தமிழ் புத்தகங்கள்
    1 .கல்கியின் சிவகாமியின் சபதம்,
    2 .பொன்னியின் செல்வன்,
    3.பார்த்திபன் கனவு
    4 . தேவனின் சி.ஐ. டி சந்துரு
    5. மிஸ்டர் வேதாந்தம்
    6 .ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
    7 .தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள்
    8 .லக்ஷ்மியின் பண்ணையார் மகள்

  5. விஜயன், ராஜ், நடனசபாபதி, இவை உங்களுக்கு பிடித்த புத்தகங்களா இல்லை படிக்க விரும்பும் புத்தகங்களா? நான் படிக்க விரும்புவற்றை லிஸ்ட் போட்டிருக்கிறேன்…

    டோண்டு சார், நிச்சயமாகத் தெரியுமா? எனக்கு லிகிதம் என்றுதான் நினைவு…

  6. பாதி படித்த, படிக்க விரும்புகின்ற நூல்கள்

    1. வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர்
    2. ஏழாம் உலகம் – ஜெயமோகன்
    3. பிரம்ம சூத்திரம் – சுகவனேச்வரன்
    4. திராவிட மாயை – ஓர் பார்வை – சுப்பு
    5. சொற்களுக்குள் ஏறிக் கொள் – ரவி
    6. அமெரிக்ககாரி – அ.முத்துலிங்கம்
    7. மங்கை மடவண்ணம் ( வடுவூர்) (இது மகா அறுவை)
    8. ம.வே.சிவகுமார் சிறுகதைகள்
    9. கோப்பைத் தேநீரும் கொஞ்சம் கவிதையும் – ஹரிகிருஷ்ணன்
    10. டி.எம்.எஸ் – வாமனன்

  7. தலைகீழ் விகிதங்களுக்கு 1978 இல் தமிழியல் ஆய்விதழில் வெளியான ஒரு மதிப்புரை.

    http://www.ulakaththamizh.org/JOTSpdf/013111115.pdf

  8. Some of them I have read and kept them aside to re-read. “Ezham Ulagam” and “18-vathu atchakodu”-yet to read.

  9. RV ,இது நான் படித்த நூல்களில் மிகவும் பிடித்த டாப் டென் .

  10. i am keeping in my home library for frequent reading the following
    1.devans mr. vedantham.
    2.thi.ja.ra. – amma vanthal
    3………..moha mul.
    4.———-siru kathai thoguppu
    5.thalai keel vigithangal.
    6.pallikondapuram
    7.mithavai.—nangil
    8.devans-lakshmi kadaksham.
    918th atchakodu.
    10.vittal raos —pokkidam.

  11. விஷ்ணுபுரம் (புரிவது கஷ்டம் என்கிறார்கள்)
    தண்ணீர் (அசோகமித்திரன்)
    யாமம் (எஸ்.ரா.)
    தலைகீழ விகிதங்கள் (நாஞ்சில் நாடன்)
    இந்து ஞான மரபில் ஆறு தரிசினங்கள் (ஜெ.மோ – படித்துக் கொண்டிருக்கிறேன்)
    அசோகமித்திரன் கட்டுரைகள் (கிழக்குப் பதிப்பகம் என்ற நினைவு)
    பூமணியின் வெக்கை (உங்கள் விமர்சனம் பார்த்து)
    இ.பா. வின் குருதிப் புனல் (உங்கள் விமர்சனம் பார்த்து)
    Grand Design (Stephen Hawking and Leonard Mlodinow)
    The Drunkard’s Walk (Leonard Mlodinow)
    போனஸ்:
    1 . காவல் கோட்டம் (குறிப்பாக ஜெமோ மற்றும் எஸ்ரா வின் இருவேறு விமர்சனங்கள்)
    ௨. உடையார் (நம்ம பாலகுமாரனின் – ஒரு காலத்தில் விரட்டி விரட்டி படித்த கதாசிரியர். அவருடைய “பச்சை வயல் மனது” விமர்சனம் போடுவீர்களா?)

  12. பாஸ்கர், // விஷ்ணுபுரம் (புரிவது கஷ்டம் என்கிறார்கள்), தண்ணீர் (அசோகமித்திரன்) // அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை. பெரிய புத்தகம் என்பது ஒன்றுதான் பிரச்சினை (எனக்கு)… தண்ணீர் அருமையான புத்தகம்.

    ராதாகிருஷ்ணன், விஜயன், ராஜ் சந்திரா, ரமணன் மற்றும் நடனசபாபதி, உங்கள் லிஸ்ட்களில் சில படித்திருக்கிறேன், சில இல்லை. எங்கேயாவது இந்த புத்தகங்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா?
    விருபா, நல்ல சுட்டி, நன்றி!

  13. புனைகதைகள் (நாவல், சிறுகதை) தவிர வேறு எதுவும் படிக்க மாட்டீங்களா – வரலாறு, சமூகவியல், கவிதைகள், பழைய இலக்கியம், கட்டுரைகள் – இந்த மாதிரி?

    just curious.

    • எல்லாம் ஒரு சீசன்தான் ஜடாயு! இப்போதைக்கு தமிழில் புனைகதைகளையே அதிகம் படிக்கிறேன், ஆங்கிலத்தில் non-fiction .

  14. வீர பாண்டியன் மனைவிதான் தமிழில் வந்திருக்கும் ஒரே பின் நவீனத்துவ நாவல்[!]என்று சாரு பாராட்டி இருந்தார்.சீரியசாய்ச் சொன்னாரா அவர் எப்போதும் இருக்கும் அதி தீவிர மன நிலையில் சொன்னாரா தெரியவில்லை

  15. படிக்க விரும்பும் நாவல்கள் பதிவுக்கு மறுமொழிக்கு நன்றி, போகன்!

  16. தலைகீழ் விகிதங்கள் தான் ”தலிகீழ் லிகிதங்கள்” அல்ல. இது சேரன்( ஆட்டோகிராப்இயக்குனர்) மற்றும் ரதி (சத்யர்ர்ஜுடன் ஒரு படத்தி நடித்தவர்) நடித்த “சொல்ல மறந்த கதை” என்ற தலைப்பில் படமாக வந்தது

  17. அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமயலறையும் காட்டில் சில மான்களும் நீங்கள் படிக்கவிரும்பும் புத்தகங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். ம்ற்றும் ஹெப்ஸிபா ஜேசுதாஸானின் புத்தம் வீடும் கூட படிக்கலாம்.

  18. படிக்க விரும்பி என் நூலகத்தில் அடுக்கி வைத்து , அதற்கான மனோநிலை வர நான் காத்ுருக்கும் சில நூல்களின் வரிசை இது…..
    1. துயில்- எஸ். ரா
    2. பொய் தேவு – கா. நா .சு
    3. உடையார்- பாலகுமாரன் (3rd part romba factuala irukurathunallanu nenaikaren)
    4. crime and punishment – fyodor dostovesky
    5. சாய்வு நாற்காலி- தோப்பில் முஹம்மெத் மீரான்
    6 காட்டில் ஒரு மான்- அம்பை
    7 கோவேறு கழுதைகள்- இமையம்
    8 தமிழ்நாடு- ஏ. கே, செட்டியார்
    9 பெண் மணம் -கி.ரா
    10 வாசவேசுவரம்- கிருத்திக்கா

    .

    • இனியா, நல்ல லிஸ்ட். பொய்த்தேவு மற்றும் காட்டில் ஒரு மான் படித்திருக்கிறேன், இரண்டும் நன்றாக இருக்கும்.

  19. I just love your blog RV! a place to discuss books sounds heaven, tamil books at that is even better :-) would aspire to contribute here one day (if allowed?!) DOnt know how to type in tamil here…tamizha englishla type pannaalum nalla irukkathu…

    here is my to read list

    - Amma vanthal ( Thija) – just finished moga mul what a magnum opus!
    -Vishnupuram
    - Kanthalur vasanthakumaran kathai
    - JJ sila kurippugal (Hv just started it!)
    - Oru puliyamarathin kathai
    - Zero degree (I get a feeling english translation is a better option!)
    - Soodiya poo soodarka (its like ppl oscar movies getting a lift in colelctions after nominations, award kodutha padikkanum!!)
    - Vasanthi’s short stories.
    - All of manushyaputhran shortstories!
    - Esraas mahabaaratham based book (forgetting the name – upa pandavam?)

    • ஐஸ்வர்யா, உங்களுக்கு இந்த தளம் பிடித்திருப்பது ரொம்ப சந்தோசம். தாராளமாக ஜோதியில் ஐக்கியம் ஆகி எழுதுங்கள். (ஆனால் நான்தான் எடிட்டர். :-) )
      எஸ்.ரா.வின் புத்தகம் உபபாண்டவம்தான்.
      கா. வசந்தகுமாரன் கதை படு சுமாராகத்தான் இருக்கும். மற்றவை எல்லாம் படிக்க வேண்டியவையே.

  20. நன்றி RV sir….

    @Aishwarya
    Kanthalur vasanthakumaran kathai is like a historical ganesh vasanth story….

    I like “Ratham ore Niram ” by Sujatha….
    Good work of fiction…..

  21. Oops, I menat manushyaputhran kavithaigal!
    As for Kanthaloor vasanthakumaran kathai, just want to read anything remotely related to cholas (its the ponniyin selvan fixation), also when it came in kumudam (dad wouldnt buy it for fear of corrupting his kids :-) ) me & my bro had been wanting to read it badly

    Rv sir, pls give us your email id, would like to send you my review of mogamul (in tamil, ofcourse – hail gmail!)

  22. நான் படிக்க விரும்பும் டாப் நாவல்கள்,

    1. விஷ்ணுபுரம் – இரண்டு அத்தியாயம் வரை வந்துள்ளேன்
    2. யாமம்
    3. மானுடம் வெல்லும் – முதல் முறை பாதி படித்து பிடிக்க வில்லை என விட்டு விட்டேன்
    4. பொய்த்தேவு
    5. தலைமுறைகள்
    6.கொற்றவை
    7. பிறப்பு
    8. பிராந்து
    …………………..
    பல நேரங்களில் பல மனிதர்களை சீக்கிரம் படித்து விடுங்கள்.. அட்டகாசாமான கட்டுரை தொகுப்பு :)

  23. can I have a link to download Verrapandiyam Manaivi in Tamil?

  24. ஆர். வி

    ஆழிஞூழ் உலகு, புயலிலே ஒரு தோணி, தலைகீழ் விகிதங்கள் மற்றும் பள்ளிகொண்டபுரம் படித்திருக்கிறேன். நாஞ்சில் நாடன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். ஆனால் த.கீ.வி எனக்கு சுமாராகவே தோணியது. மற்ற மூன்று புத்தகங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியவை. ஆ.ஞூ.உ ம், பு.ஒ.தோணியும் மிக முக்கியமான புத்தகங்கள். கொற்றவையை படிக்க பயந்து கொண்டு உங்களிடம் கொடுத்து வைத்துருக்கிறேன். :)

    பாரதி மணியின் ப. நே.ப.ம எனக்கு ரொம்ப பிடித்தது. ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங், அனில் தார்க்கர் எல்லாம் எழுதுவதை போல ஒரு டயரி குறிப்பு. அவர் புத்தகத்தை போலவே அவரும் மிக சுவாரசியமான மனிதர். இந்த புத்தகத்தை படித்தவுடன் சுஜாதா எழுதிய நிலம் சிறுகதைதான் ஞாபகம் வந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பேரும் டெல்லியில் இருந்ததால் யார் கண்டார்? பாரதி மணி தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷனோ என்னவோ?

    காவல் கோட்டம் என் லிஸ்டிலும் உள்ளது. உடையார் ஆரம்பிச்சு முடியலடா சாமின்னு நிறுத்தியிருக்கிறேன். இன்னொரு முறை முயற்சிக்கிறேன்.

    மத்த புத்தகங்கள் எதாவது உங்களிடம் உள்ளதா?

  25. >>இந்த புத்தகத்தை படித்தவுடன் சுஜாதா எழுதிய நிலம் சிறுகதைதான் ஞாபகம் வந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பேரும் டெல்லியில் இருந்ததால் யார் கண்டார்? பாரதி மணி தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷனோ என்னவோ?

    ‘நிலம்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 18-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 50 கதைகள்)

    ‘நிலம்’ கதை சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொனியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மீகக் கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்மப் பிரயத்தனங்கள் தான் மீதிக் கதை.

    ‘நிலம்‘ சிறுகதை பற்றி பாரதி மணி கூறுகிறார்….

    அவரிடமிருந்து நான் பெற்ற ஒரே பாராட்டுவார்த்தை: பஞ்சபூதங்களைப்பற்றி ’நிலம், நீர், நெருப்பு…‘ வரிசையில் சிறுகதைகள் எழுதினார். அதில் ’நிலம்‘ சிறுகதை தில்லியில் ஒரு ஆஸ்திக சமாஜத்துக்கு DDA மூலம் அலாட் செய்த நிலம் கந்தா நாலா (கூவம் மாதிரி சாக்கடை) பக்கத்தில் எருமைமாடுகளுக்கிடையே இருக்கும். பூமிபூஜைக்கு நாள் குறித்தபின் Liaison Officer ஆன கதாநாயகன் படித்த வித்தை பதினெட்டும் செய்து (இதில் Call Girl-ம் அடக்கம்) DDAஅதிகாரிகளை மடக்கி மயக்கி, வேறு நல்ல இடத்தில் நிலம் அலாட் பண்ண வைப்பான். பூமிபூஜையன்று யாரோ மைக்கில் ’பகவான் ஸர்வவியாபி! அவருக்கு கிடைத்த இடம் பிடிக்காமல், அவரே மாத்தினுட்டார்.

    பகவான் Omnipresent இல்லியோ’ என்று சொல்வதில் கதை முடியும். பாலு மகேந்திரா எடுத்த ’கதை நேர‘ த்தில் இதுவும் ஒன்று. பிறகு சுஜாதாவை சந்தித்தபோது, ‘மணி, இந்தக்கதைக்கு, You are my inspriration‘ என்று சொன்னார். That is the best compliment I got from Sujatha!

  26. சௌம்யா, நான் வீரபாண்டியன் மனைவி ஆன்லைனில் கிடைக்குமா தெரியாது. ஆனால் கோடம்பாக்கம் பிரேமா பிரசுரத்தில் கிடைக்கிறது.

    அருணா, வீரபாண்டியன் மனைவி வாங்கினேன். ஆனால் அது பிரமாதமாக இருக்கும் என்ற நம்பிக்கை முதல் பத்து பக்கத்திலேயே போய்விட்டது. காவல் கோட்டம் நீங்கள் வாங்கி இருந்தால் நான் வாங்க வேண்டாம். அதனால் சொல்லுங்கள். உடையார், பள்ளிகொண்டபுரம், பல நேரங்களில் பல மனிதர்கள் உங்களிடம் இருக்கிறது. சுண்ணாம்பு கேட்ட இசக்கி – ராஜனின் புத்தகம் – என்னிடம்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். திகம்பர சாமியார், சி.ஐ.டி. சந்துரு எல்லாம் சும்மா curiosity-தான். டணாய்க்கன் கோட்டை, வாசவேச்வரம், கோவை அய்யாமுத்து கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை.

    விவரங்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s