படிக்க விரும்புபவை – கோவை அய்யாமுத்துவின் நினைவுகள்

unmai (april 16-30) pages.pmdசட்டநாதக் கரையாளர் பற்றி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவரைப் போலவே அவ்வளவாகத் தெரியாத இன்னொரு மூன்றாம் நிலை தலைவர் – தொண்டர் என்றே வைத்துக் கொள்ளலாம் – கோவை அய்யாமுத்து. என்னை fascinate செய்யும் ஆளுமைகளில் ஒருவர். காந்தி, ராஜாஜி, ஈ.வெ.ரா. ஆகியோரோடு நெருக்கமாகப் பணியாற்றி இருக்கிறார்.

அய்யாமுத்து சில memoirs-களை எழுதி இருக்கிறார். “நான் கண்ட பெரியார்“, “ராஜாஜி எனது தந்தை“, “எனது நினைவுகள்” புத்தகங்களைப் படிக்க ஆவலாக இருக்கிறது. சென்ற ஆண்டு எனது நினைவுகள் புத்தகத்தை விடியல் பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறாம். பார்க்க வேண்டும்.

அவரைப் பற்றி இணையத்தில் அடிக்கடி குறிப்பிடுபவர் கே.ஆர். அதியமான். அவருக்கு ஒரு ஜே!

Gandhi1காந்தியைப் பற்றி சொல்கிறார்:

காந்தியுடன் நெருங்கிப் பழகிய யாரும் அவரால் இன்பமுற்றதில்லை. துயரக்கண்ணீர் சிந்தியவர் பலர். அன்னை கஸ்தூரிபாவை தென்னாப்பிரிக்காவில், ஒருநாள் இரவு, கதவைத் திறந்து, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காந்திதானே அந்த மகான்! மகாத்மாக்களுடன் சுவர்க்கத்தில் வசிப்பது இன்பமாயிருக்கலாம். பூலோகத்தில் அவர்களுடன் வசிப்பது துனபமென்று கூறி மகாதேவ தேசாய் மனமுருகிக் கண்ணீர் வடித்த காட்சியை நான் பார்க்கவில்லையா?

மனுபென் காந்தி குளிக்கும்போது உடல் தேய்க்கப் பயன்படுத்திய கல்லை மறந்துவிட்டு வந்தார் என்று பல மைல் நடந்து அதைக் கொண்டு வரச் சொன்னாராம். கல்லுக்கா நம் நாட்டில் பஞ்சம்? இந்த மனிதர் காந்தி என்னதான் மாயமந்திரம் செய்தாரோ குறைப்படுவர்கள் கூட அவரை விட்டு நீங்குவதில்லை…

அய்யாமுத்து ஆற்றிய சில சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக – சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் – கிடைத்தது. கேட்க நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

கந்துகூரி பிரகாசம் முதல்வராக இருந்தபோது கதரை பரப்ப மூன்று கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். அய்யாமுத்து அந்தத் திட்டத்தை ‘சர்க்காரின் கதர் திட்டம் வெற்றி பெறுமா‘ என்ற பிரசுரத்தில் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார். நல்ல முறையில் தன் வாதங்களை முன்வைக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

1 thoughts on “படிக்க விரும்புபவை – கோவை அய்யாமுத்துவின் நினைவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.