Skip to content

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

by மேல் செப்ரெம்பர் 8, 2010

2017-இலாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும்.

பரிந்துரைகள் (2017):

 • எம்மா டோனக்யூ எழுதிய Room
 • டோரதி சேயர்ஸ் எழுதிய Unnatural Death
 • ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ்:
  1. Asterix and the Goths
  2. Asterix the Gladiator
  3. Asterix and the Banquet
  4. Asterix the Legionary
  5. Asterix and the Chieftain’s Shield
  6. Asterix and the Olympic Games
  7. Asterix and the Cauldron
  8. Asterix and the Roman Agent
  9. Asterix and the Laurel Wreath
  10. Asterix and the Soothsayer
  11. Obelix and Co.
  12. Asterix and the Golden Sickle
  13. Asterix and Cleopatra
  14. Asterix and the Big Fight
  15. Asterix in Britain
  16. Mansions of the Gods
  17. Asterix and the Caesar’s Gift
  18. Asterix and the Great Crossing
  19. Asterix in Belgium
  20. Asterix and the Great Divide
  21. Asterix and the Black Gold
 • க.நா.சு.வின் குறுநாவல் – நளினி
 • பெர்னார்ட் கார்ன்வெல்லின் வரலாற்று நாவல் – Agincourt
 • ஞானக்கூத்தன் கவிதை – பவழமல்லி
 • ஞானக்கூத்தன் கவிதை – காலவழுவமைதி
 • ஞானக்கூத்தன் கவிதை – என்ன மாதிரி
 • ஞானக்கூத்தன் கவிதை – பார்த்தல்

2016-இல் நான் படித்தவற்றில் பரிந்துரைப்பவை இந்த சுட்டியில். இந்த வருஷம் எத்தனை தேறுகிறது என்று பார்ப்போம்.


நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.

ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!

ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.

எங்கள் பிற தளங்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

Advertisements
34 பின்னூட்டங்கள்
 1. ராஜன் permalink

  அற்புதம் கடைசியாக நம் ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள இடமில்லாத ஒரு ப்ளாக் :)) அவசியம் தேவையான ஒரு தனி ப்ளாகே. முக்கியமாக ஆங்கில ஆசிரியர்களையும், தமிழின் அவ்வளவாக அறிமுகம் ஆகியிருக்காத எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யுங்கள். நீங்கள் அறிமுகம் செய்த பின் நான் ஜான் லீக்காரின் ரசிகன் ஆகி விட்டேன். அதைப் போல நமக்கு அறிமுகமாயிராத எத்தனையோ அற்புதமான எழுத்தாளர்கள் இருப்பார்கள் தொடர்ந்து அறிமுகம் கிட்டினால் தேர்ந்தெடுத்துப் படிக்க உதவியாக இருக்கும். கிண்டிலும், ஐ பேடும், வந்த பின் படிக்க ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சைபர் வெளியில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் எந்த ஆசிரியரை எந்த புத்தகத்தை எப்படி அணுகுவது என்ற அறிமுகம் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது. அப்படியே ஒரு ஆசிரியர் பிரபலமாக இருந்தாலும் அவரது எல்லா படைப்புக்களும் படிக்குமாறு இருக்காது. ஒரு டாவின்சி கோட் படித்து விட்டு தைரியமாக ஒரு டிஜிடல் ஃபோர்ட்ரஸ் பக்கம் போய் விட முடியாது ஒரு எலிஃபண்ட் சாங்கை நம்பி துணிந்து கோல்ட் மைன் என்று தாவி விட முடியாது உரிய அறிமுகம் முக்கியமாகத் தேவை.

  நல்ல ஆங்கில நாவல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்தால் அது பெரிய சேவையாகவே இருக்கும் நாளைக்கு ஒரு புத்தகமாகவே கொண்டு வரலாம். தொடருங்கள். நானும் நேரம் கிடைக்கும் பொழுது கலந்து கொள்கிறேன்

  அன்புடன்
  ராஜன்

  • ராஜன், ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றியும் எழுதத்தான் எண்ணம். பார்ப்போம். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!

 2. ராஜன் permalink

  ஆர் வி இந்த சிலிக்கான் ஷெல்ஃபுக்கு கவர் பேஜாக/படமாக உங்கள் வீட்டின் பிருமாண்டமான புத்தக அலமாரியே பொருத்தமாக இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டே நீங்களும், பக்ஸும், ஜெயமோகனும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் வழக்கம் போலவே காமிராவின் பின்னால் நிற்கிறேன் 🙂 இந்தப் படம் சிலிக்கான் ஷெல்ஃபிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  http://picasaweb.google.com/jemophotos2/JeMoFremontMeeting#5380838655733585698

  அன்புடன்
  ராஜன்

 3. நிறைய நண்பர்கள் இங்கு கிடைக்க இருக்கின்றார்கள். புரியவில்லையா.,

  புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள் அதைச் சொன்னேன்.

 4. Bags permalink

  RV

  இதுவரை 618 ஹிட்டுகள் வாங்கி விட்டது. அடிக்கடி வந்து ஹிடின் எண்ணிக்கையை உயர்த்திவிட்டாவது போகிறேன். 🙂

  கலக்கிட்ட போ.

  பக்ஸ்

 5. பக்ஸ், புரிய நேரம் ஆனது. உன்னை அட்மின் ஆக்க மறந்துவிட்டேன். ஆனால் நீ ஹிட் பற்றி எழுதியதைப் பார்த்ததும் நம்ம ஹிட்டை நாமே குறைத்துக் கொள்ள வேண்டுமா என்று தோன்றுகிறது. 😉

 6. Bags permalink

  நீ என்னை அட்மின் ஆக்காவிட்டாலும் அதையும் மதிக்கத்தான் போகிறேன். 🙂

  என்ன நினைத்து எழுதினேன் என்பது சரியாக நினைவு இல்லை. ஆனால் நான் அதை நினைத்து என் கமெண்டை எழுதவில்லை என நினைக்கிறேன். காண்டிரிப்யூட் பண்ணத்தான் முடியவில்லை. அட்லீஸ்ட் வந்தாவது பார்த்துவிட்டு போகிறேன் என்ற அர்த்தத்தில் தான் எழுதினேன்.

 7. V.Ganesh permalink

  Superb blog. All the best.

  ஜெயமோஹனுக்கு நன்றி. அவருக்கே தளத்தில் நன்றி கூரலாம். ஆனால் அவர் எங்களைப் போன்ற படிப்பறிவில்லாதவர்களை பின்னூட்டம் போட அனுமதி மறுத்து விட்டார்.

 8. அருமையான முயற்சி ஆர்.வி.. ராஜன் சொன்னது போல ஆங்கிலப் புத்தகங்களையும் அறிமுகம் செய்யுங்கள்..

  உங்களின் சி.நே.சி.ம அலசலை இப்போது தான் படிக்கிறேன். நன்றாக இருந்தது. ஜெ.மோ சொன்னது போன்று நானும் அந்த நாவலை அவ்வளவு ஆழமாக ஊன்றிப் படித்திருக்கவில்லை – வாரப் பத்திரிகையில் தொடராக வந்து பைண்ட் செய்த புத்தக வடிவில் படித்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று இப்போது யோசிக்கிறேன்.. அந்த வடிவமே ஒருவித “பரப்பியல்” தன்மையைக் கொடுத்து விடுகிறது!

 9. அருணா permalink

  ஆ. வி

  நல்ல பல புத்தகங்களையும் படங்களையும் அறிமுகபடுத்த என் வாழ்த்துக்கள். கடந்த சில மாதஙளாக netflixல் பல நல்ல இந்தி, ஸ்பானிஷ் மற்றும் பிரென்ச் படங்கள் பார்க்க கிடைத்தது. நேரம் அனுமதித்தால் நாம் பேசலாம். நீங்கள் உலக சினிமாவையும் உங்கள் தள வாசகர்களுக்கு கொண்டு செல்லலாம். உங்களின் இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • அருணா/கணேஷ், வாழ்த்துகளுக்கு நன்றி!

   ஜடாயு, ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றியும் எழுதத்தான் உத்தேசம். பார்ப்போம்.

   அருணா, வசமா மாட்டிக்கிட்டீங்க! நீங்களே எழுதுங்கன்னு நானும் பக்சும் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவோம்!

 10. அருணா permalink

  ஆர். வி

  வேலை, வீடு என்ற சுழற்ச்சியில் மாட்டி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மானுட சமுதாயத்தின் ஒரு துளி பிரதிநிதியான என்னால் இதற்கு நடுவில் ஒரே நேரத்தில் Slate, Washington Post, Times, Time, Jeyamohan Blog, Solvanam, Uyirmai, குறைந்தது 4 நல்ல புத்தகங்கள் மற்றும் 4-5 படங்கள் மட்டுமே ஒரு மாதத்தில் உருப்படியாக படிக்க/ பார்க்க முடிகிறது. எழுதுவதை உங்களுக்கே விட உத்தேசம். 🙂

  • அருணா, இவ்வளவு சுலபமாக தப்பித்துக்கொள்ள முடியாது!

 11. ஜெயமோகன் தனது தளத்தில் இந்த தளத்தைப் பற்றி எழுதி இருப்பது நீகள் சந்தோஷப் படக் கூடிய விஷயம் தான். மேலும் இது பலருக்கும் சென்று அடையுமே.

  வாழ்த்துக்கள்

 12. ரொம்ப நாளா புத்தகங்களுக்காக பிளாக் தொடங்கும் நினைப்பு எனக்கு இருந்து வந்தது. இனி உங்கள் வலைப்பதிவுக்கு வந்தால் போதும்.
  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • நன்றி, அப்பாத்துரை! ஆனால் நீங்கள் எழுதக் கூடாது என்றில்லையே!

 13. சொல்றது சுலபம்; செய்யுறது சிரமம்.
  எனக்குச் சொல்ல வரும் 🙂

 14. eshwarg permalink

  அற்புதமான முயற்சி, இன்றுதான் இத்தளத்தைப்பார்த்தேன், உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள், புதுமையை புகுத்துவது என்றுமே நல்லது, அதுவும் அறிவுப்பசியை வளர்ப்பது நல்ல செயல். வாழ்த்துக்கள். நாம் படித்த புத்தகத்தைப்பற்றியும் எழுதலாம இத்தளத்தில்? உறுதிப்படுத்தவும்.நன்றி

 15. raja permalink

  அண்ணே புத்தக வாசிப்பா ஊக்குவிக்குற மாதிரிதான் எழுதுறீங்க.ஆனா புத்தகத்தின் இணைய பதிப்ப போட்டுடுறீங்க.அனைவரும் புத்தகம் வாங்கி படிக்க சொல்லலாமே.Piracy ஐ ஏன் ஊக்குவிக்கனும்

 16. அன்புள்ள கோபால், உங்கள் மறுமொழியை எப்படியோ மிஸ் செய்துவிட்டேன். தாராளமாக எழுதுங்கள், ஆனால் நான் இங்கே கொஞ்சம் எடிட்டராக இருந்தால் கோபித்துக்கொள்ளாதீர்கள். 🙂

  ராஜா, புத்தகங்களை வாங்கிப் படிப்பதுதான் நியாயமான செயல் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் செயல்படுத்த முடிவதில்லை. ஓசி வாங்கிப் பழக்கமாகிவிட்டது…

 17. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100மார்க். நன்றி!

 18. மாற்றங்கள் விரும்பும் தலைமுறைக்கு மிக்க உறுதுணையாக இந்த தளம் இருக்கும்.

  என்னுடைய தளத்திற்கு வந்து பாருங்கள்.

  http://mahaukran.wordpress.com/

  பேஸ்புக் (முகநூல் ) பக்கம்

  https://www.facebook.com/MakaUkran

 19. I am a voracious reader of siliconshelf blog. i need your help to find best of self improvement books. Hope you will help and it will be helpful to many.

  • வடிவேலு, என்றாவது self improvement புத்தகங்களைப் பற்றியும் எழுதுகிறேன். பொதுவாக புனைவுகளே எனக்கு சுய முன்னேற்றத்துக்கான உந்துதலை நிறைய அளிக்கின்றன. Atlas Shrugged -இல் ஆரம்பித்து சமீபத்திய அறம் சீரிஸ் சிறுகதைகள் வரை.

 20. ramagurunathan permalink

  லெனின் சொல்லியிருப்பதில் உண்மை. நமது வரிப்பணத்தை வைத்து நடத்தும் 10 கோடிக்கான நாடகமே சினிமா நூற்றாண்டுவிழா

 21. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

 22. யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
  http://wp.me/pTOfc-bj

 23. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

 24. உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. நேரம் இருக்கும்போது வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_11.html

 25. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.News in tamil

 26. படைப்பாளியின் பங்கு முப்பது சதவிகிதம் படிப்பவன் பங்கு மீதி என்று சொல்வர்கள். எடைபோடுவது விமர்சகர் பங்கு. அனுபவிப்பது வாசகன் நோக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: