என் References

வாசிப்பு விஷயத்தில், குறிப்பாக தமிழ் வாசிப்புக்கு, சில சுட்டிகளை நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறேன். இவற்றை என் references என்று சொல்லலாம். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட் – ஜெயமோகன் நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய விமர்சகர். வாசிப்பு அனுபவத்தைப் பற்றி, மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப்பட்ட கட்டுரைகள், பதிவுகள் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால் கூட குறைவுதான். அந்த வகையில் இது முக்கியமான பதிவு. ஒரு சீரியஸ் தமிழ் எழுத்தாளர் “வணிக எழுத்தை” பொருட்படுத்தி எழுதியதை நான் இங்கேதான் முதன் முதலில் பார்த்தேன். (இன்னமும் அது அபூர்வமே. இப்படி எழுதி இருக்கும் ஜெயமோகனுக்கே கூட “வணிக எழுத்து” என்றால் அதில் இலக்கியம் இருக்க முடியாது என்ற இளக்காரம் அவ்வப்போது தெரியும்.)

இந்த லிஸ்ட் கொஞ்சம் பழையதுதான், போட்டு பத்து வருஷங்கள் இருக்கும். அது ஒன்றுதான் இந்த லிஸ்டின் குறை. அதை அப்டேட் செய்ய வேண்டும் என்று ஜெயமோகனிடம் கேட்டிருந்தேன், அவருக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்குமோ தெரியாது.

ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் லிஸ்ட் – கொஞ்சம் பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகளுக்கு மேல் இந்த லிஸ்டில் இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட் – எஸ்.ரா.வுக்கு அறிமுகம் தேவையில்லை. 🙂

எஸ்.ரா.வின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் லிஸ்ட்

அழியாசுடர்கள் தளம் – இப்போதெல்லாம் ஒரு சிறுகதையைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அது இங்கே பதிக்கப்பட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்கிறேன். இந்த தளத்தை நடத்தும் ராம் தனக்கு பிடித்த சிறுகதைகளை எல்லாம் இங்கே பதித்துக்கொண்டிருக்கிறார்.

இன்னும் ஒரு reference – பாவண்ணனின் எனக்கு பிடித்த சிறுகதைகள் சீரிஸ் தொகுப்பு

தொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்டிக்கி பதிவுகள்

யூத்ஃபுல் விகடனில் “ஏன் படிக்கிறேன்”

எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. யூத்ஃபுல் விகடனில் குட் ப்ளாக்ஸ்-இல் ஒன்றாக இந்த பதிவை சேர்த்திருக்கிறார்கள். ஆரம்பித்து இரண்டே நாளில், நூறு ஹிட் கூட வராத புது ப்ளாகையும் பார்த்து அலசி தேர்ந்தெடுப்பது பெரிய விஷயம். அவர்களுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: வாசிப்பு அனுபவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
யூத்ஃபுல் விகடன்
ஏன் படிக்கிறேன்? – ஆர்வியின் பதிவு
ஏன் படிக்கிறேன்? – பாஸ்கர், பாஸ்கரின் பதிவு பற்றி நான்

பாஸ்கர் ஏன் படிக்கிறார்?

என் பதிவைப் பார்த்துவிட்டு பாஸ்கரும் தான் ஏன் படிக்கிறேன் என்று ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார். அதில் கவித்துவமான ஒரு வரி – // புத்தகங்கள், அன்னியர்களை நம்மவர்கள் ஆக்குகிறது. // மிகவும் சரி. புத்தகங்கள் கடலில் மீன் பிடிக்கும் கிழவனையும் திமிங்கிலத்தை துரத்தும் அஹாபையும் தண்ணீரைத் தலையில் கொட்டி நீ புனிதமாயிட்டே என்று சொல்லும் அம்மாவையும் அரசு தரும் மானியத்தை நம்பி கிணறு வெட்ட கடன் வாங்கி நிலத்தை இழக்கும் சம்சாரியையும் தனக்கு விருப்பமான கிளி சின்னத்தை விட்டுவிட்டு பூனை சின்னத்தில் ஓட்டுப்போடும் மருமகளையும் கணக்கு தலைகீழ் பாடமாக இருக்கும் ராவுத்தரையும் கட்சியிலிருந்து துரத்தப்படும் கேகேஎம்மையும் துரத்தும் அருணாசலத்தையும் நம்மவர் ஆக்குகின்றன. அடுத்தவரின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள புரிந்து கொள்ள பாஸ்கர் சொல்வது போல நம் மனதின் கருணை ஊற்றுகள் திறந்து கொள்ளத்தான் செய்யும்!

இந்தப் பதிவை படிக்கும் நீங்களும் உங்கள் காரணங்களை சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு அனுபவங்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
ஏன் படிக்கிறேன்? – ஆர்வி
யூத்ஃபுல் விகடனில் “ஏன் படிக்கிறேன்” பதிவு குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
ஏன் படிக்கிறேன்? – பாஸ்கர்