ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரோ நாம்

1982 வாக்கில் மீனாட்சிபுரம் என்ற ஒரு கிராமத்தில் பல தலித்கள் முஸ்லிமாக மதம் மாறினார்கள். அந்த பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல்.

ஜயஜய சங்கரவில் வரும் அதே ஆதிதான் நாயகன். அவர் வாழ்ந்த சேரியில் இன்று பலரும் மதம் மாறிவிட்டார்கள். அங்கேதான் அவர் தன் ஆசிரமத்தை எழுப்ப விரும்புகிறார். அவருக்கு உதவுபவர் ஒரு பணக்கார முஸ்லிம்.

அந்த முஸ்லிமின் மகன் ஒரு பிராமணப் பெண்ணை காதலிக்கிறான். இருவரும் உறவு கொள்கிறார்கள். விஷயம் வெளியே கசியும் முன் அந்த பெண் தன் வீட்டுக்கு திரும்பிவிடுகிறாள். அவனுக்கு மதத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனால் அவள் முஸ்லிமாக மாறினால் திருமணம் செய்துகொள்வது சுலபம் என்று அவளிடம் சொல்கிறான். நீ பேருக்கு மதம் மாறினால் போதும் என்று சொல்கிறான். ஆனால் அவள் இப்போது ஒரு ஹிந்துவும் முஸ்லிமும் மணந்துகொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறாள். ஆதியின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறாள்.

ஜெயகாந்தன் சொல்ல வந்தது தெளிவாக இல்லை. ஹிந்துவும் முஸ்லிமும் ஏன் மணம் செய்து கொள்ளக் கூடாது என்று அவர் பெரிதாக விவரிக்கவில்லை. சமூகம் பொதுவாக ஆட்சேபிக்கும் என்பதே போதும் என்கிற மாதிரி எழுதி இருக்கிறார். அக்னிப்ரவேசத்திலும், யுகசந்தியிலும் சமூகத்தை மாற்ற நினைத்தவர் இன்று எழுதப்படாத விதிகளுக்கு அடங்க வேண்டும், don’t rock the boat என்று சொல்லுகிறார்.

சுமாரான நாவல்தான். ஆனால் ஜயஜய சங்கரவின் sequel என்ற முறையில் சுவாரசியம் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்தாளர்கள்—>ஜெயகாந்தன் பக்கம், நாவல்கள்

தொடர்புடைய பக்கங்கள்:
ஜயஜய சங்கர
அழியாச்சுடர்கள் தளத்தில் யுகசந்தி சிறுகதை