Skip to content

மதனின் “வந்தார்கள் வென்றார்கள்”

by மேல் செப்ரெம்பர் 27, 2010

பாடப் புத்தகங்களுக்கு பதிலாக இதை எல்லாம் பள்ளிகளில் படிக்கலாம். எல்லாரும் வரலாற்றை விரும்பிப் படிப்பார்கள்! Enough said.

scribd தளத்தில் ebook ஆக கிடைக்கிறது.

பிற்சேர்க்கை: மனிதனுக்குள் ஒரு மிருகம் எல்லாம் வன்முறையை சென்சேஷனலைஸ் செய்யும் தண்டப் புத்தகம், ஓடிவிடுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

Advertisements
4 பின்னூட்டங்கள்
 1. ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.

  மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. ‘இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா?’ என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், ‘ஆர‌ம்பித்த‌ நேர‌ம் ச‌ரியில்லையோ’ என்று ஒரு க‌ண‌ம்கூட‌ அவ‌ர் த‌ய‌ங்க‌வில்லை. ‘இதுதான் ச‌ரியான‌ ச‌ம‌ய‌ம்… உண்மைக‌ளைச் சொல்வ‌த‌னால் ந‌ன்மைதான் ஏற்ப‌டும்… தொல்லைக‌ள் வ‌ருவ‌தில்லை’ என்ற‌ திட‌மான‌ ந‌ம்பிக்கையோடு எழுதினார்.

  ம‌த‌ன் மொக‌லாய‌ ச‌ரித்திர‌த்தைச் சொல்ல‌ச் சொல்ல‌, உண்மையில் ஒரு ம‌க‌த்தான‌ வெற்றியாக‌ தொட‌ர் அமைந்த‌து. எந்த‌க் க‌ள‌ங்க‌மும் அவ‌ர் எழுத்தில் இருக்க‌வில்லை. ஒவ்வொரு ம‌ன்ன‌ரையும் நேசித்து, ஒவ்வொரு நிக‌ழ்ச்சியையும் அவ‌ரே நேரில் இருந்து பார்த்த‌து போல‌ எழுதிய‌ பாங்கு அதிச‌ய‌மான‌து. வாச‌க‌ர்க‌ளும் ‘சொக்குப்பொடி’ போட்ட‌து போல‌ அவ‌ர் எழுத்துக்கு ம‌ய‌ங்கினார்க‌ள். ல‌ட்ச‌க்க‌ண‌க்கானோர் ப‌டித்தார்க‌ள், பிர‌மித்தார்க‌ள்.

  ம‌த‌னின் இணைய‌ற்ற‌ சாத‌னையான‌ இந்த‌த் தொட‌ரைப் புத்த‌க‌மாக‌ வெளியிட்ட‌போது வாச‌க‌ர்க‌ளிடையே ப‌ல‌த்த‌ வ‌ர‌வேற்பு கிடைத்த‌து.

  Like

 2. எனக்கு ரொம்பவே பிடித்த புத்தகம் .

  Like

 3. ஒரு முறை ஹாய் மதன் கேள்வி பதிலில் ஒரு வாசகர் ‘நீங்கள் ஏன் தமிழ் மன்னர்களை பற்றி அதிகமாக எழுதுவதில்லை’ என்று கேட்ட கேள்விக்கு தமிழ் மன்னர்களை பற்றி எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை. புலவர்கள் மிகைபடுத்தி பாடிய பாடல்கள் மட்டுமே உண்டு என்ற ரீதியில் பதில் அளித்திருந்தார்.

  அவர் சொல்வதில் ஓரளவு உண்மை இருந்தாலும் ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகத்தின் தகவல்களை விட அதிக தகவல்கள் தமிழ் மன்னர்கள் பற்றி உண்டு என்பது என் கருத்து. வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் தமிழ் மன்னர்கள் வரலாறு புறக்கணிப்படுகிறது என்ற கருத்து பரவலாகவே உண்டு. ஆனால் மதன் போன்றவர்களும் புறக்கணிப்பதை ஏற்க முடியாது.

  கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் ‘வந்தார்கள் வென்றார்கள்’ விட தரமான தமிழ் மன்னர்களை பற்றிய வரலாற்று புத்தகங்களை வழங்கிட முடியும்.

  மதன் போன்றவர்கள் எழுதிடும் போது மக்களிடம் அதன் ரீச் அதிகமாக இருக்கும். செய்வாரா மதன்

  Like

  • பலூன்காரன், எனக்கு தமிழ் மன்னர்களைப் பற்றி என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியாது. நீங்கள் சொன்னால் சரி…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: