ஒரு நாளைக்கு நூறு நூற்றைம்பது ஹிட்கள் வரும் இந்த தளத்துக்கு போன 24 மணி நேரத்தில் 2000 ஹிட்! அசந்து போய்விட்டேன். என்னடா, மிச்சம் இருக்கும் முடியையும் இன்னிக்கு பிச்சிக்க வச்சிட்டாங்களே, இந்த ப்ளாக் எப்படி திடீரென்று இவ்வளவு பாப்புலர் ஆனது என்று பார்த்தால் ஜெயமோகன் இந்த தளத்தை மெச்சி நாலு வார்த்தை எழுதி இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் எழுத ஊக்கம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: ப்ளாக் நிகழ்வுகள்
தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் தளத்தில் சிலிகான் ஷெல்ஃப் பற்றி
ஜெயமோகன் இரண்டு இணையத் தளங்களை சுட்டிக் கட்டியுள்ளார். ஒன்று உங்களுடையது. மற்றது ராமின் அழியாத சுவடுகள் தளம். அதில் ல.ச.ரா. வின் பாற்கடல் கதை முழுவதும் கொடுத்துள்ளார். அருமையான கதை. அந்த நடை சான்சே இல்லை. உங்கள் கருத்தையும் கூறுங்கள். நன்றி.
LikeLike
பாஸ்கர், அழியாசுடர்கள் தளத்தை நானும் reference-க்கு பயன்படுத்துகிறேன்…
LikeLike
நான் ஒரு தடவை ஜெமோ அவர்களின் கட்டுரை ஒன்றை, “நல்ல ஒரு பதிவு” என்றோ என்னவோ தலைப்பிட்டு சுட்டிக் காட்டி ஒரு பதிவு செய்திருந்தேன். தினம் முப்பது ஹிட் வாங்குகிற நான் அன்று இருநூறு ஹிட் வாங்கினேன். அதுவே அடுத்த மூன்று நாட்களுக்கும் தொடர்ந்தது.
என் நண்பர் ஒருவர் இதே மாதிரி இரண்டாயிரத்து ஐநூறு ஹிட்டுகள் வாங்கியதாக சொன்னார். ஜெமோ பெரிய ஆள்தான் 🙂
ஆமாம், யூத் விகடன் உங்கள் தளத்தைப் பரிந்துரை செய்தபோது எத்தனை ஹிட்கள் கிடைத்தன என்று சொன்னீர்களானால் இரண்டு பேரில் யார் இணையத்தில் பெரிய ஆள் என்று தெரிந்து விடும். அநேகமாக ஜெமோ விகடனைத் தோற்கடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
LikeLike
(நடராஜன்) பாஸ்கர், இதில் என்ன சந்தேகம், ஜெயமோகனின் பதிவுக்கு பிறகுதான் நிறைய ஹிட்கள்!
LikeLike
ஸார்
ஜெ மோ பெரிய ஆளு. அவருக்கு ரசிகர் மன்றமே உண்டு. கழிந்த் ஒரு ஆண்டு காலத்தில் பல் தேய்ப்பேனோ இல்ல்யோ அவர் எழுத்தை பார்த்து விடுவேன். எதிரியும் கிலாசிக்கும் ஒரு எழுத்து. ஆனால் நீங்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் இன்னும் நூறு வருடங்களில் அழியும் என்ர ஒரு ஆருடத்தை பொய்யாக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதே என் அவா.
கணேஷ்.
LikeLike
@கணேஷ்
அப்டியே ஷாக்காயிட்டேன்… நாங்க எல்லாரும் சேர்ந்து தமிழை நூறு வருஷத்துக்குள்ள அழிச்சிடுவோம்னு பயப்படுறீங்களா என்ன!
LikeLike
சார் நான் இல்ல இந்த விளையாட்டிற்கு. 🙂
LikeLike
24 மணி நேரத்தில் 2000 ஹிட்!
தொடரட்டும்@!!
LikeLike
ஜெகதீஸ்வரன், (நடராஜன்) பாஸ்கர், கணேஷ், வாழ்த்துக்களுக்கு நன்றி!
LikeLike