கிரி ஏன் படிக்கிறார்?

ஏன் படிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அப்புறம் பாஸ்கர். இப்போது கிரியும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார். அவர் வார்த்தைகளில்:

வாசிப்பு சில நேரங்களில் பொழுது போக்கு.
வாசிப்பு பல நேரங்களில் உற்ற தோழன்
வாசிப்பு சில நேரங்களில் ஏதோ ஒரு விஷயத்திற்கு ஏதேனும் விடை தருகிறது.
வாசிப்பு பல நேரங்களில் மனதிற்கு மருந்து.
வாசிப்பு எப்போதும் இங்கு பலருக்கு சுவாசிப்பு…

அவருக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
(ஆர்வி) ஏன் படிக்கிறேன்?
பாஸ்கர் ஏன் படிக்கிறார்?
கிரி ஏன் படிக்கிறார்?

பின்குறிப்பு: ஏம்பா பக்ஸ், நீ இன்னும் கோதாவில இறங்கலியா?

கன்னியாகுமரி

(இது ஒரு மீள் பதிவு. முன்பு கூட்டாஞ்சோறு தளத்தில் வெளியிடப்பட்டது)

ஜெயமோகனின் நாவல். படித்து நிறைய நாட்களாகிவிட்டன. நினைவிலிருந்தும் சில குறிப்புகளிலிருந்தும் (என் மூக்கு கண்ணாடியை எங்கேயோ தவற விட்டதால் கண்ணாடி இல்லாத உத்தேசத்துடனும்) எழுதுகிறேன். சொற்குற்றம், பொருள் குற்றம், கண் குற்றம் எல்லாவற்றையும் கண்டுக்காதீங்க.  கதையை முழுமையாக கொடுக்கக்கூடாது எனப்தற்க்காக ஒரு விதமாக சுருக்கியிருக்கிறேன்.

ரவி மடம்பூர் என்ற ஒரு சினிமா டைரகடரின் வாழக்கை. ஏகயாய ராஜகுமாரி என்ற ஒரு திரைப்படத்தை தவிர வேற் வெற்றிப் பட்ங்கள் தர முடியாமல் திண்றுகிறான். இவனுடைய பழைய கோழைத்தனமான் வாழ்க்கையை ம்றக்க முயலும் பொழுது மீண்டும் விமலா இவனுடைய வாழ்க்கையில் தோன்றுகிறாள். மனம் உறுதியான பெண்ணாக, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட டாக்டராய் விமலாவைப் பார்க்கும் பொழுது மிகவும் தாழ்வாக தன்னை உணர்கிறான்.  ஏற்கன்வே இன்னும் ஒரு வெற்றிப்படத்தை அளிக்க வேண்டுமென்றும், அப்படி இல்லாவிட்டால்  தான் அஸ்தமித்துவிடுவோம் என்று மன அழுத்தத்தில் இருக்கிறான். இந்நிலையில் தன்னிலிருந்து ஏற்கனவே விலகிவிட்டிருந்த விமலாவினால் ஏற்பட்ட  தாழ்வு மனப்பான்மை அவனை சித்தரவதை செய்கிறது. எந்த வித நியமங்களும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வந்திருந்து ரவி, எல்லாவற்றையும் முறையாக செய்யும் விமலாவை ஒரு வித போட்டி மனப்பான்மையுடன் அணுகுகிறான். இறுதியில் அவமானங்களுக்கிடையே த்விர்க்க முடியாததை சந்திக்கிறான்.

கதை ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. ஒரு இடத்தில் கனவு பற்றி விவரிக்கிறார் ஜெயமோகன். மிக துல்லியமான வர்ணனை. கனவு என்பது ஓரளவு ”பொது”ப்படத்தகூடிய அனுபவமே.  கனவு பற்றி, ”எனக்கு கனவு வந்தது, அதில் இப்படி நடந்தது” என்று ஒரு கோர்வையான கதை ஒன்றை பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அது அனேகமாக அப்படி நடந்திருக்க் முடியாது. சொல்பவர்கள் அதை சொல்லத் தெரியாமல் ஒரு கதையாக நம்மிடம் முன் வைக்கிறார்கள். அப்படி சொல்லுவதினால் ஏற்படும் சுவாரசியத்தை இழக்க விரும்பாத்தால் பல்ரும் கனவு என்பது ஒரு சினிமாவோ, நாடகமோ போன்ற ஒரு கதை என்ற பிரஞ்ஞையை வளர்த்துக் கொண்டு,  தத்தம் சொந்த அனுபவங்களையும் புறந்தள்ளி அலட்சியப்ப்டுத்துகிறோம். இவர் அந்த தொன்மத்தை உடைத்து எறிவதாக எனக்கு தோறுகிறது. கோர்வையற்ற பிமபங்களாலும், சம்பவங்களாலும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ச்மபந்தமே இல்லாமல் பாய்ந்து பாய்ந்து மாறும் நிலையற்ற நிலைகள் கொண்டதாகவும் நம் முன் வைக்கிறார். நன்றாக சிந்தித்துப் பார்த்தால் இப்படித்தான் நாம் காணும் கனவுகள் அமைந்திருப்பது நமக்கு புலப்ப்டும். ஜெயமோகனின் இம்மாதிரியான வர்ணனைகள் நமக்கு பல் பரப் பார்வைகளையும், சிந்தனைக் கிளர்ச்சியையும் அளிக்கிறது.

கதையோட்டத்தில் கி.ராஜநாரயணனின் கன்னிமை நாவலின் சிறப்பை பற்றி குறிப்பிடுகிறார். இந்தக் நூலையும் அவருக்கு சமர்ப்பணம் பண்ணியிருக்கிறார். கன்னிமை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும். ஜெயமோகன் சொல்லியிருக்கிறார் என்பதற்க்காகவாவது படித்துவிடுவேன்.:-)

ரவி காரகடர் வழியாக திரை உலகில் உள்ள சிலரின் விழுமங்களை வெளிப்ப்டுத்துகிறார் ஜெயமோகன். காலையில் எழுந்தால் குடி, மதியம் குடி, மாலை குடி, இரவு குடி – வாசிக்கும் நமக்கே வாந்தி, மஞ்சள் காமாலை எல்லாம் வந்த மாதிரி ஆகிவிடுகிறது. அய்யோ, அதுக்காக கதையில் வெறுப்பு அடைந்துவிடாதீர்கள் – அந்த அளவுக்கு எஃபெக்டீவாக வந்திருக்கிறது என்று சொல்ல வருகிறேன்.

ஜெயமோகன் இந்த கதையின் முக்கிய அம்சமாக தனி மனிதனின் அறத்தை எடுத்துக் கொள்கிறார். அதாவது இன்று இருக்கும் யுகத்தில் தனி மனிதன் அறமென்பது பிறருக்கு தீங்கு இல்லாதபடி எதையும் செய்து தனக்கு சாத்தியமான் உச்சத்தை அடைய முயற்ச்சிக்குமேயன்றி முன்ன்ர் போல் சமுதாய நல்த்தை முதலாக வைபதாக இல்லை. இந்த யுகத்திற்கு ஏற்ப  அத்தகைய தனி மனித  ஒழுக்கமே பரவியுள்ள்து. அதை தான் கன்னியாகுமரி சொல்ல முயல்கிறது என்கிறார்.

சுயம் மரணத்திற்கு பிறகும் உணரப்படுவதாக சொல்வது போல் எனக்குப் படுகிறது. என்னால் உடன்படமுடியவில்லை என்று சொல்வதைவிட, பாதுகாப்பாக, புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லிவிடுகிறேன். அவரிடம் கேட்டால் தெளிவாக்கிவிடுவார்.

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் போன்ற கடின நூல்களை எழுதிய பிறகு கன்னியாகுமரியை ஒரு லைட் நாவலாக எழுதியிருப்பதாக கூறுகிறார் ஜெயமோகன்.

தொடர்புள்ள பிற சுட்டிகள்

ஜெயமோகனின் வளைதளம்