Skip to content

ஸ்பானிஷ் மொழி சாண்டில்யன்: ஆர்டுரோ பெரஸ்-ரிவர்டே (காப்டன் அலாட்ரிஸ்ட் சீரிஸ்)

by மேல் ஒக்ரோபர் 22, 2010

ஆர்டுரோ பெரஸ்-ரிவர்டே என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் ஸ்பானிஷ் மொழியின் சாண்டில்யன்.

இவர் எழுதிய காப்டன் அலாட்ரிஸ்ட் சீரிஸ் சரித்திர நாவல்கள் புகழ் பெற்றவை. இவை அனைத்தும் ஸ்பெயினின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டபோது – பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் – நடப்பதாக எழுதப்பட்டவை. காப்டன் அலாட்ரிஸ்ட் ஒரு வாள்வீரன்+cynic. ஸ்பெயினில் அப்போது திறமையை விட அரசியல், பிறப்பு இவை எல்லாம் முக்கியமாக இருந்தது. அலாட்ரிஸ்ட் ஒரு ரவுடி மாதிரி. பணம் கொடுத்தால் யாருக்காகவும் சண்டை போடுவான். அவனை சண்டை போட சொல்பவர்கள் அன்றைய பெரிய மனிதர்கள். இன்றைய அரசியல் தலைவர்களுக்கும் ரவுடிகளுக்கும் உள்ள தொடர்பு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். அலாட்ரிஸ்டிடம் ஒரு டீனேஜர் இனிகோ வளர்கிறான் – நண்பனின் மகன். இந்த கதைகள் எல்லாம் அந்த டீனேஜரின் பார்வையில் எழுதப்பட்டவை.

இது வரை ஆறு நாவல்கள் வந்திருக்கின்றன. ஐந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆறாவதும் – Pirates of the Levantவிரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது வந்துவிட்டது. விக்கோ மார்ட்டன்சன் என்ற ஹாலிவுட் நட்சத்திரம் நடித்து திரைப்படமும் வந்திருக்கிறது.

Captain Alatriste: இங்கிலாந்தின் இளவரசன் சார்லஸ், மற்றும் அவர் நண்பன் ஸ்பெயினுக்கு incognito ஆக வருகிறார்கள். அவர்களை கொல்ல அலாட்ரிஸ்ட் மற்றும் மாலடெஸ்டா என்ற இன்னொரு வாள்வீரன்-ரவுடிக்கும் ஒரு பிஷப் சுபாரி தருகிறார். கடைசி நிமிஷத்தில் அலாட்ரிஸ்ட் இரக்கப்பட்டு சார்லசை காப்பாற்றுகிறான். மாலடெஸ்டா அலாட்ரிஸ்டின் பரம வைரியாக மாறி பல புத்தகங்களில் மீண்டும் மீண்டும் வருகிறான். சார்லஸ் ஸ்பெயினுக்கு போனது சரித்திர சம்பவம்.

Purity of Blood: இனிகோவின் பாட்டன் யாரோ யூதன் என்று சொல்லி அவனை Spanish Inquisition அமைப்பு எரிக்க உத்தரவிடுகிறது. அலாட்ரிஸ்ட் காப்பாற்றுகிறான். Inquisition பற்றி தெரியாதவர்களுக்கு நல்ல அறிமுகம்.

Sun Over Breda: ப்ரெடா என்ற கோட்டையை முற்றுகை இட்டு ஸ்பானியர்கள் வென்றதை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது. போர் காட்சிகள் நன்றாக வந்திருக்கும்.

King’s Gold: அப்போது ஸ்பெய்னின் பொருளாதாரமே தென் அமெரிக்காவிலிருந்து தங்கமும் வெள்ளியும் கொண்டு வரும் கப்பல்களை நம்பித்தான் இருந்தது. எல்லாம் அரசனுக்கு போக வேண்டியவை, ஆனால் அதில் எக்கச்சக்க ஊழல். ஸ்பெய்னின் அரசனே தனக்கு வர வேண்டிய தங்கத்தை கப்பலிலிருந்து திருடி வர அலாட்ரிஸ்டுக்கு ரகசிய ஆணை பிறப்பிக்கிறான். Treasure Fleet பற்றி நன்றாக விளக்கி இருப்பார்.

The Cavalier in the Yellow Doublet: போன நாவலில் அரசன் இட்ட பணியை நிறைவேற்றியதால் இப்போது காப்டனுக்கு கொஞ்சம் சவுகரியமான நிலை. ஒரு நாடக நடிகையோடு தொடர்பு ஏற்படுகிறது. திடீரென்று ராஜா அந்த பெண் மீது ஆசைப்படுகிறார், தள்ளிப் போ என்கிறார்கள். காப்டனுக்கு வீம்பு அதிகம், மறுக்கிறான். ராஜாவை கொலை செய்ய மாலடெஸ்டா தலைமையில் திட்டமிடும் ஒரு குழு இந்த பூசலை சாக்காக வைத்து காப்டன் மேல் கொலைப்பழியை போட நினைக்கிறது. கடைசியில் காப்டனும் இனிகோவும் ராஜாவை காப்பாற்றுவதோடு கதை முடிகிறது.

Pirates of the Levant:போன கதையில் ராஜாவையே காப்பாற்றினாலும் கொஞ்சம் பூசல் இருக்கிறது. அதனால் இப்போது அலாட்ரிஸ்டும் இனிகோவும் கடற்படையில் சேருகிறார்கள். மத்தியதரைக் கடல் பகுதி. எப்போதும் துருக்கி, ஆப்பிரிக்க முஸ்லிம்களோடு தகராறு இருக்கிறது. மீண்டும் மீண்டும் கடற்சண்டைகள். இனிகோ இப்போது 17 வயது இளைஞன். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இருப்பது போல அவனுக்கும் காப்டனுக்கும் நடுவில் கொஞ்சம் புகைந்துகொண்டே இருக்கிறது.

கதை என்று பார்த்தால் எதுவும் பிரமாதம் இல்லை. ஆனால் பின்புலம் எல்லாவற்றிலும் நன்றாக வந்திருக்கும். சில சமயம் சாகசக் கதை என்ற அளவில் வெற்றி, சில சமயம் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். மெதுவாகப் போகும் கதைகள். காரக்டர்கள் – அலாட்ரிஸ்ட், இனிகோ, இனிகோவின் காதலி ஏஞ்சலிகா, அன்றைய ஸ்பானிஷ் சமூகம் எல்லாம் வெளியாட்களுக்கும் ஓரளவு புரிகிறது. ஸ்பானிஷ் சமூகத்தைப் பற்றி நமக்கு ஓரளவு புரிய வைப்பதால் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக நாவல்கள்

Advertisements

From → World Fiction

2 பின்னூட்டங்கள்
  1. krishnamoorthy permalink

    ஸ்பானிஷ் சாண்டில்யனைப் படித்து ஸ்பானிஷ் சரித்திரம் தெரிந்து கொள்வது கிடக்கட்டும்! உள்ளூர் சாண்டில்யனைப் படித்து, உள்ளூர் சரித்திரத்தைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்தால் அது இன்னமும் உபயோகமாக இருக்கும்! கதைகள் கொஞ்சம் கற்பனையோடு சேர்த்து சுவாரசியத்திற்காக எழுதப்படுபவை என்றாலும், அவைகளிலும் கூடத் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கின்றன!

    Like

    • கிருஷ்ணமூர்த்தி, உபயோகம் என்பது அவரவர் கண்களில், இல்லையா?

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: