பொருளடக்கத்திற்கு தாவுக

நோயல் கவர்ட் – மூன்று நாடகங்கள்

by மேல் நவம்பர் 12, 2010

நோயல் கவர்ட் (Noel Coward) இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பிரபலமாக இருந்த நாடக எழுத்தாளர், நடிகர். அவருடைய சில நாடகங்களை சமீபத்தில் படித்தேன். ஒரு விதத்தில் இவர் கிரேசி மோகன் போல. கதை, கிதை என்றெல்லாம் எதுவும் கிடையாது. “Comedy of manners ” என்று சொல்வார்கள். அன்றைய சமூகத்தில் “witty conversation” என்று நினைக்கப்பட்டவற்றை நாடகமாக ஆக்குகிறார். ஆனால் ஒரு Importance of Being Earnest போல எல்லாம் வரவில்லை. படிப்பதை விட பார்க்க நன்றாக இருக்கலாம்.

அவருடைய நாடகங்களில் கீழே உள்ள மூன்றும் சிறந்தவை என்று கருதப்படுகின்றன.

1924 – ஹே ஃபீவர் (Hay Fever): இதை விவரிப்பது கஷ்டம். கணவன், மனைவி, பையன், பெண் நாலு பேரும் நாலு விருந்தாளிகளை வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாரும் hospitality , நாகரீகம் என்றெல்லாம் பார்ப்பவர்கள் இல்லை, தனக்கு தோன்றியதை, தனக்கு வேண்டியதை மட்டுமே செய்பவர்கள். வருபவர்கள் படும் அவஸ்தைதான் நாடகம்.

1930 – ப்ரைவேட் லைவ்ஸ் (Private Lives): விவாகரத்தான கணவன் மனைவி. இரண்டு பேருக்கும் மீண்டும் கல்யாணம் ஆகிறது. தேனிலவுக்காக இரண்டு ஜோடியும் ஒரு ஹோட்டலுக்கு, அதுவும் அடுத்தடுத்த ரூமுக்கு வருகிறது. பழைய கணவனும் மனைவியும் இணைந்து ஓடிவிடுகிறார்கள். மீண்டும் அவர்களுக்குள் சண்டை, தகராறு, மீண்டும் பிரியப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. அப்போது புது கணவனும் புது மனைவியும் அவர்களை தேடிப் பிடிக்கிறார்கள். அடுத்தது என்ன என்று விவாதம். மீண்டும் இவர்கள் ஓடிவிடுகிறார்கள். திரைப்படமாகவும் வந்தது.

1941 – ப்ளைத் ஸ்பிரிட் (Blithe Spirit): முதல் மனைவியின் ஆவி கணவனுக்கு மட்டும் தெரிகிறது. இரண்டாவது மனைவி முதலில் நம்ப மறுக்கிறாள். முதல் மனைவி இப்போது கணவனை கொன்று அவனையும் தன் உலகத்துக்கு வரவழைக்க விரும்புகிறாள். தவறுதலாக இரண்டாம் மனைவி அந்த “விபத்தில்” இறந்துவிடுகிறாள். இப்போது இரண்டு ஆவியும் அவனை படுத்துகிறது. படிக்கலாம், ஆனால் பார்க்க இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு முறை – ஒரு முறை ரெக்ஸ் ஹாரிசன் நடித்து, இன்னொரு முறை நோயல் கவர்டே நடித்து – படமாக வந்தது.

கவர்ட் படித்தே ஆக வேண்டிய அளவுக்கு முக்கியமான நாடகங்களை எழுதவில்லை. ஆனால் திறமையாக எழுதி இருக்கிறார். பாப்புலர் என்டர்டெய்ன்மென்ட் – ஜெயமோகன் பாஷையில் வணிக எழுத்து – என்று சொல்லலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: World Fiction

தொடர்புடைய சுட்டி:
நோயல் கவர்ட் – விக்கி குறிப்பு

From → World Fiction

5 பின்னூட்டங்கள்
 1. natbas permalink

  Brief Encounter- இதை விட்டு விட்டீர்களே! மறக்க முடியுமா?

  http://en.wikipedia.org/wiki/Brief_Encounter

  Like

  • natbas permalink

   “கவர்ட் படித்தே ஆக வேண்டிய அளவுக்கு முக்கியமான நாடகங்களை எழுதவில்லை”- அநியாயத்துக்கு கட்டம் கட்றீங்க சார் :((

   Like

   • உண்மை, Brief Encounter-தான் அவருடைய சிறந்த நாடகம். இல்லீங்க, ஏதோ கன்ஃப்யூஸ் ஆகுது. க்ரஹாம் கிரீனின் ஒரு புத்தகத்தை இதோடு கன்ஃப்யூஸ் செய்து கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.

    // அநியாயத்துக்கு கட்டம் கட்றீங்க சார் // அதுதாங்க methodology, மனதில் பட்டதை தயவு தாட்சண்யம் இல்லாமல் சொல்ல வேண்டும்.

    Like

Trackbacks & Pingbacks

 1. மேற்குலக நாடகங்கள் | சிலிகான் ஷெல்ஃப்
 2. அஞ்சலி: க்ரேசி மோகன் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: