காக்கா நரி கதை – இவர்கள் எழுதினால்

பத்திரிகையாளரும் உங்கள் ரசிகன் என்ற வலைப்பூவை நடத்துபவரும் ஆன ரவிப்ரகாஷ் எழுதுகிறார்:

காக்கா நரி கதையை இவர்கள் எழுதினால் எப்படி இருக்கும்?

சாண்டில்யன், இந்துமதி
புஷ்பா தங்கதுரை, சுஜாதா, கண்ணதாசன்

இன்றைய பிரபலங்களான ஜெயமோகன், பாலகுமாரன், சாரு நிவேதிதா, ரமணி சந்திரன், ராஜேஷ் குமார், எழுதினால் எப்படி இருக்கும்? உங்கள் கற்பனையை அவிழ்த்துவிடுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

ராஜேந்திர பிரசாதின் “காந்திஜியின் காலடியில்”

இது ஒரு மீள்பதிப்பு, சில திருத்தங்களுடன்.

ஜெயமோகன் படிக்க வேண்டிய வரலாற்று புத்தகங்கள் என்று சிபாரிசு செய்திருந்த புத்தகங்களில் “காந்திஜியின் காலடியில்” – At the Feet of Mahatma Gandhi – ஒன்று. ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

காந்தியின் தலைமைக் குணம் (leadership) என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது. ஐம்பது வயது வரைக்கும் இந்தியாவில் அவ்வளவாக visibility இல்லாத மனிதர். திடீரென்று வருகிறார். இரண்டு மூன்று வருஷங்களில் காங்கிரஸ் அவர் பாக்கெட்டுக்குள். பழம் தின்று கொட்டை போட்ட மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், லாலா லஜ்பத் ராய் எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். திலகர் கூட என் வழியை விட காந்தியின் வழி வேலை செய்கிறதே என்று சொன்னாராம். காந்தி சொன்னார் என்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும் பணக்காரர்களான படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்ற வக்கீல்கள் எல்லாம் சொத்து சுகத்தை விட்டுவிட்டு ஜெயிலுக்கு – ஜெயிலுக்கு! – போக க்யூவில் நிற்கிறார்கள். அந்த காலத்தில் ஜெயிலுக்கு போவது என்றால் இந்த படித்த, பணக்கார வர்க்கம் எப்படி பயப்பட்டிருக்கும்! வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்கள் பட்ட பாட்டை பார்த்த பிறகு எவனுக்கு தைரியம் வரும்? காந்தி வர வைத்திருக்கிறார். நாடே அவர் சொன்ன பேச்சை கேட்டிருக்கிறது. அவர் சொன்னால் ஒத்துழையாமை இயக்கம். சௌரி சௌராவில் வன்முறை, நிறுத்தி விடுங்கள் என்றால் நின்றுவிடுகிறது. இது என்ன மந்திரமா மாயமா?

இது காந்தி உத்தமர், தியாக் சீலர் என்பதானால் வந்த தாக்கம் இல்லை. என் கண்ணில் கோகலே காந்தியை விட பெரிய தியாக சீலர். கோகலேயின் தாக்கம் காந்தியின் தாக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. ஒரு இயக்கத்தின் தலைவன் தனி மனித சாதனையாக என்ன செய்துவிட முடியும்? அந்த செயல்களுக்கு ஒரு symbolic value இருக்க வேண்டும். காந்தி அந்த gesture-களை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். உப்பெடுப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு இயக்கமாக இருக்கட்டும், உண்ணாவிரதமாக இருக்கட்டும், அது சாதாரண மனிதனுக்கு புரிகிறது, அவனுக்கும் செய்ய வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.

பிரசாத் பாபுவின் புத்தகத்தில் காந்தி மாஜிக்கைப் பற்றி நல்ல insight கிடைக்கிறது. பிரசாத் காந்தியை முதல் முறை சந்தித்ததிலிருந்தே காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிவிட்டார். சம்பரானில் அவுரி பயிர் செய்யும் பெரும் ஜமீன்தார்களுக்கும் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கும் தகராறு. பஞ்சம். காந்தி ஆஃப்ரிக்காவில் உழைத்திருக்கிறார் என்பதால் அவரை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஏதோ ஒரு காங்கிரஸ் வருஷாந்திர கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரியாது, விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு சம்பரானுக்கு வந்திருக்கிறார். கூட லோகல் பெரிய மனிதர்கள், பிரசாத் பாபு உட்பட. காந்தி சம்பரான் ஜில்லாவுக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை உத்தரவு. காந்தி இதை நான் ஏற்கப் போவதில்லை, நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை, நீங்கள் எல்லாம் போய்விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பிஹாரி பாபுக்கள் எல்லாம் கூடி பேசுகிறார்கள் – எங்கிருந்தோ வந்த ஒருவர் பிஹாரி மக்களுக்காக ஜெயிலுக்கு போக தயாராக இருக்கிறார், நாம் திரும்பி போவது வெட்கக்கேடு என்று. காந்தி கூட சேர்ந்து நிற்கிறார்கள். அன்றிலிருந்து பிரசாத் பாபு காந்தியின் அடிமை. பிரசாத் வெளிப்படையாகவே சொல்கிறார் – சில சமயம் காந்தி சொல்வது எனக்கு புரிவதில்லை, பிடிப்பதில்லை, ஆனால் நான் அவர் பேச்சை தட்டுவதும் இல்லை என்று.

காந்தியின் ரகசியம் இதுதானோ? கஷ்டமான காரியத்தை – அது மலம் அள்ளுவதாக இருக்கட்டும், ஜெயிலுக்கு போவதாக இருக்கட்டும், உண்ணாவிரதம் இருப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு போராட்டமாக இருக்கட்டும் – தான் முன்னால் நின்று செய்து மற்றவர்களுக்கு moral pressure உருவாக்கி இருக்கிறார். அவர் பின்னால் ஒருவர் வந்தாலும் போதும், அது மேலும் peer pressure-ஐ உருவாக்குகிறது. ஒன்று இரண்டாகி பத்தாகி நூறாகி கோடியாகிறது.

அதே நேரத்தில் காந்தி ஒரே நிமிஷத்தில் எல்லாரையும் முழுவதாக மாற்றவும் முயற்சி செய்வதில்லை. படிப்படியாகத்தான். காந்தியுடன் கூடத் தாங்கும் பிஹாரி பாபுக்களை ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சேர்ந்து சமைத்து ஒன்றாக சாப்பிட வைக்கிறார். எல்லாருக்கும் – பிராமணரான பிரசாத் உட்பட – தயக்கம்தான், ஆனால் காந்தியின் ஜென்டில் பிரஷர் அதை நடத்துகிறது. பிரசாத் சொல்கிறார், என்னை பிற ஜாதியினரின் மலத்தையும் அள்ள வேண்டும் என்று அப்போதே சொல்லி இருந்தால் நான் ஓடிப் போயிருப்பேன் என்று. அது நடக்க சில வருஷங்கள் ஆனதாம்.

மானேஜ்மென்ட் குரு எல்லாரும் படிக்க வேண்டியது காந்தியின் வழிகளைத்தான்.

ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்:
படிக்க வேண்டிய இந்திய வரலாற்று புத்தகங்கள் – ஜெயமோகன்