சுஜாதாவின் ஒரு கிரிக்கெட் கதை

இந்தியாவில் பாதி பேருக்கு கிரிக்கெட் பைத்தியம் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டை வைத்து எழுதப்பட்ட புனைவுகள் மிகக் குறைவு. கிரிக்கெட்டை விடுங்கள், விளையாட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்டவையே மிக அபூர்வம். ஆங்கிலத்திலோ இவை சர்வசாதாரணம். ஜாக் லண்டனின் A Piece of Steak, ரிங் லார்ட்னர் மற்றும் வில்லியம் சரோயனின் பல கதைகள், காலம் பூராவும் குதிரைப் பந்தயப் பின்புலத்தை வைத்தே எழுதிய டிக் ஃபிரான்சிஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எனக்குத் தெரிந்து தமிழின் மிகச் சிறந்த விளையாட்டுப் புனைவு வாடிவாசல்தான்.

சுஜாதா கிரிக்கெட்டை அங்கங்கே தொட்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் ஒரு பையனை வைத்து ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் பேர் நினைவு வரவில்லை. எனக்குப் பிடித்த ஒரு கிரிக்கெட் (ஸ்ரீரங்கத்துக்) கதையை உப்பிலி ஸ்ரீனிவாஸ் பதித்திருக்கிறார்.

ஏறக்குறைய இப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவது என்பதை மறந்து பல வருஷம் ஆன பிறகு ஒரு முறை ஆஃபீஸில் கிரிக்கெட் மாட்ச். எங்கள் டீமில் எல்லாரும் சொத்து சொத்து என்று விழுந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதையில் வரும் கேவி மாதிரி ரவி என்று ஒருவன் ஆடிக் கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் வந்து நீ சும்மா நின்றால் போதும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். எனக்கு நிற்கத்தான் வந்தது, நான் யோசித்து பாட்டை சுழற்றுவதற்குள் பந்து போய்விடுகிறது. ஆனால் பாருங்கள், என் அதிருஷ்டம், ஒரு பந்து கூட ஸ்டம்புக்குப் போடவில்லை. அதனால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நான் எந்தப் பந்தையும் ஆட முயற்சிக்கவே இல்லை. எப்போதும் shoulder arms-தான். இப்படி நான் ஸ்டாண்ட் கொடுத்து ஒரு ஐம்பது ரன் தேற்றினோம். ஆஹா ஆர்வி என்னமா ஸ்டாண்ட் கொடுத்தான் என்று ஒரே பாராட்டு!

உங்களுக்கு ஏதாவது விளையாட்டை வைத்து எழுதப்பட்ட புனைவு நினைவு வருகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

21 thoughts on “சுஜாதாவின் ஒரு கிரிக்கெட் கதை

  1. //சுஜாதா கிரிக்கெட்டை அங்கங்கே தொட்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் ஒரு பையனை வைத்து ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் பேர் நினைவு வரவில்லை.//
    வாத்தியாரின் ”நிலாநிழல்” குறித்த இன்னொரு சுட்டி
    http://balhanuman.wordpress.com/2010/08/20/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/

    Like

  2. >>கிரிக்கெட் விளையாடும் ஒரு பையனை வைத்து ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் பேர் நினைவு வரவில்லை.

    – நிலா நிழல். ஒரு முறை படிக்கலாம் (சிறுகதை kind of முடிவிற்கு). மற்றபடி ஒரே மாதிரி…ஆண் அப்பாவி, கதாநாயகி வழக்கம் போல அலையும் பார்ட்டி. இப்படிப்பட்ட பாத்திரங்கள் எல்லாம் நான் இதுவரை சந்தித்ததில்லை. சுஜாதாவிற்கு எப்படியோ இந்த மாதிரி தரையில் கால் பாவாத பெண் கதாபாத்திரங்கள் தெரிகிறது :).

    Like

  3. ஆர. கே. நாராயணனின் “Swami and Friends” சிறுவர்கள் கிரிக்கெட் டீம் அமைப்பது, மட்டைகள் தபாலில் ஆர்டர் செய்து வாங்குவது, முக்கியமான மாட்ச் விளையாடும் நாளில் ஸ்டார் பிளேயர் காணாமல் போவது என்ற பலவற்றை மிக இயல்பாகச் சித்தரித்த முன்னோடி நாவல்.

    Like

  4. இதே போல் சுஜாதாவின் கிரிக்கெட் பற்றிய இன்னொமொரு கட்டுரையில் மற்றுமொரு சுவையான அனுபவம் ஒன்றினைப்பற்றிக் கூறியிருப்பார்.

    அதாவது தோத்துப் போன டீமின் காப்டன், ஜெயித்த டீமுக்கு தோத்துவிட்டதாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும். கேப்டனான சுஜாதாவின் அண்ணன் தான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வந்தது டீம் உறுப்பினர்களுக்குப் பெருத்த அவ்மானம். அதனால் இரவில் தூக்கம் வராமல் சுஜாதா படுத்திருக்கும் வேளையில், அவரது அண்ணன் ‘களுக்’கென்று சிரிபான். “என்ன விஷயம்?” என்று கேட்க, அவரது அண்ண தான், ‘தாதாபாய் நௌரோஜி’ என்று கையெழுத்து போட்டுவிட்டதாகக் கூறிச் சிரிப்பார்.

    – சிமுலேஷன்

    Like

    1. நன்றி சிமுலேஷன்.

      நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தச் சம்பவம் ‘கற்றதும் பெற்றதும் – 1’ தொடரில், மாட்ச் ஃ பிக்சிங் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

      Like

  5. பாலராஜன்கீதா+ராஜ் சந்திரா, அது நிலா நிழல்தான். நினைவுபடுத்தியதற்கும் சுட்டிக்கும் நன்றி!
    ஜீப், Swami and Friends அருமையான புத்தகம். டிவி சீரியலாக வந்தபோதும் ரசித்திருக்கிறேன்.
    சிமுலேஷன், தாதாபாய் நவுரோஜி நினைவு வருகிறது. அவருக்கு எப்போதும் நக்கல் அதிகம்தான். 🙂 நீங்கள் சொல்லும் மாட்ச்-ஃபிக்சிங் கதை நினைவு வரவில்லை.

    Like

    1. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள் ‘ என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்படட்து என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.

      Like

  6. டீன் ஏஜ் பையன் – மும்பையில் மாட்ச் – அங்கு தங்கும் வீட்டு பெண் மேல் ஈர்ப்பு – அந்த குடும்பத்தாரின் ரொம்ப மார்டனான நடவடிக்கைகள் – காதல் என நினைத்து ஏமாற்றம் – கிரிகெட்டில் சொதப்பல்

    இந்த ஓட்டத்தில் சுஜாத நாவல் ஒன்றை ‘மேகலா’ மாத இதழில் படித்து இருக்கிறேன். சுவாரிஸ்யமான நாவல். பெயர் ஞாபகம் இல்லை

    Like

  7. குதிரைப்பந்தயத்தை விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் பிவிஆர் கிண்டி ஹோல்டான் என்று ஒரு நாவல் [தொடர்கதை] எழுதியிருக்கிறார். ஆர்தர் ஹெய்லி பாணி. பல கதைகள் ஒரே சூழல். சுவாரசியமாக இருந்தது – 30 வருடம் முன்பு

    Like

    1. அன்புள்ள ஜெயமோகன்,

      “நிரந்தர தொடுப்பு”க்கு ஆங்கில மூலம் என்ன என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன், பிடிபடவில்லையே! 🙂

      பி.வி.ஆரை நான் மீண்டும் படிக்க வேண்டும் சார், புத்தகங்கள் கிடைக்கிறதா என்று தெரியவில்லை…

      நிலா நிழல் என்று தகவல் தந்ததற்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்! பலூன்காரன் சார்பிலும் நன்றி!

      Like

  8. மறுமொழியில் நிரந்தர தொடுப்பு என்றிருக்கிறது. நல்ல சொல்லாட்சி, வேறு ஏதாவது சமூக உறவுகளுக்கு பயன்படுத்த்விடப்போகிறார்கள் ஆர்வி

    Like

    1. அன்புள்ள முருகன், உங்கள் புத்தகத்தை – “பந்து” சிறுகதையையாவது – தேடித் பிடித்துப் படிக்க வேண்டும். விவரத்துக்கு நன்றி!

      Like

  9. நிலா நிழல் – திணமணிக் கதிரில் வந்தது என்று நினைக்கிறேன்.
    அடுத்த வாரத்திலிருந்து சுஜாதாவின் புதிய தொடர்கதை என்ற அறிமுகத்தில் வர இருக்கும் அத்தியாயத்தில் கொடுத்திருக்கும் சில பத்திகளே சுண்டி இழுத்தது.
    முகுந்தன் பேட்டிங் – கடைசி ஓவர்; கிட்டதட்ட முப்பது ரன்கள் எடுக்க வேண்டும். இம்ரான் கான் பந்தை பேண்டில் தேய்த்துக்கொண்டு வீசத் தயாராவார். முதல் மூன்று/நான்கு பந்துகளில் முகுந்த் கெக்கேபிக்கே என்று சிக்ஸர்கள் அடுத்துவிடுவான். அடுத்த பந்திற்கு அவனும், இம்ரானும் மற்றும் நானும் பரபரப்பாக தயாராகி நிற்கையில் “ஏந்திருந்து அய்யரே, விடிஞ்சு இன்னும் வேட்டி விலக தூங்கறயே!” என்று வேலைக்காரி பாயை இழுத்து எழுப்பிவிடுவாள்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.