2010-இன் நூறு சிறந்த புத்தகங்கள்

100 Notable Books of 2010 – NYTimes.com என்று ஒரு லிஸ்டைப் பார்த்தேன். உண்மையை சொல்லிவிடுகிறேன், இந்த லிஸ்டில் நான் ஒரு புத்தகத்தைக் கூடப் படித்ததில்லை. 🙂 வெகு சில எழுத்தாளர்களைத்தான் கேள்வியே பட்டிருக்கிறேன். ஸ்டேய்க் லார்சன் (Steig Larsson) எழுதிய Girl With a Dragon Tattoo சீரிசைத் தவிர வேறு எதுவும் படிப்பதாகவும் திட்டம் இல்லை.

பின்னே எதற்காக இந்தப் பதிவு என்கிறீர்களா? மூன்று காரணங்கள்.

 1. இந்த லிஸ்டில் நீங்கள் எதையாவது படித்திருந்தால் சொல்லுங்களேன்!
 2. இந்த வருஷம் வந்த சிறந்த தமிழ் மற்றும் இந்திய மொழி, ஆங்கில புத்தகங்கள் என்னென்ன? ஒரு லிஸ்ட் போடுங்களேன்!
 3. சரி 2010-இல் வெளி வந்தவை எவை என்று தெரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கலாம், அதுவும் தமிழ் நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். வருஷம் முடியப் போகிறது, இந்த வருஷம் நீங்கள் படித்த பத்து, வேண்டாம் மூன்று சிறந்த புத்தகங்கள் என்னென்ன? (தமிழோ, ஆங்கிலமோ எதுவாக இருந்தாலும் சரிதான்.) உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
 4. இங்கே மறுமொழி எழுதினாலும் சரி, இல்லை உங்கள் தளத்தில் பதிவு போட்டு இங்கே சுட்டி கொடுத்தாலும் சரி. நம் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வது ஒரு சின்ன சந்தோஷமாக இருக்கும்!

  தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள்

9 thoughts on “2010-இன் நூறு சிறந்த புத்தகங்கள்

 1. வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர்

  இதற்கு நான் 90% மதிப்பெண் கொடுக்கிறேன். (ஆனால் வழக்கம் போல யுவனின் குள்ளசித்தன் சரித்திரத்திற்குப் பூசியது போல்) இதற்கு பிறர் இந்துத்வா சாயம் பூசி விடுவார்கள். மிக ஆழமாக, சுவாரஸ்யமாக பல மானுடர்களின் வாழ்க்கையை கண்முன் விரிக்கிறது இந்நாவல். உண்மையில் இது தத்துவம் பேசவில்லை. வாழ்க்கையை, அதன் வலியை, வேதனையை, இன்பத்தை, ஒரு நொடியில் மலரும் அதன் ஆனந்தத்தை, ஏன் வாழ வேண்டும், என்பதற்கான மனிதனின் விழைவை நோக்கத்தை அற்புதமாகச் சொல்கிறது.

  இதை இப்படி என்று விமர்சிக்க முடியாது. ஏனென்றால் இது காட்சிப்படுத்துவது ஒரு மிகப் பெரிய ஜன சமூகத்தை. அதன் பயணத்தை.

  சுருக்கமாக இதன் கதையைச் சொன்னால், சிலர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் யார், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்ன, ஏன் வெளியேறுகிறார்கள், அவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், அதன் பின் என்ன ஆகிறது என்பதை வாழ்வின் பல்வேறு தத்துவச் சிக்கல்களோடு கலந்து அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார் யுவன்.

  ஏன் இந்த நாவல் குறித்து ஜெயமோகன் ஏதும் கருத்துக் கூறவில்லை என்று தெரியவில்லை. அவரது இயங்கு தளத்திற்கு நேர்மாறான கருத்துச் சிக்கல்கள் ஏதும் நாவலில் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. பார்ப்போம்.

  இந்த நாவல் எழுத யுவன் எவ்வளவு உழைத்தாரோ தெரியாது. வழக்கமான அழகான, மயக்கக் கூடிய நடை. யுவனுக்கும், இதை வெளியிட்ட உயிர்மை மனுஷ்ய புத்திரனுக்கும் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் ஒருமுறை படிக்கத் தூண்டும் நாவல்.

  விரிவான விமர்சனத்தை நேரம் ஒதுக்கி எழுத முயற்சிக்கிறேன்.

  உயிர்மை லிங்க் : http://www.uyirmmai.com/publications/BookDetails.aspx?bid=256

  Like

 2. இந்த ஐடியா நன்றாக இருக்கிறது (3வது பாயிண்ட்). இந்த ஆண்டு படித்த புத்தகங்களும், அதில் சிறந்த புத்தகங்கள் எவை என்பதனை குறிப்பிடுவதும் நல்ல எண்ணம்தான். கூடிய விரைவில் வருகிறேன்.

  Like

 3. //ந்த வருஷம் நீங்கள் படித்த பத்து, வேண்டாம் மூன்று சிறந்த புத்தகங்கள் என்னென்ன? (தமிழோ, ஆங்கிலமோ எதுவாக இருந்தாலும் சரிதான்.) //

  Gravity’s Rainbow – Thomas Pynchon
  நெடுஞ்சாலை -கண்மணி குணசேகரன்
  Old School – Tobias Wolff
  மறுபக்கம் – பொன்னீலன்
  Oblivion – David Foster Wallace
  Brief Interviews with Hideous Men – David Foster Wallace
  Lark And Termite – Jayne Anne Phillips

  Like

 4. அஜய், டோபியாஸ் வுல்ஃப் எழுத்துகளை படிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகப் பார்க்கிறேன், கை வர வில்லை. அவரது Hunters in the Snow சிறுகதையைப் படித்து சிரித்திருக்கிறேன். நீங்கள் சொல்லி இருக்கும் பிற புத்தகங்களைப் பற்றி தெரியவில்லை, கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன்!
  அசோக் குமார், காத்திருக்கிறோம்.

  Like

 5. நீங்கள் சொன்ன லிஸ்ட்டைப் போய்ப் பார்த்தேன்…படிக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை.சில புத்தகங்களைத் தவிர நான் மற்றவற்றைக் கேள்விப் படவே இல்லை!என் கர்வம் அழிந்ததடி என்று பாடிக் கொண்டே திரும்பிவிட்டேன்.படிக்கவேண்டிய புத்தகங்கள் என ஜெமோ தமிழ் மற்றும் இந்தியப் புத்தங்கள் வரிசை கொடுத்ததுபோல ஒரு ஆங்கில நூல் வரிசையும் கொடுத்தால் தேவலை….[அல்லது ஏற்கனவே செய்திருக்கிறாரா எனத் தெரியவில்லை]

  Like

 6. ஆர். வி – இது 2010 க்கான பட்டியல் என புரிகிறது. நான் இப்பொழுது தான் பார்க்கிறேன். 2010 அல்லது 2011 வெளியானா நான் படித்த புத்தகங்களா, இல்லை இவ்வருடம் நான் படித்த புத்தகங்களா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.