பொருளடக்கத்திற்கு தாவுக

எனக்குப் பிடித்த சில தமிழ் சிறுகதைகள் பகுதி 1

by மேல் திசெம்பர் 7, 2010

எத்தனை நாள்தான் அடுத்தவர்கள் லிஸ்டை பற்றியே எழுதுவது? இந்த முறை என் லிஸ்ட். இது முழுமையானது இல்லை. எனக்கு சிறுகதைகள் தலைப்பு நினைவிருப்பதில்லை. ஞாபகம் வரும் சிறுகதைகளை பற்றி இப்போது. இதுதான் என் சிறுகதை anthology-யின் முதல் draft என்று வைத்துக் கொள்வோமே!

அனேகமாக பெரிய போஸ்டாக இருக்கும். நாலைந்து பதிவுகளாக போட்டாலும் போடுவேன்.

எழுத்தாளர் பேரை க்ளிக்க முடிந்தால் அவரது தளத்துக்குப் போகலாம். கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் கதைக்குப் போகும். அப்படி இல்லாத கதைகளையும் கூடிய சீக்கிரம் அழியாச்சுடர்கள் ராம் பதிப்பார் என்று நப்பாசையோடு…

 1. அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
 2. அசோகமித்திரன் – பிரயாணம், புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
 3. பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள்
 4. தமயந்தி – அனல் மின் மனங்கள்
 5. திலீப் குமார் – கடவு, கடிதம்
 6. ஜெயகாந்தன் – அக்னிப் பிரவேசம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
 7. ஜெயமோகன் – பல்லக்கு, படுகை, திசைகளின் நடுவே, பித்தம், அவதாரம், மாடன் மோட்சம், ஊமைச் செந்நாய்
 8. கி. ராஜநாராயணன் – கோமதி, கன்னிமை, தாச்சண்யம், மாயமான், கொத்தைப்பருத்தி, ஜெயில், கதவு
 9. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு, காணாமல் போன அந்தோணி, எக்சென்ட்ரிக், தங்க ஒரு
 10. கு. அழகிரிசாமி – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு
 11. கு.ப.ரா. – திரை, கனகாம்பரம், ஆற்றாமை, வீரம்மாளின் காளை
 12. லா.ச.ரா. – பூரணி, பாற்கடல், இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.
 13. எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை, பெட்கி
 14. பா. ராகவன்108 வடைகள்
 15. பட்டுக்கோட்டை பிரபாகர் – ஏரிக்கரை ராஜாத்தி
 16. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாப விமோசனம், பொன்னகரம், புதிய கூண்டு, துன்பக்கேணி, செல்லம்மாள், கல்யாணி, ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், பிரம்ம ராக்ஷஸ், ஞானக்குகை, பால்வண்ணம் பிள்ளை
 17. சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
 18. சுப்ரபாரதிமணியன்ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்
 19. சுஜாதாபேப்பரில் பேர், நிஜத்தை தேடி, ஒரு லட்சம் புத்தகங்கள்
 20. சுந்தர ராமசாமிவிகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம், கோவில் காளையும் உழவு மாடும்
 21. தங்கர் பச்சான் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
 22. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம், தாத்தாவும் பேரனும், பசி ஆறிற்று
 23. வண்ணதாசன்தனுமை
 24. வண்ணநிலவன் – எஸ்தர்
 25. யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்
 26. சில சமயம் தனிப்பட்ட கதைகளை விட தொகுப்பு ஒரு அருமையான ambience-ஐ உருவாக்குகிறது. உதாரணமாக தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள், கல்கியின் தேரழுந்தூர் சிவக்கொழுந்து, தப்பிலி கப், மயிலைக் காளை போன்ற கதைகள், சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் ஸ்ரீரங்கம் கதைகள், பிரபஞ்சனின் பதவி என்று சிறுகதைத் தொகுதி, பெங்களூர் ரவிச்சந்திரன் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதைத் தொகுதி போன்றவற்றை சொல்லலாம்.

  தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

  தொடர்புடைய சுட்டிகள்:
  துப்பறியும் சாம்பு
  கிருஷ்ணன் நம்பி
  பட்டுக்கோட்டை பிரபாகர்
  ஜெயமோகன் சிபாரிசு செய்யும் புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  சுப்ரபாரதிமணியன் சிறுகதைத் தொகுப்பு – அப்பா
  தி.ஜா. சிறுகதைத் தொகுப்பு – கொட்டுமேளம்
  வண்ணதாசன் தளம்

  சிறுகதை பற்றிய பதிவுகள்
  பைத்தியக்காரப் பிள்ளை
  108 வடைகள்
  பேப்பரில் பேர்
  பாயசம்
  எஸ்தர்

9 பின்னூட்டங்கள்
 1. ஆஹா ..அருமையான தொகுப்புக்கள். பாலகுமாரனின் – சின்ன சின்ன வட்டங்கள் தொகுப்பில் உள்ள இந்த தலைப்பிட்ட அந்த சிறுகதை முடிவில் என்னை வெடித்து அழவைத்த நினைவுகள்.

  சிறந்த தொகுப்புகள்.

  Like

 2. இதில் சிலவற்றை படித்துள்ளேன் பகிர்வுக்கு நன்றி

  Like

 3. கோயில் காளையும் உழவுமாடும் – திரும்ப படிக்கணும்னு தோணுது & புலிக்கலைஞனும்

  Like

 4. காக்கு மாணிக்கம்+பாலாஜி+கபீஷ், மறுமொழிக்கு நன்றி!

  Like

 5. Ramesh Kalyan permalink

  “லா.ச.ரா. – பூரணி, பாற்கடல், இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.”

  கதையின் பெயர் மண். அது ஆங்கிலத்திலும் செக்கோஸ்/லோவாகியா மொழியிலும் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

  Like

  • ரமேஷ் கல்யான், சரியாக சொன்னீர்கள், அந்த லா.ச.ரா. சிறுகதையின் பெயர் “மண்”தான். நன்றி!

   Like

 6. அருணா permalink

  ஆர். வி,

  கிருஷ்ணன் நம்பி என் 1 வயதில் இறந்து விட்டார். ஆனால் அவருடைய அம்மாவை எனக்கு மிக நன்றாக தெரியும். ம்ருமகள் வாக்கில் வரும் மாமியார் நிச்சயம் அவர் அச்சு தான். நான் முதலில் என் 14-15 வயதில் இக்கதையை படித்து விட்டு அட நம்ம பாட்டிய வச்சு கத எழுதியிருக்காரே என நினைத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு கிளாசிக் கதை. தங்க ஒரு மிக வித்தியாசமான கதை.

  ஜெ.மொவின் கதைகளில் பத்ம வியூகத்தை விட்டு விட்டீர்களே. தி.ஜா வின் அத்தனை கதைகளும் எனக்கும் பிடித்தது.

  பு.பித்தன், சுஜாதாவில் நீங்கள் குறிப்பிட்டதில் ஏகதேசம் எல்லாமே படித்திருக்கிறேன். அம்மையின் அம்மா ஒரு கொலை செய்தாள் எனக்கு ரொம்ப பிடித்தது.

  படிக்க படிக்க எவ்வளவு குறைவா படிச்சிருக்கோம்னு தோணுது. முடியல சார்.

  Like

  • அருணா, பத்மவியூகம் என் முதல் வரிசைக் கதைகளில் வராது. அம்மா ஒரு கொலை செய்தாளும் அப்படித்தான். எனக்கு அது கிளிஷே ஆகத் தோன்றுகிறது. உங்கள் பெரியப்பா சில கதைகளே எழுதி இருந்தாலும் அவற்றின் தரம் அதிகம்…

   Like

Trackbacks & Pingbacks

 1. படுகை – ஜெயமோகன் « சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: