ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, ஆர்வி நால்வரும் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள்

சமீபத்தில் சுஜாதாவுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நான் அடிக்கடி quote செய்வது ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள், மற்றும் எஸ்.ரா.வின் சிபாரிசுகள். அப்புறம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் என்றும் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன். நாங்கள் நான்கு பேருமே சிறந்தது என்று சொல்லும் சிறுகதைகள்:

  1. அசோகமித்ரனின் புலிக்கலைஞன்
  2. திலீப் குமாரின் கடிதம்
  3. கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு
  4. கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு
  5. சுந்தர ராமசாமியின் பிரசாதம்
  6. வண்ணநிலவனின் எஸ்தர்

ஜெயமோகன், எஸ்.ரா., சுஜாதா ஆகியோர் எங்கே, நீ எங்கே என்று நினைப்பவர்களுக்காக: அவர்கள் மூன்று பேரும் தேர்ந்தெடுத்த, நான் தேர்ந்தெடுக்காத சிறுகதைகள்.

  1. ஆ. மாதவனின் நாயனம்
  2. வண்ணதாசனின் நிலை
  3. கு.ப.ரா.வின் விடியுமா?

இவை மூன்றுமே நல்ல சிறுகதைகள்தான். ஆனால் என் லிஸ்டில் வராது.

நாங்கள் நால்வரும் சிறுகதைகளை தேர்ந்தெடுக்க வேறு வேறு methodology-களை பயன்படுத்தி இருக்கிறோம்.

ஜெயமோகன் தன் கணிப்பில் சிறந்த சிறுகதையா இல்லையா என்று மட்டும் பார்க்கிறார். எத்தனை சிறுகதை இந்த எழுத்தாளருக்கு என்றெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. தன் கணிப்பில் சிறந்த சிறுகதைகள் என்னவோ அவை அத்தனையும் லிஸ்ட் போட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறார். உதாரணமாக புதுமைப்பித்தனின் 12 கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் லிஸ்ட் மிக பெரியது. 250+ சிறுகதைகள் இங்கே உண்டு.

சுஜாதா ஒரு எழுத்தாளருக்கு ஒரு கதை மட்டும் என்ற விதி வைத்திருக்கிறார். அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சு.ரா., கி.ரா. தி.ஜா. போன்ற மாஸ்டர்களுக்கு ஒரே கதைதான் என்பது கொஞ்சம் கடுமையான விதி. அவருடைய லிஸ்ட் இதனால் மிக குறுகிவிட்டது.

எஸ்.ரா. இருவருக்கும் நடுவில். நூறு சிறுகதைகள் உள்ள லிஸ்ட் என்று arbitrary ஆக முடிவு செய்துவிட்டார். ஒரு எழுத்தாளருக்கு இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அவருக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

இந்த லிஸ்டில் சில ஆச்சரியங்கள் இருக்கின்றன. புதுமைப்பித்தன் இல்லை. தி.ஜா. இல்லை. கி.ரா. இல்லை. காரணம் இந்த methodology-தான். சுஜாதா ஒரு எழுத்தாளரின் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்தது எஸ்.ராவின் எண்ணத்தில் அவரது மூன்றாவது அல்லது நான்காவது சிறந்த கதையாக இருந்தால் போச்சு. லிஸ்டில் வராது!

நான் ஏறக்குறைய ஜெயமோகன் methodology-யைப் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு பிடித்த சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் வாசிப்பு இந்த மூன்று பேர் அளவுக்கு பரந்த வாசிப்பு இல்லை. அப்புறம் நான் இவர்களைப் போல தேர்ந்த வாசகன் இல்லை, ஆரம்ப நிலைக்கு கொஞ்சம் மேற்பட்ட வாசகன், அவ்வளவுதான். என் தேர்வுகளின் அடிப்படை என் ரசனை மட்டுமே. பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம், நடு நவீனத்துவம் என்றெல்லாம் நான் யோசிப்பதில்லை. எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே அளவுகோல். அப்புறம் எனக்கு வரலாறு தெரியாது. ஒரு கதை என்ன தாக்கத்தை உருவாக்கியது என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை, தெரியவும் தெரியாது. எல்லாவற்றையும் விட முக்கியம் – நான் அமேரிக்கா வந்து 18 வருசம் ஆகிவிட்டது. என்னுடைய ரேடாரில் இருப்பது அனேகமாக நான் இங்கே வருவதற்கு முன் கேள்விப்பட்ட எழுத்தாளர்களே. ஒரு பெருமாள் முருகனையும் தமயந்தியையும் யூமா. வாசுகியையும் நான் படிப்பதும் படிக்காமல் இருப்பதும் தற்செயலே. எனக்கு தெரிந்த நவீன தமிழ் இலக்கியம் 92-இல் தேக்கம் அடைந்திருக்கிறது. 🙂 இப்போது இணையத்தின் புண்ணியத்தில் இந்த தேக்கம் கொஞ்சம் கொஞ்சம் உடைந்திருக்கிறது.

இந்தியாவிலும் என்ன படிப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த பிரச்சினை கொஞ்சம் அதிகமாக உண்டு என்று நினைக்கிறேன். லிஸ்ட் போடுவதும், படிக்க சிபாரிசு செய்வதும் என்ன படிப்பது என்று யோசிப்பவர்களுக்கு கொஞ்சமாவது உதவியாக இருந்தால் ஒரு திருப்தி கிடைக்கும்.

அன்பளிப்பு தவிர்த்த மற்ற கதைகள் அழியாச்சுடர்கள் ராம் புண்ணியத்தில் இணையத்தில் கிடைக்கின்றன. அதையும் ஒரு நாள் போடாமலா போய்விடுவார்? போட்டுவிட்டார். 🙂

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகன் தேர்வு
எஸ்.ரா. தேர்வு
சுஜாதா தேர்வு
ஆர்வி தேர்வு

3 thoughts on “ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, ஆர்வி நால்வரும் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள்

  1. உங்கள் தேர்வில் சுஜாதாவின் “பேப்பரில் பேர்” மிகச் சாதாரணமான கதை. மாற்றாக, “ரேணுகா” குறிப்பிடப்பட வேண்டும். “குதிரை” நல்ல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு. தமிழில் நகைச்சுவை எழுத்தே அரிதாக இருப்பதால், “குதிரை” (வெறும் newspaper “middle” மாதிரி இருந்தால் கூட) தேர்வு பெறும்.

    Like

    1. ஜீப், // சுஜாதாவின் “பேப்பரில் பேர்” மிகச் சாதாரணமான கதை // என் கண்கள் வேறு, அவ்வளவுதான்.

      பாஸ்கர், இரா. முருகன் சிறுகதைகள் என்று தரவில்லை, பொதுவான லிஸ்ட் அது..

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.