சாண்டில்யனின் “கன்னி மாடம்”

கன்னி மாடம் எட்டு ஒன்பது வயதில் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று. தண்டநாயகர், ஜகத்விஜயன், பராக்கிரம பாஹு, மழவராயர், அண்ணன் பல்லவராயன் போன்ற பேர்களே கவர்ச்சிகரமாக இருந்தன. அப்புறம் தலைய வெட்டி கோட்டை வாசலில் ஈட்டியில் குத்தி வைத்தல் மாதிரி action சீன்கள் வேறு.

பாண்டியர்கள் அரசு சண்டையில் ஈழ மன்னன் பராக்கிரம பாஹு தலையிட்டதும், இரண்டு தண்டநாயகர்கள் – இலங்காபுரன், ஜகத்விஜயன் – தலைமையில் ஈழப் படை வந்ததும், அவர்கள் முதலில் பல வெற்றிகள் அடைந்ததும், ஆனால் கடைசியில் சோழர்களிடம் தோல்வி அடைந்து அவர்கள் தலைகள் மதுரை கோட்டை வாசலில் வெட்டி வைக்கப்பட்டதும் வரலாறு. சாண்டில்யன் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஒரு படைத்தலைவன் அபராஜிதனை உருவாக்குகிறார். சிற்றரசன் மகள் ஒரு கன்னி மாடத்தில் வாழ்வதாகவும், அந்த கன்னி மாடம் பலம் வாய்ந்த கோட்டை என்றும், அந்த கோட்டையை பயன்படுத்தி அபராஜிதன் வீரபாண்டியனை வெல்வதாகவும் ஒரு ஐநூறு பக்கம் கதை போகிறது. முடிக்க வேண்டும் என்பதால் கடைசியில் சரித்திர நிகழ்ச்சிகளை சேர்த்து குலசேகர பாண்டியன் ஆட்சி பீடத்தில் அமர்வதாக முடித்துவிடுகிறார்.

கதையில் பெரிய relief நிறைய வர்ணனைகள், பேச்சு, காதல் இல்லாதது. ஒரு சிறு கோட்டை பாதுகாக்கப்படுவதை சுவாரசியமாக விவரிக்கிறார். ஓரளவு action இருக்கிறது. சரித்திரமும் இருக்கிறது. One of his better efforts.

ஜெயமோகன் இதை முக்கியமான இரண்டாம் நிலை historical romance என்று குறிப்பிடுகிறார்.

வானதி பதிப்பகம் வெளியீடு.