எழுத்தாளர் தளங்கள் என்று ஒரு பதிவு எழுதினேன். விட்டுப்போன நிறைய பேரின் தளங்களை சொன்னீர்கள். நிறைய தளங்கள் இருப்பதால் எப்படி இதை படிக்கக் கூடிய ஒரு பதிவாக மாற்றுவது என்று குழம்பி அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். மீண்டும் தொகுக்க ஒரு முயற்சி.
புதியவை, எனக்கு புதிதாகத் தெரிந்தவை:
டாப் டென் எழுத்தாளர் தளங்கள்
எனக்கு தோன்றிய வகையில் இவற்றை வரிசைப்படுத்தி இருக்கிறேன். வரிசை சரியில்லை, இல்லாவிட்டால் இவர் பேரை விட்டுவிட்டேன், இவர் பேரை சேர்த்திருக்கக்கூடாது என்று நினைத்தால் – நீங்களும் ஒரு பதிவு எழுதிக் கொள்ளுங்கள்!
- ஜெயமோகன் – நான் தவறாமல் படிக்கும் தளம்
- அ.முத்துலிங்கம் – வாரத்துக்கு இரண்டு மூன்று கட்டுரை வருகிறது. விரும்பிப் படிக்கும் இன்னொரு தளம்
- எஸ். ராமகிருஷ்ணன்
- நாஞ்சில் நாடன் (நாஞ்சில் நாடன் படைப்புகள், அவர் பற்றிய பதிவுகள் இங்கே சேகரிக்கப்படுகின்றன)
- ஞாநி
- இரா. முருகன்
- பிரபஞ்சன்
- சுப்ரபாரதி மணியன்
- பா. ராகவன்
- கடுகு (அகஸ்தியன்)
போனசாக ஐந்து தளங்கள்
- வண்ணதாசன் (கல்யாண்ஜி)
- சுந்தர ராமசாமி
- பாலகுமாரன் – infrequent updates
- விமலாதித்த மாமல்லன் – இவருக்கு ஜெயமோகன் மீது கடுப்பு. அவரது சில குற்றச்சாட்டுகளைப் பற்றி ஜெயமோகன்தான் சொல்ல முடியும். வேண்டாத மருமகள் மீது குறை கண்டுபிடிக்கும் போல மாமியார் போலவும் சில பதிவுகள் வருகின்றன. ஆனால் பல நல்ல சிறுகதைகள் இங்கே கிடைக்கின்றன.
- பெருமாள் முருகன் – infrequent updates
ஓரளவு தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் (ஆங்கில அகரவரிசைப்படி)
- ஆபிதீன் பக்கங்கள் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
- அரவிந்தன் நீலகண்டன் – அவரது ப்ளாக், தமிழ் பேப்பர் தளத்தில், தமிழ் ஹிந்து தளத்தில்
- பாரதியின் கவிதைகள் – பாரதி படைப்புகள் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.
- சாரு நிவேதிதா – நான் படிப்பதில்லை, அதனால் ரெகுலராக அப்டேட் ஆகிறதா என்று தெரியாது.
- சிட்டி – தி.ஜா.வுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி எழுதிய சிட்டி சுந்தரராஜன் மறைந்து ஆறேழு வருஷம் ஆகிவிட்டது. அவர் எழுதிக்கொண்டிருந்த ப்ளாக் இது. Last update in 2004
- தமயந்தி
- கவிஞர் ஞானக்கூத்தன்
- கவிஞர் கலாப்ரியா படித்ததில்லை.
- மாலன் – Infrequent updates
- என். சொக்கன் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
- நாகார்ஜுனன் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
- நாகூர் ரூமி படித்ததில்லை.
- பிரமிள் – சிலாகிக்கப்படும் கவிஞர், நான் படித்ததில்லை.
- ஷோபா சக்தி – படித்ததில்லை. ஈழத் தமிழர், கொரில்லா என்ற புத்தகத்தை எழுதியவர்.
- சுதாங்கன் – இவர் பத்திரிகையாளர், புத்தகங்கள் பதித்ததில்லை என்று நினைக்கிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை. சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
- தமிழ்மகன் (வெட்டுப்புலி எழுதியவர்)
- ராமச்சந்திரன் உஷா (நுனிப்புல்)
- வே. சபாநாயகம் (நினைவுத் தடங்கள்)
- வெங்கட் சாமிநாதன் – Last update in 2008
- கவிஞர் விக்ரமாதித்யன் (குறுக்குத்துறை)
தெரியாதவர்கள் (ஆங்கில அகரவரிசைப்படி)
- அகநாழிகை பொன். வாசுதேவன் உரையாடல் சிறுகதைப் போட்டியில் இவரும் ஒரு பரிசை வென்றார் என்று நினைவு.
- அப்பாதுரை – நடராஜன் பாஸ்கரின் (natbas) கருத்துப்படி இவர் இணையத்தின் சிறந்த கதைகளை இங்கு எழுதுகிறார்
- அய்யனார் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- அய்யப்ப மாதவன் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- அழகியசிங்கர் (நவீன விருட்சம்) படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- பிரம்மராஜன் (Brammarajan’s Polyphonic poems) படித்ததில்லை.
- செல்லமுத்து குப்புசாமி படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- சிறில் அலெக்ஸ் படித்ததில்லை. ஜெயமோகனுக்கு இவர்தான் தளம் அமைத்துத் தந்தார் என்று கேள்வி. நடராஜன் பாஸ்கர் (natbas) இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- தளவாய் சுந்தரம் படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- எட்டுத்திக்கும் – கவிதைத் தளம் போல தெரிகிறது. அழியாச்சுடர்கள் ராம் தந்த சுட்டி.
- ஜமாலன் (மொழியும் நிலமும்) அழியாச்சுடர்கள் ராம் தந்த சுட்டி.
- காஞ்சி ரகுராம் natbas சொல்வது – “புத்தகம் எதுவும் போடவில்லை. ஆனால் அது தமிழின் குறை- அதற்காக இவரை எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவிட முடியாது.”
- கடற்கரய் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- காலபைரவன் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- குட்டி ரேவதி – படித்ததில்லை.
- லீனா மணிமேகலை – படித்ததில்லை.
- மகுடேசுவரன் – படித்ததில்லை.
- மருதன் – கிழக்கு ஆசிரியராம். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- “மரபின் மைந்தன்” முத்தையா சுட்டி தந்தது natbas.
- நேசமித்ரன் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- நிஜந்தன் படித்ததில்லை. சுட்டி கொடுத்தவர் நடராஜன் பாஸ்கர் (natbas).
- பி.கே. சிவகுமார் – “வார்த்தை” பத்திரிகை நடத்துபவர் (பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்)
- பாமரன் – இவர் யாரென்று தெரியாது, படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- ஆர். முத்துக்குமார் – கிழக்கு ஆசிரியராம். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- ரமேஷ் வைத்யா (பேனா மினுக்கல்) – இவர் யாரென்று தெரியாது, படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
- ரிஷான் ஷெரிஃப் natbas சொல்வது – “இளைஞர் என்று நினைக்கிறேன். அண்மையில் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள் என்று ஞாபகம்.”
- சித்தார்த் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், விமரிசனம் சார்ந்த பார்வை. சுட்டி கொடுத்தவர் நடராஜன் பாஸ்கர் (natbas).
- விஜய் மகேந்திரன் படித்ததில்லை. விஜய் மகேந்திரனே தன் சுட்டியை கொடுத்திருக்கிறார்.
இவர்கள் சொந்தமாக எழுதுவதாகத் தெரியவில்லை, ஆனால் படிப்பு சம்பந்தப்பட்ட தளங்களை நடத்துகிறார்கள். சுட்டிகள் இங்கே சேர்க்கப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.
- அ.ராமசாமி – மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையின் தலைவர். அவருடைய ரசனையும் என்னுடைய ரசனையும் முழு இசைவானதில்லை. ஆனால் அவர் தமிழ் சிறுகதை, நாவல் உலகத்தைப் பற்றி எழுதுபவை நல்ல அறிமுகங்கள் என்று கருதுகிறேன். குறிப்பாக அவருடைய கதைவெளி மனிதர்கள் சீரிஸ் முக்கியமான ஒன்று.
- அழியாச்சுடர்கள்
- பத்ரி சேஷாத்ரி
- பாஸ்கி ரெவ்யூஸ் என்ற பேரில் புத்தக விமர்சன தளம் – நன்றாக இருக்கிறது.
- ஜிவீ (GV) – பழைய எழுத்தாளர்களைப் பற்றிய உருப்படியான கட்டுரைகள்.
- கிங் விஸ்வா – தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தளத்தில் எழுதுகிறார். நீங்கள் காமிக்ஸ் விசிறி ஆக இருந்தால் மிஸ் செய்யாதீர்கள்.
சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக அழியாச்சுடர்கள் ராம் தனது ரீடர் பண்டிலைக் கொடுத்திருக்கிறார், அந்த பண்டிலில் உள்ள அத்தனை தளங்களையும் இங்கே க்ளிக்கி உங்கள் கூகிள் ரீடரில் சேர்த்துக் கொள்ளலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புடைய சுட்டி: மூலப்பதிவு