Skip to content

எழுத்தாளர் தளங்கள் II

by மேல் திசெம்பர் 13, 2010

எழுத்தாளர் தளங்கள் என்று ஒரு பதிவு எழுதினேன். விட்டுப்போன நிறைய பேரின் தளங்களை சொன்னீர்கள். நிறைய தளங்கள் இருப்பதால் எப்படி இதை படிக்கக் கூடிய ஒரு பதிவாக மாற்றுவது என்று குழம்பி அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். மீண்டும் தொகுக்க ஒரு முயற்சி.

புதியவை, எனக்கு புதிதாகத் தெரிந்தவை:

 1. இந்திரா பார்த்தசாரதி புதிய ப்ளாக் தொடங்கி இருக்கிறார்.
 2. மெரீனா
 3. வண்ணநிலவன்
  அகிலன்

டாப் டென் எழுத்தாளர் தளங்கள்

எனக்கு தோன்றிய வகையில் இவற்றை வரிசைப்படுத்தி இருக்கிறேன். வரிசை சரியில்லை, இல்லாவிட்டால் இவர் பேரை விட்டுவிட்டேன், இவர் பேரை சேர்த்திருக்கக்கூடாது என்று நினைத்தால் – நீங்களும் ஒரு பதிவு எழுதிக் கொள்ளுங்கள்!

 1. ஜெயமோகன் – நான் தவறாமல் படிக்கும் தளம்
 2. அ.முத்துலிங்கம் – வாரத்துக்கு இரண்டு மூன்று கட்டுரை வருகிறது. விரும்பிப் படிக்கும் இன்னொரு தளம்
 3. எஸ். ராமகிருஷ்ணன்
 4. நாஞ்சில் நாடன் (நாஞ்சில் நாடன் படைப்புகள், அவர் பற்றிய பதிவுகள் இங்கே சேகரிக்கப்படுகின்றன)
 5. ஞாநி
 6. இரா. முருகன்
 7. பிரபஞ்சன்
 8. சுப்ரபாரதி மணியன்
 9. பா. ராகவன்
 10. கடுகு (அகஸ்தியன்)

போனசாக ஐந்து தளங்கள்

 1. வண்ணதாசன் (கல்யாண்ஜி)
 2. சுந்தர ராமசாமி
 3. பாலகுமாரன் – infrequent updates
 4. விமலாதித்த மாமல்லன் – இவருக்கு ஜெயமோகன் மீது கடுப்பு. அவரது சில குற்றச்சாட்டுகளைப் பற்றி ஜெயமோகன்தான் சொல்ல முடியும். வேண்டாத மருமகள் மீது குறை கண்டுபிடிக்கும் போல மாமியார் போலவும் சில பதிவுகள் வருகின்றன. ஆனால் பல நல்ல சிறுகதைகள் இங்கே கிடைக்கின்றன.
 5. பெருமாள் முருகன் – infrequent updates

ஓரளவு தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் (ஆங்கில அகரவரிசைப்படி)

 1. ஆபிதீன் பக்கங்கள் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
 2. அரவிந்தன் நீலகண்டன் – அவரது ப்ளாக், தமிழ் பேப்பர் தளத்தில், தமிழ் ஹிந்து தளத்தில்
 3. பாரதியின் கவிதைகள் – பாரதி படைப்புகள் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.
 4. சாரு நிவேதிதா – நான் படிப்பதில்லை, அதனால் ரெகுலராக அப்டேட் ஆகிறதா என்று தெரியாது.
 5. சிட்டிதி.ஜா.வுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி எழுதிய சிட்டி சுந்தரராஜன் மறைந்து ஆறேழு வருஷம் ஆகிவிட்டது. அவர் எழுதிக்கொண்டிருந்த ப்ளாக் இது. Last update in 2004
 6. தமயந்தி
 7. கவிஞர் ஞானக்கூத்தன்
 8. கவிஞர் கலாப்ரியா படித்ததில்லை.
 9. மாலன் – Infrequent updates
 10. என். சொக்கன் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
 11. நாகார்ஜுனன் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
 12. நாகூர் ரூமி படித்ததில்லை.
 13. பிரமிள் – சிலாகிக்கப்படும் கவிஞர், நான் படித்ததில்லை.
 14. ஷோபா சக்தி – படித்ததில்லை. ஈழத் தமிழர், கொரில்லா என்ற புத்தகத்தை எழுதியவர்.
 15. சுதாங்கன் – இவர் பத்திரிகையாளர், புத்தகங்கள் பதித்ததில்லை என்று நினைக்கிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை. சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.
 16. தமிழ்மகன் (வெட்டுப்புலி எழுதியவர்)
 17. ராமச்சந்திரன் உஷா (நுனிப்புல்)
 18. வே. சபாநாயகம் (நினைவுத் தடங்கள்)
 19. வெங்கட் சாமிநாதன் – Last update in 2008
 20. கவிஞர் விக்ரமாதித்யன் (குறுக்குத்துறை)

தெரியாதவர்கள் (ஆங்கில அகரவரிசைப்படி)

 1. அகநாழிகை பொன். வாசுதேவன் உரையாடல் சிறுகதைப் போட்டியில் இவரும் ஒரு பரிசை வென்றார் என்று நினைவு.
 2. அப்பாதுரை – நடராஜன் பாஸ்கரின் (natbas) கருத்துப்படி இவர் இணையத்தின் சிறந்த கதைகளை இங்கு எழுதுகிறார்
 3. அய்யனார் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 4. அய்யப்ப மாதவன் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 5. அழகியசிங்கர் (நவீன விருட்சம்) படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 6. பிரம்மராஜன் (Brammarajan’s Polyphonic poems) படித்ததில்லை.
 7. செல்லமுத்து குப்புசாமி படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 8. சிறில் அலெக்ஸ் படித்ததில்லை. ஜெயமோகனுக்கு இவர்தான் தளம் அமைத்துத் தந்தார் என்று கேள்வி. நடராஜன் பாஸ்கர் (natbas) இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 9. தளவாய் சுந்தரம் படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 10. எட்டுத்திக்கும் – கவிதைத் தளம் போல தெரிகிறது. அழியாச்சுடர்கள் ராம் தந்த சுட்டி.
 11. ஜமாலன் (மொழியும் நிலமும்) அழியாச்சுடர்கள் ராம் தந்த சுட்டி.
 12. காஞ்சி ரகுராம் natbas சொல்வது – “புத்தகம் எதுவும் போடவில்லை. ஆனால் அது தமிழின் குறை- அதற்காக இவரை எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவிட முடியாது.”
 13. கடற்கரய் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 14. காலபைரவன் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 15. குட்டி ரேவதி – படித்ததில்லை.
 16. லீனா மணிமேகலை – படித்ததில்லை.
 17. மகுடேசுவரன் – படித்ததில்லை.
 18. மருதன் – கிழக்கு ஆசிரியராம். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 19. “மரபின் மைந்தன்” முத்தையா சுட்டி தந்தது natbas.
 20. நேசமித்ரன் – கவிஞர் என்று நினைக்கிறேன். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 21. நிஜந்தன் படித்ததில்லை. சுட்டி கொடுத்தவர் நடராஜன் பாஸ்கர் (natbas).
 22. பி.கே. சிவகுமார் – “வார்த்தை” பத்திரிகை நடத்துபவர் (பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்)
 23. பாமரன் – இவர் யாரென்று தெரியாது, படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 24. ஆர். முத்துக்குமார் – கிழக்கு ஆசிரியராம். படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 25. ரமேஷ் வைத்யா (பேனா மினுக்கல்) – இவர் யாரென்று தெரியாது, படித்ததில்லை. அழியாச்சுடர்கள் ராம் இவரது சுட்டியை தன் மறுமொழியில் கொடுத்திருந்தார்.
 26. ரிஷான் ஷெரிஃப் natbas சொல்வது – “இளைஞர் என்று நினைக்கிறேன். அண்மையில் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள் என்று ஞாபகம்.”
 27. சித்தார்த் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு, ஆங்கில இலக்கியம், விமரிசனம் சார்ந்த பார்வை. சுட்டி கொடுத்தவர் நடராஜன் பாஸ்கர் (natbas).
 28. விஜய் மகேந்திரன் படித்ததில்லை. விஜய் மகேந்திரனே தன் சுட்டியை கொடுத்திருக்கிறார்.

இவர்கள் சொந்தமாக எழுதுவதாகத் தெரியவில்லை, ஆனால் படிப்பு சம்பந்தப்பட்ட தளங்களை நடத்துகிறார்கள். சுட்டிகள் இங்கே சேர்க்கப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.

 1. அ.ராமசாமி – மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையின் தலைவர். அவருடைய ரசனையும் என்னுடைய ரசனையும் முழு இசைவானதில்லை. ஆனால் அவர் தமிழ் சிறுகதை, நாவல் உலகத்தைப் பற்றி எழுதுபவை நல்ல அறிமுகங்கள் என்று கருதுகிறேன். குறிப்பாக அவருடைய கதைவெளி மனிதர்கள் சீரிஸ் முக்கியமான ஒன்று.
 2. அழியாச்சுடர்கள்
 3. பத்ரி சேஷாத்ரி
 4. பாஸ்கி ரெவ்யூஸ் என்ற பேரில் புத்தக விமர்சன தளம் – நன்றாக இருக்கிறது.
 5. ஜிவீ (GV) – பழைய எழுத்தாளர்களைப் பற்றிய உருப்படியான கட்டுரைகள்.
 6. கிங் விஸ்வா – தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தளத்தில் எழுதுகிறார். நீங்கள் காமிக்ஸ் விசிறி ஆக இருந்தால் மிஸ் செய்யாதீர்கள்.

சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக அழியாச்சுடர்கள் ராம் தனது ரீடர் பண்டிலைக் கொடுத்திருக்கிறார், அந்த பண்டிலில் உள்ள அத்தனை தளங்களையும் இங்கே க்ளிக்கி உங்கள் கூகிள் ரீடரில் சேர்த்துக் கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புடைய சுட்டி: மூலப்பதிவு

Advertisements

From → Reading

9 பின்னூட்டங்கள்
 1. natbas permalink

  ஹைலைட் பண்றதுக்காக கொஞ்சம் துடுக்குத்தனமா பின்னூட்டம்தானேன்னு எழுதிட்டேன்… அதுக்காக யாரும் சண்டைக்கு வந்துராதீங்கப்பா!

  Like

 2. இன்றைக்கு தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனின் பெயரை விட்டுவிட்டீர்களே! அவரது எழுத்துக்களை இணையத்தில் கண்டிப்பாகப் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

  அறிவியல், தத்துவம், சூழலியல், வரலாறு, பண்பாடு என்று பல தளங்களில் ஆழமான வாசிப்பும், கூரிய பார்வையும் கொண்டவர். ’கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸும்’ என்ற பெயரில் அவரது அறிவியல் கட்டுரைகள் வந்துள்ளன (யுனைடட் ரைட்டர்ஸ் – தமிழினி வெளியீடு). ’ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்’ (கிழக்கு பதிப்பகம் மினிமேக்ஸ் வெளியீடு) என்ற நூலும் எழுதியிருக்கிறார். ’பண்பாட்டைப் பேசுதல்’ (தமிழ்ஹிந்து வெளியீடு) கட்டுரைத் தொகுப்பிலும் இவரது படைப்புகள் வந்துள்ளன.

  பழைய வலைப்பதிவு: http://arvindneela.blogspot.com/
  தமிழ்ஹிந்து கட்டுரைகள்: http://www.tamilhindu.com/author/aravindan/
  சிந்தனை செய்! (தமிழ்பேப்பர் கட்டுரைகள்): http://www.tamilpaper.net/?cat=11

  திண்ணை இதழிலும் ஏராளம் எழுதியிருக்கிறார். அங்கு தேடிக் கண்டுபிடிப்பது ஒரு பிரசினை.

  Like

 3. natbas permalink

  இவ்வளவு பேரை லிஸ்ட் செஞ்சிருக்கீங்க, இதுல இல்லாத எழுத்தாளர்கள் பட்டியல் இதைவிட இரண்டு மடங்கு இருக்கும். என்று நினைக்கிறேன்- பதிவு எழுதும் எழுத்தாளர்கள்’னு பட்டியல் போட்டிருந்தா இன்னும் சரியா இருக்கும்.

  ஒரு விவாதத்தை ஆரம்பிச்சு வைப்போம். முதுகுல மூணு மூக்குல மூணு’ன்னு விழுந்தாலும் ஹிட்டு ஹிட்டுதானே!- பொதுவா எழுத்தாளரையும் பதிவரையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பீர்கள்?

  நான் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிற எல்லாரும் எழுத்தாளர்கள்தான், இவர் எழுத்தாளர் என்று நட்பாஸ் மாதிரி நாலு பொது ஜனம் கைகாட்டுகிற எல்லாரும் எழுத்தாளர்தான்- அப்படின்னு தப்பு ஆட்டம் ஆடக் கூடாது: இதுக்கும் ரெண்டு மூணு ரூல்ஸாவது வெச்சுக்கணும். நான் ஆரம்பிச்சு வெக்கறேன், பாட்டை-

  எழுத்தாளர்கள் எவ்வளவு எழுதினாலும் அவங்களுக்கு தான் முப்பது வருஷம் முன்னால எழுதினதும் நினைவிருக்கும். சொல்லப்போனால் அவர்கள் இன்றைக்கு எழுதுவது அன்றைக்கு எழுதியதை ஒட்டியோ விலகியோ இருக்கும்: எத்தனை காலமானாலும் அவர்கள் எழுத்துக்கு ஒரு மையப்புள்ளி இருக்கும். அதிலிருந்து அவர்களது மொத்த எழுத்தும் வெவ்வேறு திசைகளில் விரிகிற வட்டமாக இருக்கும். அந்த ஒழுங்கு அவர்கள் பார்வையின் வழி வெளிப்படும்.

  பதிவர்களுக்கு முப்பது நாளைக்கு முன்னால தான் எழுதினது என்னன்னே மறந்து போயிருக்கும். இந்த நிமிஷம் என்ன தோணுதோ அதைப் பின்னூட்டமாகவோ, வலைப்பதிவாகவோ, பஸ்சிலோ, டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ, குழுமத்திலோ எங்கயோ பதிவு பண்ணியாகணும். அது முடிஞ்சதா, அடுத்த விவகாரத்தைப் பார்க்க போய்கிட்டே இருப்பாங்க. அப்பப்ப தோணறத சத்தமா பேசியாகணும்- அவ்வளவுதான். அதை ஆற அமர யோசிச்சு, நெறிபடுத்தி, தானே தனிச்சு நிக்கக் கூடிய படைப்பா மாற்றுவதற்கான அவசியமோ பொறுமையோ கிடையாது. அதனால இன்னுக்கு ஒண்ணு சொல்லுவாங்க நாளைக்கு ஒண்ணு சொல்லுவாங்க. இவங்க எழுதற காரணத்தால இவங்களையும் எழுத்தாளர்கள் என்று ஒப்புக் கொள்ள முடியாது.

  ஆனா சில பேர் இருக்காங்க, எப்பவும் ஒரே ஆளைத் தொடர்ந்து திட்டிக்கிட்டே இருப்பாங்க. அவங்களும் தங்கள் வசவை ‘ யோசிச்சு, நெறிபடுத்தி, தானே தனிச்சு நிக்கக் கூடிய படைப்பாக’ செய்திருக்கிறார்கள்தானே, அவங்க எழுத்தாளர்கள் இல்லியா என்று கேட்டா, நிச்சயமா அவங்க எழுத்தாளர்கள்தான்- சொல்லப்போனால் வசைமொழிதான் தமிழ் இலக்கியத்தின் இயல்பான மொழி- பாருங்க, இப்ப நான் கூட இலக்கியவாதி ஆயிட்டேன்! 🙂

  நான் சொன்னதில் ஏதாவது தப்பிருக்கா? நீங்க எழுத்தாளர்களை எப்படி டிபைன் பண்ணுவீங்க?

  தப்போ சரியோ, யாராவது ஆரம்பிச்சு வெச்சாதானே உண்டு?

  Like

  • பாஸ்கர் (நட்பாஸ்), // நீங்க எழுத்தாளர்களை எப்படி டிபைன் பண்ணுவீங்க? // நான் ரொம்ப எல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுகறதில்லீங்க. சிறுகதை எழுதி இருந்தால் எழுத்தாளர்; புத்தகம் வந்திருந்தால் எழுத்தாளர்; கவிஞர்னு யாராவது தெரிஞ்சவங்க சொன்னால் எழுத்தாளர். அவ்வளவுதான்!
   மணியன், மறுமொழிக்கு நன்றி!
   ஜடாயு, அ.நீ. பேரையும் இணைத்துவிடுகிறேன்.

   Like

 4. Maniyan permalink

  //சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக அழியாச்சுடர்கள் ராம் தனது ரீடர் பண்டிலைக் கொடுத்திருக்கிறார்,

  நன்றி இணைத்துக்கொண்டேன்…

  அதிகமான பதிவர்கள் விடுபட்டு உள்ளார்கள்.

  Like

 5. அன்புள்ள ஆர்.வி,

  அ. முத்துலிங்கம் தளத்தின் புதிய முகவரி: http://www.amuttu.net/

  Like

  • ஸ்ரீனிவாஸ், முத்துலிங்கம் முகவரியைத் திருத்திவிட்டேன்.

   Like

 6. Natbas-ன் எழுத்தாளர் பற்றிய விளக்கம், அருமை. கிட்டத்தட்ட அல்ல ரொம்பவே சரிதான். யோசித்துப் பார்த்தால், அதிலிருக்கும் உண்மையை மனசார உணரமுடிகிறது. கங்கிராட்ஸ்!

  Like

  • natbas permalink

   பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தமைக்கு மிக்க நன்றி சார்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: