புத்தாண்டு திட்டங்கள் (2011)

புது வருஷம் என்றால் திட்டங்கள் போடுவதும் இரண்டு நாள் போனதும் அவற்றை மறந்துவிடுவதும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து நடந்து வரும் பழக்கம். இந்த முறை படிப்பு+எழுத்து சம்பந்தமான திட்டங்களை இங்கே பதிக்கப் போகிறேன். அடுத்த வருஷம் பார்த்து சிரிக்கவாவது சிரிக்கலாம். 🙂

இந்த வருஷம் படிக்க வேண்டிய புத்தகங்கள்: (access இருப்பவை மட்டும்)

  1. வார் அண்ட் பீஸ் (War and Peace)
  2. க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் (Crime and Punishment)
  3. ப்ரிட்ஜ் ஆன் தி ட்ரினா (Bridge on the Drina)
  4. உமன் இன் த ட்யூன்ஸ் (Woman in the Dunes)
  5. பதேர் பாஞ்சாலி (Pather Panchali)
  6. கொற்றவை
  7. ஆழிசூழ் உலகு
  8. கடலுக்கு அப்பால் + புயலிலே ஒரு தோணி
  9. ஜே ஜே சில குறிப்புகள் (மறு வாசிப்பு)
  10. புளியமரத்தின் கதை (மறு வாசிப்பு)

இந்த வருஷம் ஒரு 25 சிறுகதைகளாவது எழுத வேண்டும். மனதில் இருக்கும் சிறுகதைக்கு நல்ல வடிவம் கிடைக்கவில்லை என்று எழுதுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன் – இது முட்டாள்தனம் என்று தெரிந்தாலும். அதுவும் ஜெயமோகனின் feedback படித்த பிறகு எழுதி வைத்திருக்கும் எந்த சிறுகதையும் திருப்தியாக இல்லை. சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். (ஏதாவது சிறுகதைப் போட்டி பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்) பத்திரிகைகளில் கதை வர வேண்டும். (ஆங்கிலம், தமிழ் இரண்டிலும்)

நாலு சிறுகதைகளையாவது தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இரண்டு சிறுகதைகளையாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.

பார்ப்போம்!

5 thoughts on “புத்தாண்டு திட்டங்கள் (2011)

  1. திட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்!!!

    //இந்த வருஷம் ஒரு 25 சிறுகதைகளாவது எழுத வேண்டும்.//

    அடியேனின் யோசனை- 365/25. இரண்டு வாரங்களுக்கு ஒரு சிறுகதை என்று எழுதினால் மிக சுலபமாக இவ்வாண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி அன்று லட்சியத்தை நிறைவு செய்து விட்டு மிச்ச நாட்கள் ஹாயாக சும்மா இருக்கலாம்! 🙂

    Like

    1. பின் யோசனை: //நாலு சிறுகதைகளையாவது தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இரண்டு சிறுகதைகளையாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.??

      அந்த இரண்டு வாரங்களிலும் இந்த வேலையை செய்யலாம். ஏற்கனவே எழுதப்பட்ட கதை என்பதால் இதை செய்வதில் சிரமம் இருக்காது. 🙂

      இதிலும் வெற்றி பெற வாழ்த்துகள்!

      Like

  2. தினமலர் – வரமலரில் நிறுவனரின் நினைவாக ஒரு சிறுகதை போட்டி இருக்கிறது. மிக விரைவில் வரும் என நினைக்கிறேன். மிக நீண்ட சிறுகதை எழுத நாளிதழ்களின் இணைப்புகளாக வருபவைதான் சிறந்தது.

    குமுதம், ஆனந்த விகடனெல்லாம் ஒரு பக்க கதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ராணி இதழில் கூட முயற்சிக்கலாம். மற்றபடி அவள், சினேகிதி என இதழ்களுக்கு பஞ்சமேயில்லை.

    முயற்சிக்கு முன்பே வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்.

    Like

  3. பாஸ்கர், (நட்பாஸ்) // இவ்வாண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி அன்று லட்சியத்தை நிறைவு செய்து விட்டு மிச்ச நாட்கள் ஹாயாக சும்மா இருக்கலாம்! // கலக்கிட்டீங்க!

    ஜெகதீஸ்வரன், // தினமலர் – வரமலரில் நிறுவனரின் நினைவாக ஒரு சிறுகதை போட்டி இருக்கிறது. மிக விரைவில் வரும் என நினைக்கிறேன். // உங்கள் கண்ணில் பட்டால் சொல்லுங்க!

    உங்கள் இருவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.