கவிஞர் பாரதி – ஒரு மதிப்பீடு

இது ஒரு மீள்பதிப்பு, திருத்தங்களுடன்.

எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. பிடித்த கவிதைகள் மிகவும் கொஞ்சமே. அதுவும் பிடித்த நவீன தமிழ்க் கவிதைகள், புதுக்கவிதைகள் அபூர்வம். இதற்கு இரண்டே இரண்டு விதிவிலக்குகள் – ஒன்று பாரதி, ஒன்று ந. பிச்சமூர்த்தி. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை என் இருபதுகளில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் பலத்த சிபாரிசில் படித்தேன். இப்போது ஏதோ கடவுள் வரும் கவிதை ஒன்றுதான் ஞாபகம் இருக்கிறது. ஆனால் பல கவிதைகள் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

பாரதியை ஏன் பிடித்திருக்கிறது? சிறு வயதிலிருந்தே அவர் ஒரு மகாகவி என்று மூளைச்சலவை செய்யப்பட்டதாலா? இல்லை அவர் உண்மையிலேயே மகாகவியா? இதற்கு பதில் சொல்வது கஷ்டம்.

கவிதையை பற்றி எனக்கு மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது. நல்ல கவிதைக்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அது உணர்ச்சிகளை தட்டி எழுப்ப வேண்டும். படித்த பிறகு நிச்சயமாக கொஞ்ச நேரமாவது அதில் வெளிப்படையாக சொல்லப்படாத விஷயங்களைப் பற்றி யோசிக்க வைக்க வேண்டும். கதையும் கட்டுரையும் போல மெதுவான பில்டப் இருக்க முடியாது. ஒரு கவிதை என்ன மிஞ்சி மிஞ்சி போனால் நூறு வரி இருக்குமா? அதற்குள் சொல்ல வருவதை சொல்லிவிட வேண்டும். (பெரும் கவிதைகள் காவியமாகிவிடுகின்றன.) சந்தம் இருந்தால் இன்னும் உத்தமம். ஆனால் சந்தம் மொழிபெயர்ப்பிலும் வருவது கஷ்டம். மொழி இல்லாவிட்டால் ஏது சந்தம்? (புதுக் கவிதைக்காரர்களுக்கு பிரச்சினை குறைவு) “சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு” என்று வரும் பீமனின் சபதத்தை படிக்க முடியாது, பாடத்தான் முடியும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அந்த சந்தத்துக்கு எங்கே போவது? பொழுது போகாத நேரத்தில் உங்களுக்கு பிடித்த ஒரு பாரதி கவிதையை வேறு மொழியில் எழுதிப் பாருங்கள். தமிழின் வேகம், சந்தம், நயம் வருகிறதா? நான் கன்னடியனுக்கும், கனடியனுக்கும், அமெரிக்கனுக்கும், ஆந்திரனுக்கும் இதை எப்படி கொண்டு போக முடியும்?

சிறு வயதிலிருந்து அவர் கவிதைகள் அருமையானவை என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளிப்பனிமலை, ஜய ஜய பவானி, பாருக்குள்ளே நல்ல நாடு, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், காற்று வெளியிடை கண்ணம்மா, கூலி மிக கேட்பான், சின்னஞ்சிறு கிளியே, வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, ஓடி விளையாடு பாப்பா, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா, சுட்டும் விழி சுடர்தான் போன்ற பல கவிதைகள் என் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி, உத்வேகம் கொஞ்சநஞ்சம் இல்லை. அஞ்சு தலைப் பாம்பென்பான் அப்பன், மகன் ஆறு தலை என்றுவிட்டால் நெஞ்சம் பகைத்திடுவார் என்று பாடும்போது கூடவே அடச்சே! என்று இன்னும் தோன்றுகிறது. எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்ற வரிகளைக் கேட்டால் இப்போதும் சில சமயம் கண்ணில் நீர் மல்குகிறது. ஆனால் அந்த உத்வேகத்தை தமிழுக்கு மிக நெருங்கிய உறவுள்ள ஒரு மலையாளியிடம் கூட என்னால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்றால் இவை எல்லாம் உண்மையிலே நல்ல கவிதையா இல்லை சிறு வயதில் ஆழப் பதிந்தவையா?

சிறு வயதில் இவை எல்லாம் பிடித்திருந்ததற்கு சந்தமும் ஒரு முக்கிய காரணம். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று பாட ஆரம்பித்தால் உடம்பு தானாக கொஞ்சம் ஆடுகிறது. தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா! என்று சொல்லிப் பாருங்கள்! மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் என்று பாடிப் பாருங்கள்!

ஆனால் இவரை மொழிபெயர்த்தால்?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – When someone mentions Tamil Nadu, Sweet honey pours into my ear

உங்களுக்கு எது பிடித்திருக்கிறது? தமிழ் அறியாத உங்கள் நண்பரிடம் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை சொல்லிப் பாருங்கள். நான் நல்ல மொழி பெயர்ப்பாளன் அல்லன். ஆனால் இதை எப்படி மொழி பெயர்த்தாலும் இவ்வளவுதான்! Enough said.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு என்ற பாட்டும் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அது சிறந்த கவிதை இல்லை, சிறந்த சந்தம் மட்டுமே கொண்டது என்று எனக்கு தெரிகிறது. பாரதியாரின் பாட்டுகளை பற்றி என்னால் இப்படி சொல்ல முடிவதே இல்லை.

கவிதையை ரசிக்க தெரியாதது என்னுடைய பலவீனமாக இருக்கலாம். ஆனால் எனக்கு தோன்றும் வரை – பாரதி ஒரு அபாரமான தமிழ்க் கவிஞர். அவ்வளவுதான். உலக மகாகவி எல்லாம் இல்லை. என் கண்ணில் யாருமே உலக மகாகவி இல்லை, அது வேறு விஷயம்.

தமிழ் நாட்டில் அவருக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் இருக்கிறது. காந்தி, பெரியார், காமராஜ் போன்றவர்களுக்கு இருப்பதை போல. அந்த ஒளி வட்டத்தை உடைத்து அவரை பார்ப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால் அவரது கவித்திறன் என்னவென்று யாருமே அலசி நான் பார்க்கவில்லை. பதிவர் ஜெயபாரதன் என் மதிப்பிற்குரியவர். ஆனால் அவர் எழுதிய மதிப்பீட்டை பாருங்கள், அவர் ஒரு பௌதிக கவி, வேதியியல் கவி என்ற ரேஞ்சில் எழுதி இருக்கிறார். இந்த மாதிரி புகழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இல்லை என்றால் “திராவிட” மதிப்பீடுகள். வீரமணி ஒரு முறை அவர் ஆரியன் என்ற வார்த்தையை உயர்ந்தவன் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் என்று குறை சொல்லி இருந்தார். அவர் எழுதிய காலத்தில் அதுதான் அர்த்தம். கொஞ்சம் விட்டால் “பறையனுக்கும் இன்று தீயர் புலையனுக்கும் விடுதலை” என்று எழுதிவிட்டார், “பறையன்” என்று சொன்னவர் மீது தீண்டாமை கேஸ் போடுங்கள் என்பார்.

ரசிகமணி டி.கே.சி. கம்பனை சாதாரண மக்களுக்கு கொண்டு வந்தாராம். அந்த மாதிரி பாரதியாரை யாருமே அலசவில்லை. அப்படி அலசக் கூடிய திறமை உள்ளவர்களும் எதுக்குடா வம்பு என்று விலகி விடுகிறார்கள். ஒரு காலத்தில் கல்கிக்கும் பல பாரதி பக்தர்களுக்கும் பாரதி மகாகவியா இல்லையா என்று விவாதம் நடந்ததாம். ஒரு வேளை அப்போது நான் நினைக்கும்படி நிறை குறைகள் இரண்டுமே பேசப்பட்டனவோ என்னவோ தெரியவில்லை.

சுற்றி வளைப்பானேன்? என் பலவீனமோ, என்னவோ எனக்கு தெரியாது. பாரதியை ஒரு கவிஞராக மதிப்பிட என்னால் முடியாது. எனக்கு அவர் பிடித்த கவிஞர். அவர் உலக மகாகவியோ இல்லையோ என்னால் சொல்ல முடியாது. எந்த கவிஞரும் மொழி என்ற எல்லையை தாண்டுவது கஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

அவரது வசன கவிதைகள் – காற்று, இரண்டு கயிறுகளை வைத்து என்ன கலக்கு கலக்கி இருக்கிறார்! – எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு விதத்தில் அவைதான் இன்றைய புதுக் கவிதைக்கு முன்னோடி. கவித்துவமான வசனம் என்பது என் போன்ற ஞான சூன்யத்துக்குக் கூட புரிந்துவிடுகிறது.

அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ஞானரதம். ஆங்கிலத்தின் முதல் அகராதியைப் பதித்த சாமுவேல் ஜான்சன் எழுதிய ரசேலாஸ் என்ற புத்தகத்தோடு ஒப்பிடலாம். (ஆனால் அதை விட சிறந்த புத்தகம்). அந்த அற்புதமான புத்தகத்தை யாரும் – என் reference ஆன ஜெயமோகன் உட்பட – பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் கண்ணில் அது கமலாம்பாள், பத்மாவதி சரித்திரத்தோடு ஒப்பிடக் கூடியது. முடிவடையாத புத்தகங்களான சின்னச் சங்கரன் கதை, சந்திரிகையின் கதை ஆகியவை முற்றுப் பெற்றிருந்தால் நன்றாக வந்திருக்கும்.

ஆனால் பாரதிக்கு பல முகங்கள் இருக்கின்றன. அவர் அரசியல் விமர்சகர்; இதழியலாளர்; எழுத்தாளர்; சுதந்திர போராட்ட வீரர். தமிழ் எழுத்தில் ஒரு புரட்சியாளர். அதைப் பற்றி எல்லாம் இங்கே.

10 thoughts on “கவிஞர் பாரதி – ஒரு மதிப்பீடு

 1. RV,
  நல்ல பதிவு. பாரதியைப் பற்றி சமநிலையில் அலசுவது தமிழர்களுக்குக் கடினம்தான். தாகூருக்கு Yeats, Ezra Pound போன்றவர்களின் கவனம் கிடைத்தமாதிரி, பாரதிக்கு ஆங்கில உலகில் காட்ஃபாதர் அன்று இல்லை என்பதும் ஒரு குறைதான் (தமிழுலகில் இருந்தார்களா என்று கேட்காதீர்கள்). பின்னாளில் தாகூருமே தன்னைப்பற்றிய அவர்களது பிம்பங்களை உடைத்ததால் அவர்களின் ஆதரவை இழந்தார் என்றே படித்திருக்கிறேன். உலகம் என்ன நினைத்தால் என்ன, நமக்கு பாரதி பெருங்கவிஞர்தான் என்கிற அளவில் நின்றுவிடுவதே மேல். அவரது சில கவிதைகள் வார்த்தைகளின் வீரியத்தையும், உணர்ச்சிகளின் உத்வேகத்தையும் மட்டுமே அடிப்படியாகக் கொண்டவை…மொழியாக்கம் செய்வதற்கு ஆங்கிலப்புலமை மிக்க பாரதிதான் வேண்டும். நான் எனக்குப்பிடித்த பாரதி கவிதைகள் சிலவற்றை இரண்டாடுகளுக்கு முன் மொழிபெயர்த்துள்ளேன்…மிகக்கடினமாகத்தான் இருந்தது…not sure if I had done justice to him.
  http://tkan.wordpress.com/2008/10/13/more-from-bharati/
  http://tkan.wordpress.com/2008/10/13/challenging-the-god/
  http://tkan.wordpress.com/2008/10/07/crafting-bharatis-veena/

  Like

 2. பாரதியின் கவிதைகளில் உள்ள சுவை , செரிவு இரண்டும் காலங்கள் கடந்து நிற்பதிலிருந்தே அவர் மகாகவி எனத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவருடைய கருத்திலிருந்து மாறுபடுபவர்கள் கூட அவரை சிறந்த கவிஞர் என்றே போற்றுகின்றனர்.

  ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே
  இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’

  தமிழ்நாடு என்கிற மாநிலம் உருவாதற்கு முன் அதனை நிதர்சனமாக (கனவாக அல்ல) காண்கிறாரே…இது போன்ற பண்புகள் தானே அவரை மகாகவியாக்குகிறது.

  Like

 3. கால தாமதமாக மறுமொழி எழுதுவதற்கு கண்ணனும் முரளியும் மன்னிக்க வேண்டும்.

  கண்ணன் உங்கள் மொழிபெயர்ப்புகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் பாரதியின் கவிதைகளை தமிழில் படிப்பதற்கும் ஆங்கிலத்தில் ஒரு மொழிபெயர்ப்பைப் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது…

  முரளி, அவரது கவிதைகள் மொழிபெயர்க்கக் கூடியவை இல்ல என்று கருதுகிறேன். அப்படி என்றால் வேறு மொழியினர் இவரை நல்ல கவிஞர் என்று ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்?

  Like

  1. எல்லா மொழிபெயர்ப்பு கவிதைகளும் தாய்மொழியின் அடநாதத்தைக் கொண்டுவர முயல்கின்றன. ஆனால் வெற்றிப் பெறுகின்றனவா என்பது கேள்விக்குறியே. மற்றவர்கள் பாரதியைப் போற்ற அவரது வாழ்க்கையை அறியலாம் பின் கவிதைக்கு வரலாம்.

   ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும்
   உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி’ என வைரமுத்து எழுதினால் அதை எப்படி மொழிபெயர்ப்பது ?

   மொழிபெயர்க்க முடியாதது பாரதியின் குற்றமன்றே.

   Like

   1. // மொழிபெயர்க்க முடியாதது பாரதியின் குற்றமன்றே. // முரளி, தமிழ் தெரியாதது அந்நிய மொழி வாசகர்களின் குற்றமும் இல்லையே! மொழியைத் தாண்டுவதுதான் இலக்கியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த விஷயத்தில் கவிதைகள், பாரதியார் பாடு கொஞ்சம் கஷ்டம்தான்.

    Like

 4. பின்வருவது பாரதியைப் பற்றி நான் எழுதிய ஓர் ஆசிரியப்பா:

  பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
  சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்
  செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
  மெல்லமாய்ச் சொன்னார் ‘மதியத்திற்கு அரிசியில்லை!’

  Like

 5. I just saw this post.

  You have made many constroversial statements. But as they are all too personal to you, no one can controvert them.

  A few words may be sufficient from me, I think.

  மகாகவி You are throwing up your hands over this title to him confessing you dont know how the title fits him, or any other poet who was given such title.

  The answer could be that the impact a poet has on a large number of people, at any given time, or at a longer time, decides the title.

  In the case of this poet, he had a huge impact on Tamil speakers. He wrote such poems calculated to rouse their patriotism and anti-bristish sentiments. Justly he was chased by police. He had to flee. Meeting after meeting, his songs were sung and the patriotic fervour, much needed then, was around, thick and fast. The only poet who did it, in TN.

  So, he was everywhere during the last part of the freedom struggle – the period he was born and briefly lived.

  I therefore think only for that alone, he deserved the title. If we take his other poems, it was a calculated attempt by his fanatic followers to spread him. So much so that every school child, including you, as confessed by you, seems to have been brainswashed to think that he alone is a good poet. Add to this, the image his fans made out of him is one of a virtuous guy beyond an iota of reproach. And all criticism if it remotely is negative, was scathed.

  Leaving that brainwashing part aside, we could still say his other poems impacted deeply across the sections of Tamil speaking population, esp the devotional lyrics among Hindus.

  A few words on one point only. Yet another point you have slightly remarked: namely his critics accusing him of being a pro hindutava.

  It is better to read his essays, not his poems, to verify whether the critics have indeed justly evaluated him. Please remember he attempted to make amends to his pro hindutva stand also. For e.g the poem ‘Address to Shivaji’ initially had lines saying all Muslims should get out as they were foreigners. The poem was published and, as expected, caused deep anguish in the minds of Tamil muslim. The news went to him; the next day, he aplogised and the apology was published on first page of the paper he was editing. Next to the apology the same poem with all the harsh deleted.

  Please read his essays which appeared daily or regularly in various journals he was a part of. Luckily for us, every essay that he authored has been preserved for posterity.

  I dont want to pre-empt your of ideas or prejudice your minds for or against him; I would only say you may read them for yourself; and evaluate him on your own.

  For that, it is better to unlearn what you have learnt at school first.

  Break free first. I wont imply you will arrive at the conclusiion that the criticism against him is valid. I imply that the Bharti we know is all from his poems. The other face lies in his prose. Complement the two; you get the whole.

  The whole perhaps may be worthy of veneration – who knows ?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.