சுந்தர ராமசாமியின் “விகாசம்”

எனக்கு மிகவும் பிடித்த சுந்தர ராமசாமி சிறுகதை இதுதான். காலாவதியாகும் ஒரு திறமை, ராவுத்தர் அதை எதிர்கொள்ளும் விதம் இரண்டும் எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இன்றைய recession உலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும். இதற்கு மேல் விவரிக்க விரும்பவில்லை, நேராக படித்துக் கொள்ளுங்கள்!

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆச்சரியம் இது ஜெயமோகனின் பெரிய லிஸ்டில் கூட இடம் பெறவில்லை.

என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை.

பொன்னியின் செல்வன்

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் முக்கால்வாசி தமிழர்களுக்குத் தெரிந்தவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர். அவரது ப்ரோக்ராமை வளைகுடா பகுதித் தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதிருந்தும் கேட்பவர்கள் உண்டு.

ஸ்ரீனிவாசா கல்கி ரசிகரும் கூட. இப்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஆடியோ வடிவில் இன்டர்நெட்டில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். முதல் இரண்டு பாகம் முடிந்துவிட்டது, மூன்றாவது பாகத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறார். தமிழ் படிக்கத் தெரியாத இரண்டாம் தலைமுறை தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பதின்ம வயதினரை கேட்கச் சொல்லலாம். ஐபாடில் டவுன்லோட் செய்து காரில் போகும்போது கேட்கலாம். எல்லா விதத்திலும் சவுகரியம்!