படிக்க விரும்பும் சரித்திர நாவல்கள்

இந்தப் பதிவுகள் முன்பு எப்போதோ கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதப்பட்டவற்றை (கணிசமாக) திருத்தி எழுதப்பட்டவை என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். அப்போது வந்த மறுமொழிகளில் சிலர் வேறு புத்தகங்களை சிபாரிசு செய்திருந்தனர்.

பத்திரிகையாளர் ஞானி அரு. ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார்.

எழுத்தாளர் மாலன் பாலகிருஷ்ண நாயுடு எழுதிய டணாய்க்கன் கோட்டை புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார்.

நண்பர் நந்தாவின் சிபாரிசுகள்:

 1. சேது நாட்டு வேங்கை, இந்திரா சௌந்தர்ராஜன்: கிழவன் சேதுபதியைப் பற்றியது. ராமேஸ்வரம் மற்றும் ராமலிங்க விலாசம் என்று அந்த அரண்மனையைப் பற்றி நன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
 2. பொன் அந்தி, எஸ்.பாலசுப்ரமணியம்: மருதநாயகத்தை வைத்து எழுதப்பட்டது
 3. காஞ்சிபுரத்தான், ரா.கி.ரங்கராஜன்: பாளையத்தார்கள் காலத்திய முழுக்க முழுக்க கற்பனைக் கதை. நடை நன்றாய் இருக்கும்
 4. பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி

பாண்டிமாதேவி சென்னை லைப்ரரி தளத்தில் கிடைக்கிறது.

நந்தா மேல் எனக்கு கொஞ்சம் காண்டு. அவர் ரமணிசந்திரனை பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்துவிட்டு எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஒரு ரமணிசந்திரன் புத்தகமாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.:-)

இவற்றைத் தவிர நான் படிக்க விரும்புபவை:

 1. அனுஷா வெங்கடேஷ் எழுதிய காவிரி மைந்தன் – இது பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாம்
 2. ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா
 3. பாலகுமாரன் எழுதிய உடையார்
 4. சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம்
 5. ரா.கி. ரங்கராஜன் எழுதிய நான், கிருஷ்ணதேவராயன்
 6. நா.பா.வின் மணிபல்லவம்
 7. இவற்றைத் தவிர ஜெயமோகன் சிபாரிசுகளில் நான் இன்னும் படிக்காதவை: ஆலவாய் அழகன் மற்றும் பத்தினிக் கோட்டம் (ஜெகசிற்பியன்), வேங்கையின் மைந்தன் மற்றும் வெற்றித்திருநகர் (அகிலன்), கோபுர கலசம் (எஸ்.எஸ். தென்னரசு), ரோமாபுரிப் பாண்டியன் மற்றும் தென்பாண்டி சிங்கம் (மு. கருணாநிதி), நந்திபுரத்து நாயகி (விக்ரமன்). எனக்கு ஜெகசிற்பியன் என்றாலே இப்போதெல்லாம் கொஞ்சம் பயம்தான். இருந்தாலும் புத்தகங்கள் கிடைத்தால் படித்துவிடுவது என்று இருக்கிறேன்.

  தொடரும்…

  தொடர்புடைய பதிவுகள்:
  தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி), பகுதி 2 (கல்கியின் வாரிசுகள்)

14 thoughts on “படிக்க விரும்பும் சரித்திர நாவல்கள்

 1. ரா.கி.ரங்கராஜன் அவர்களின் (என்று நினைவு) ‘நான் கிருஷ்ணதேவராயன்’ படிக்கவும். கல்கியின் ராஜாக்கள் போல் இல்லாமல் நம்மைப் போல் முதுகு சொறிந்து கொண்டு இருக்கும் ராஜாவாக (நன்றி சுஜாதா!) ராயரே சொல்வது போல் எழுதியிருப்பார். விகடனில் வந்தது.

  Like

 2. டணாய்க்கன் கோட்டை சமீபத்தில் வாசித்தேன். ஒரு முயற்சி என்பதற்குமேல் ஒன்றுமே இல்லை.

  இளமையில் கவர்ந்த வீரபாண்டியன் மனைவி இப்போது மிகவும் சலிக்கிறது

  Like

 3. //# அனுஷா வெங்கடேஷ் எழுதிய காவிரி மைந்தன் – இது பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாம்///

  எங்கே கிடைக்கிறது என்றுத் தெரியுமா ? பல இடங்களில் தேடி கிடைக்கவில்லை

  Like

 4. வசந்தகுமார், “நான் கிருஷ்ணதேவராயன்” பற்றி கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி!

  ஜெயமோகன், தமிழில் சரித்திர நாவல் படிக்கும் ஆர்வத்தை கொன்றேவிடுவீர்கள் போலிருக்கிறது. 🙂 இந்த சுட்டிகளைப் பற்றி உங்கள் தளத்தில் எழுதியதற்கு நன்றி!

  கார்த்திக், காவிரி மைந்தன் உடுமலை.காம் தளத்தில் கிடைக்கிறது –

  Like

 5. தென்பாண்டி சிங்கத்தை உண்மையில் எழுதியது சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள். அடுத்தவர் புகழை திருடிக்கொள்ள அடுத்தவர் எழுதியதை தனதென கூறிக்கொள்ள எப்படிதான் மனசு வருதுனே தெரியல. இந்த தென்பாண்டி சிங்கம் ஒரு வார இதழில் தொடராக வந்திருக்கிறது. அதை தொகுத்து புத்தகமாக என் தந்தை வைத்திருந்தை நான் பார்திருக்கிறேன். அதெல்லாம் சரி ‘ராஜராஜன் விருது வாங்கும்போது கொஞ்சம் கூட வெட்கமா தெரியல. எப்படி?

  Like

 6. “Pon Andhi” by S.Bala Subramaniyan is a good novel. After reading this novel, I felt that Kamal should have releases Marudhanaayagam. “Sethu Naattu Vengai” is OK type novel. Sometime you will feel boring. I don’t know about “Romapuri Pandiyan”. But, “Thenpandi Singam” is one of the worst novels. “Pandi Madevi” is a good novel. Na.Pa. will create an aged wise man character in all his novels, like “Chanakya”. He will give more importance to that character alone. “Pathinik Kottam” first part is a good one. But, you have to be very patience to read the second part. At the end of first part itself, the story will be over. He tried to create the novel as a big one.

  Like

  1. களம்பூரன், உங்கள் பல மறுமொழிகளைப் படித்து இன்னொரு புத்தகப் பைத்தியம் என்று மகிழ்ச்சி அடைந்தேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.