தமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்?

எனக்கு மனீஷ் ஷர்மா என்று ஒரு நண்பன். இப்போது டெல்லி ஐஐடியில் வேலை பார்க்கிறான். எங்கள் ரசனை கொஞ்சம் ஒத்துப் போகும். அவனுக்கு அவ்வப்போது சில தமிழ் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை கொடுப்பது வழக்கம். ஒரு பத்து புத்தகம் கொடுத்திருந்தால் ஜாஸ்தி, புளியமரத்தின் கதை, அசோகமித்ரனின் சில புத்தகங்கள், ஜெயகாந்தனின் சில புத்தகங்கள் கொடுத்தது நினைவிருக்கிறது.

ஆனால் மொழிபெயர்ப்புகள் கிடைப்பது அபூர்வமே. மேலும் புத்தகமும் நன்றாக இருந்து மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா? உதாரணமாக விஷ்ணுபுரம், யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் ஸ்டைல், கி.ரா. போன்றவை மொழிபெயர்ப்பில் நன்றாக வருமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால் இ.பா., அசோகமித்திரன் போன்றவர்களை மொழிபெயர்ப்பது கொஞ்சம் சுலபம்.

உங்களுக்கு தெரிந்த நல்ல மொழிபெயர்ப்புகளை சொல்லுங்களேன்!

New Horizon Media-வின் இந்த சுட்டியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. (தகவல் தந்த சுல்தானுக்கு நன்றி)

நண்பர்கள் குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்புகள்:

  1. கே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்த Tamil New Poetry, Tamil Poetry Today (குறிப்பிட்டவர் பாஸ்கர்) – இவற்றைப் பற்றி வெங்கட் சாமிநாதன் இங்கே எழுதி இருக்கிறார்.
  2. நாஞ்சில் நாடனின் Against All Odds (குறிப்பிட்டவர் சுல்தான்)
  3. ஜெயமோகனின் Forest (தமிழ்ப் பெயர்: காடு) (குறிப்பிட்டவர் சுல்தான்)
  4. அசோகமித்ரனின் தண்ணீர் (குறிப்பிட்டவர் ஜெயமோகன்)
  5. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்ணா (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)
  6. பெருமாள் முருகனின் கூளமாதாரி (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)
  7. யுவன் சந்திரசேகரின் கானல்நதி புத்தகம் பத்மா நாராயணால் ஆங்கிலத்தில் Illusory River என்ற பேரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

7 thoughts on “தமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்?

  1. உங்கள் நண்பர் கவிதைப் பிரியர் என்றால். இந்த இரண்டு நூல்களையும் கொடுக்கலாம். வெங்கட் சாமிநாதன் அவர்கள் இதற்கு திண்ணையில் விமர்சனம் எழுதியுள்ளார்.

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=60802215&format=html

    tamil new poetry: ஆங்கிலத்தில் டாக்டர் கே.எஸ் சுப்ரமண்யன், Katha Poets Cafe வெளியீடு. விலை ரூ. 200

    tamil poetry today: ஆங்கிலத்தில் டாக்டர் கே.எஸ் சுப்ரமண்யன், வெளியீட்டாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. விலை ரூ 150

    நான் இந்த புத்தகங்கள் படித்ததில்லை. இதை புத்தகக் கண்காட்சியில் வாங்க முயற்சித்தேன் என் தம்பி மூலம். கிடைக்கவில்லை.

    Like

  2. What if your friend is a Tamil, who has perhaps studied studied briefly at school, and still does not ‘know’ or read Tamil? Some one like me. What book(s) in Tamil Grammar would you recommend to me to help me re-acquaint myself with Tamil? The school Tamil textbooks are not of much help in this case. 😐

    Like

  3. தமிழ் தெரியாத நண்பர்களுக்கு தமிழ் நாவல்களில் எந்த மொழியாக்கத்தைக் கொடுத்தாலும் ரசிக்க முடியவில்லை என்கிறார்கள். விதிவிலக்கு அசோகமித்திரனின் தண்ணீர் மட்டுமே

    Like

  4. மொழியாக்கங்களைச் செய்பவர்களுக்கு சமகால ஆங்கிலப்புனைவுமொழியில் அறிமுகமே இருப்பதில்லை. அவர்கள் ’பேராசிரியர் நடையில்’ மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதே காரணம். கர்ட் வேன்கார்டை தமிழுக்கு தமிழண்ணல் மொழியாக்கம் செய்தால் எப்படி இருக்கும் அப்படி

    Like

  5. கிருஷ்ணா கிருஷ்ணா , குருதிபுனல்- ஆங்கிலத்தில் நன்றாகவே இருந்தது. பெருமாள் முருகனின் கூளமாதாரி ஆங்கில மொழிப்பெயப்பு வந்துள்ளது. ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் அக்கதை எப்படி இருக்கும்
    என்று தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

    Like

  6. மொழிபெயர்ப்புகள் பற்றி தகவல் தந்த பாஸ்கர், உஷா, ஜெயமோகன், சுல்தான் எல்லாருக்கும் நன்றி!

    // தமிழ் தெரியாத நண்பர்களுக்கு தமிழ் நாவல்களில் எந்த மொழியாக்கத்தைக் கொடுத்தாலும் ரசிக்க முடியவில்லை என்கிறார்கள். // ஜெயமோகன், பிரச்சினையே அதுதான். மொழிபெயர்ப்பின் தரம் நன்றாக இல்லாவிட்டால் உருப்படாமல் போய்விடும்.

    விஜயராகவன், இலக்கணம் பற்றி தவறான ஆளிடம் கேட்கிறீர்கள்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.