இன்று படித்தது – ஜெயமோகனின் “அறம்”

சும்மா வளவள என்று அறிமுகப்படுத்துவதில் அர்த்தமே இல்லை. நேராக படித்துக் கொள்ளுங்கள். ஜெயமோகனின் சிறுகதை – அறம். என் anthologyயில் இடம் பெறும்.

ஒரு உண்மையான எழுத்தாளர் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜெயமோகன் சொல்லி இருக்கிறார். எழுத்தாளர் யாரென்று சுலபமாக யூகிக்கலாம். அவருடைய அனுமதி இல்லாமல் நான் வெளியே சொல்வது சரி இல்லை. எனக்கு இப்போது இருக்கும் எரிச்சல் எல்லாம் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அவர் சொல்லியும் எனக்கு இதில் ஒரு சிறுகதையை காண முடியவில்லையே, நான் எழுத முயற்சி கூட செய்யவில்லையே என்பதுதான். 🙂