நாஞ்சில் நாடனின் “இடலாக்குடி ராசா”

இது வரை நான் படித்த நாஞ்சில் நாடன் புனைவுகளில் எனக்குப் பிடித்த சிறுகதை இதுதான். லௌகீக (லௌகீகத்துக்கு நல்ல தமிழில் என்ன சொல்வது?) வாழ்க்கையில் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழகாக எழுதி இருக்கிறார். வாழ்வில் களைப்பு ஏற்படும்போதெல்லாம் இதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு ஏற்படலாம். என்னத்துக்கு வளவள என்று பேசிக்கொண்டு? சுல்தான் இந்தக் கதையை பதித்திருக்கிறார், நேராக அங்கே போங்கள்!

1978-ஆம் ஆண்டு தீபம் இதழில் வெளிவந்திருக்கிறது. அப்போதெல்லாம் நா.பா.தான் தீபம் ஆசிரியர் என்று நினைக்கிறேன். நா.பா.வை ஆயிரம் குறை சொன்னாலும் அவர் இலக்கியத் தேடல் உள்ளவர் என்பது உண்மை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்