படிக்க விரும்பும் புத்தகம் – தோள்சீலைக் கலகம்

எனக்கு இருக்கும் ஒரு பிம்பம் – “கீழ்ஜாதி” நாடார் பெண்களுக்கு மார்பை மறைக்கும் மேலாடை அணியும் உரிமை காலம் காலமாக இல்லை. ஆங்கிலேய ஆட்சி வந்த பின் விழுமியங்கள் மாறி அவர்கள் மார்பை மறைக்கும் ஆடை அணிய விரும்பியபோது கடுமையாக போராடியே அந்த உரிமையைப் பெற வேண்டி இருந்தது.

எஸ்.இராமச்சந்திரன் + அ.கணேசன் எழுதி, தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) வெளியிட்டுள்ள ‘தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்கிற நூல் இது சரியான பிம்பம் இல்லை என்கிறதாம். கொஞ்சம் உண்மை, நிறைய ஒரு பக்கமான நோக்கு இரண்டும் கலந்தே இந்த பிம்பம் உருவாக்கி இருக்கிறதாம். “மேல்ஜாதி” நாயர் பெண்களுக்கே பல இடங்களில் இந்த உரிமை மறுக்கப்பட்டதாம். தோள்சீலைக் கழகத்துக்கு முப்பது வருஷத்துக்கு பின்தான் யாரோ ராணி இந்த உரிமையை நாயர் பெண்களுக்கு எல்லா இடத்திலும் வழங்கிய ஆணை இருக்கிறதாம்.

பொதுவாக அன்றைய ஐரோப்பியர்களுக்கும், குறிப்பாக மிஷனரிகளுக்கும் காட்டுமிராண்டிகளை உய்விக்க வந்தவர்கள் நாம் என்ற எண்ணம் இருந்தது என்றும், மார்பை மறைப்பது அவசியம் இல்லை என்று கருதக் கூடிய சமூகம் இருக்கக் கூடும் என்று அவர்களால் நினைக்க முடியவில்லை என்றும், தங்கள் கலாசார விழுமியங்களை இங்கே புகுத்த முயன்றதுதான் தோள்சீலைக் கழகத்தின் முக்கிய காரணம் என்றும் இந்த புத்தகம் சொல்கிறதாம். யாராவது படித்திருக்கிறீர்களா?

புத்தக ஆசிரியர்கள் இது பற்றி சொல்வனம் இதழில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் புத்தகத்தை விமர்சித்திருக்கிறார் .

விலை நூறு ரூபாய். உடுமலை தளத்தில் கிடைக்கிறது.