விடுதலைக்கு முற்பட்ட தென்னாசிய எழுத்து

South Asian literature in English, Pre-independence era என்று ஒரு லிஸ்டைப் பார்த்தேன். பயன்படுமோ என்று இங்கே கொடுத்திருக்கிறேன்.

நிறைய தமிழ்நாடு/இலங்கைக்காரர்கள் ஆங்கிலத்தில் நேராக எழுதியோ இல்லை தமிழிலிருந்து மொழிபெயர்த்தோ இருக்கிறார்கள். கேள்விப்படாத பல பேர்கள். ராபர்ட் கிளைவ் பற்றி நாடகம் எழுதிய கிருஷ்ண ஐயர் யார்? சங்கிலிக்கருப்பன் என்ற நாவலை எழுதிய சி. பார்த்தசாரதி யார்?

என் கண்ணில் பட்ட சில தமிழர்கள்:

பி.ஆர். ராஜம் ஐயர் – Aiyar, Bhaktulakunda R. Rajam, 1872-1898.
      True greatness, or Vasudeva Sastri. London: Allen and Unwin, 1925. An incomplete novel published serially in Prabudha Bharata, 1896-1898. Republished in the author’s collected works
      Rambles in Vedanta. Madras: Thompson & Co., 1905

மாதவையா(குசிகர்) – Madhaviah, Appavaiya, 1972-1925. pseud. Kushika
      Clarinda: a historical figure. Madras: Authors Press, 1915. viii, 258 p.
      Kushika’s short stories on marriage, reform and allied topics. Madras: Authors Press, 1924. 2 vols. First published as: Short stories, 1916.
      Lieut. Panju: a modern India. Madras: Authors Press, 1924. 210 p.

வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் – Aiyangar, Venbakkam V. Srinivasa, 1871-
      Sub-assistant magistrate of Sultanpet. Madras: Everyman’s Pub., n.d. – இந்த நாடகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.

கா.சி. வேங்கடரமணி – Venkataramani, Kaneripatna Sidhanatha, 1891
      Kandan, the patriot. 2nd ed. Madras. Svetaranya Ashrama, 1934. 288 p. – தமிழில் தேசபக்தன் கந்தன்
      Murugan, the tiller. London: Simpkin, Marshall, Hamilton, Kent, 1927. viii, 309 p. – தமிழில் முருகன் ஒரு உழவன்
Works about Venkataramani, Kaneripatna Sidhanatha – Isvaran, Manjeri S.
      Venkataramani: writer and thinker. Madras: n.p. 1932.

எஸ்.வி.வி. – Vijiaraghavachari, S.V. (sic), 1880-1950. pseud S.V.V.
      Chaff and grain. Madras: Haxley Press, 1934. 113 p.
      The holiday trip. Madras: P.R. Rama Iyer and Co., 1937. 113 p.
      More soap bubbles. Madras: n.p., 194?
      Soap bubbles: being humorour sketches. Madras: Alliance Co., 1944. ii, iii, 84 p.