அட்லஸ் ஷ்ரக்ட் சினிமா ட்ரெய்லர்

எய்ன் ராண்ட் (Ayn Rand) எழுதிய அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged) என் வாழ்வில் ஒரு seminal புத்தகம். பணக்காரன் என்றால் கெட்ட்வன், பணமே வாழ்வில் எல்லா தீமைகளுக்கும் காரணம், தொழிலதிபர்-முதலாளி என்றால் வில்லன் என்று சொல்லும் சினிமாவையே பார்த்து வளர்ந்த எனக்கு வேறு விழுமியங்களை காட்டிய புத்தகம். புத்தகத்தில் இருப்பது போல உலகம் கறுப்பு-வெள்ளை இல்லை, என்று இன்று உணர்ந்தாலும் அது முக்கியமான, எல்லாரும் – குறிப்பாக டீனேஜர்கள் – படித்தே ஆக வேண்டிய புத்தகம்.

சினிமாவாக வருகிறதாம். நடிக நடிகையர் இயக்குனர் யாரும் நான் கேள்விப்பட்டவர் இல்லை. ட்ரெய்லர் கீழே.