புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை

வேதசகாயகுமார் பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவர். புதுமைப்பித்தனின் படைப்புகளை ஆய்வு நோக்கத்தில் அணுகியவர்களில் முதல்வர், முதன்மையானவர். அவர் கட்டிய மாளிகை மீது பின்னால் வந்த வெங்கடாசலபதி போன்றவர்கள் கொடியை மட்டும்தான் பறக்கவிட்டிருக்கிறார்கள். அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தன் கதைகள் என்ற புத்தகத்தில் அவர் பேர் போகிற போக்கில் சொல்லப்பட்டிருப்பது பெரிய அநியாயம்.

குமாரின் ஆய்வின் கதை இப்போது அழியாச்சுடர்கள் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் எழுபதுகளில் – பணம், பதவி, புகழ் எந்த விதமான அங்கீகாரமும் கிடைக்காத காலம் – இப்படி தேடி அலைவதற்கு பெரிய உந்துசக்தி வேண்டும். சும்மா ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கும் என் போன்றவைகளால் சலாம்தான் வைக்க முடிகிறது. Hats off!

9 thoughts on “புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை

 1. சலபதி தன் ஆய்வின் கதையை சுருக்கமாக புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பில் எழுதி இருக்கிறார். (ராஜ் சந்திரா குறிப்பிடுவது இதைத்தானா இல்லை வேறு ஏதாவதா தெரியவில்லை. அதில் குமாரின் பங்களிப்பை ஒரு வரியில் – அவரும் ஏதோ செய்திருக்கிறார் என்ற தொனியில் – கடந்துவிடுகிறார். (நினைவிலிருந்து எழுதுகிறேன், புத்தகத்தைஎங்கே வைத்தேன் என்று தெரியவில்லை)

  Like

 2. மன்னிக்க…கொஞ்சம் குழம்பியது நானே…அந்த மறுப்பக்கம் விவரங்கள் ‘பு.பி கதைகள்’ தொகுப்பில் முழுமையாக இல்லை. ஆனால் சலபதி ஆகஸ்ட் 2000-ம் ஆண்டு தொகுப்பில் பக்கம் 26-ல் வேதசகாய குமாரின் ஆய்வில் இருந்த முரண்பாட்டை விளக்கியிருக்கிறார்.

  முழுமையாக கண்ணன் (நான் முன்னால் தப்பாக சொன்னது சலபதி) விளக்கியதை இங்கே: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60109243&format=html

  பி.கு. இந்த விவரங்கள் just FYI. குமாரின் மீது எனக்கு கோபமோ, சலபதி, கண்ணன் மீது ஆதரவோ எனக்கு இல்லை :). நான் முக்கியமாகக் கருதுவது பு.பி-னின் முழுத் தொகுப்பு. அது யாரிடமிருந்து வந்தாலும் எனக்கு ஓகே.

  Like

  1. அன்புள்ள ராஜ் சந்திரா,

   கண்ணனின் தரப்பை படித்தேன். எனக்கு கண்ணன் சொல்வதை சீர்தூக்கிப் பார்க்கும் அளவுக்கு பின்புலம் தெரியாது. ஆனால் அவர் சொல்லும் அத்தனையும் உண்மையாக இருந்தாலும் சரி; குமாரை விட சலபதியே செம்பதிப்பை கொண்டு வர தகுதியானவராக இருக்கலாம். குமார் ஒத்துழைக்க மறுத்திருக்கலாம். கசப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சலபதி குமாரின் ஆய்வை எப்படி ஒற்றை வரியில் தள்ள முடியும்? சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையைப் படித்துப்ப் பாருங்கள் – குமாரும் என்னவோ செஞ்சார் என்ற முறையில் ஒரே ஒரு வரி இருக்கிறது. குமார் சிறுகதைகளை கண்டுபிடித்தார், sources எங்கெல்லாம் இருக்கிறது என்று அடுத்தவர்களுக்கு வழிகாட்டினார், எல்லாவற்றையும் விட முக்கியம் – ஒரு methodology-யை கொண்டு வந்தார் – சிறுகதைகள் எங்கே, எதிலே, எப்போது பதிக்கப்பட்டன என்ற விவரம் வேண்டும் என்று அவருக்கு முன் யாரும் எந்த தமிழ் எழுத்தாளரைப் பற்றியும் நினைத்ததாக எனக்குத் தெரியவில்லை. அந்த விவரங்கள் எனக்கும் உங்களுக்கும் முக்கியமில்லை (நமக்கு கதைதான் முக்கியம்), ஆனால் academics-க்கு முக்கியம். சுரா வீட்டில் பல வருஷமாக கிடந்த பிரதியை சலபதி எந்த விதத்திலும் பயன்படுத்தவில்லை என்று நம்புகிறீர்களா என்ன?

   சலபதி, காலச்சுவடு, கண்ணன் ஆகியோர் அவரை அங்கீகரிக்காதது பெரிய அநியாயம் என்று உறுதியாக கருதுகிறேன். வெறும் மனக்கசப்பு இந்த புறக்கணிப்பை நியாயப்படுத்த முடியாது.

   Like

 3. //sources எங்கெல்லாம் இருக்கிறது என்று அடுத்தவர்களுக்கு வழிகாட்டினார், எல்லாவற்றையும் விட முக்கியம் – ஒரு methodology-யை கொண்டு வந்தார்//

  ஆய்வு (குறிப்பாக கல்லூரிகளில்) பணியாளர்களுக்கு இந்த டெக்னிக் எல்லாம் கூகிளில் தேடும் நுட்பம் போல் சகஜமாகத் தெரியும். இதே மாதிரி (ஆதவனுக்கு வெங்கடேஷ் என்பது போல்) பல்வேறு ஆதர்ச எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிஷ்யர்கள் தேடி அலைவதும் கலெக்ட் செய்வதும் இயல்பு.

  விக்கிப்பீடியா மாதிரி இருந்திருக்க வேண்டிய ப்ராஜெக்ட். அகநானூறைத் தொகுத்தவர் யார் என்றால் சட்டென்று சொல்லவராது. அந்த மாதிரி நாளடைவில் இந்த பிணக்குகள், பாடல் பெறாமல் போகலாம். நாதமுனி மாதிரி அடையாளமும் பெற்றிருக்கலாம்.

  ஆனால், நாதமுனி மட்டும்தான் (அல்லது போட்டி நாதமுனி மட்டும்தான்) நாலாயிரத்தையும் தன்னந்தனியாக தொகுத்தார் என்று நம்பவைக்கும் கட்டமைப்பைக் கண்டு ஏமாற வேண்டாம்.

  Like

  1. பாலா, // //sources எங்கெல்லாம் இருக்கிறது என்று அடுத்தவர்களுக்கு வழிகாட்டினார், எல்லாவற்றையும் விட முக்கியம் – ஒரு methodology-யை கொண்டு வந்தார்//
   ஆய்வு (குறிப்பாக கல்லூரிகளில்) பணியாளர்களுக்கு இந்த டெக்னிக் எல்லாம் கூகிளில் தேடும் நுட்பம் போல் சகஜமாகத் தெரியும். //
   நீங்கள் இன்றைய கூகிள் உலகத்தை மனதில் கொண்டு பேசுகிறீர்கள். குமார் இதை செய்தது எழுபதுகளில். எனக்குத் தெரிந்து குமார் வருவதற்கு முன் எந்த தமிழ் எழுத்தாளருக்கும் – பாரதி உட்பட – இப்படி ஒரு methodology கடைப்பிடிக்கப்படவில்லை. சலபதி செய்ததை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் குமாரை அவர் தன முன்னோடி என்று அங்கீகரிக்காதது தனி மனித கசப்பே, ஒரு நல்ல ஆய்வாளன் செய்யக் கூடியது இல்லை என்றே கருதுகிறேன்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.