சா. கந்தசாமியின் டாப் டென் தமிழ் நாவல்கள்

சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான் எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.

அவருக்குப் பிடித்த டாப் டென் தமிழ் நாவல்களை இங்கே பட்டியல் இடுகிறார்.

  1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. கொஞ்சம் போரடிக்கும்.
  2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். எனக்கு ஏமாற்றம்தான்.
  3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
  4. வாசவேஸ்வரம் – கிருத்திகா கிருத்திகா இரண்டு வருஷத்துக்கு முன்தான் மறைந்தார். புத்தகத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
  5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtle ஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.

  6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று.
  7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை.
  8. அவன் ஆனது – சா. கந்தசாமி படித்ததில்லை.
  9. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.
  10. ரப்பர் – ஜெயமோகன் ஜெயமோகனின் முதல் நாவல். அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர் எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏறிவிட்டார். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.

என்ன ஆச்சரியம், தி.ஜா., கி.ரா., சுரா ஆகியோரைக் காணோம்.

ஜெயமோகன் தனக்கு பிடித்த நாவல் லிஸ்டில் தான் எழுதியவற்றை சேர்த்ததற்கு இன்னமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். இங்கே கந்தசாமியும் தன் புத்தகத்தை டாப் டென் லிஸ்டில் சேர்த்திருக்கிறார், யார் கண்ணிலும் படவில்லை. (சா. கந்தசாமி “நல்லா இருப்பா!” என்று சொல்வது கேட்கிறது) ஜெயமோகன் ஒரு வசை காந்தம்தான்!