Skip to content

க.நா.சு. பற்றி பாரதிமணி

by மேல் பிப்ரவரி 20, 2011

ஒரு பழைய கட்டுரைக்கு சுட்டி. கட்டுரை பழையதாக இருந்தாலும் சுவாரசியமானது. முன்பு கூட்டாஞ்சோறு தளத்திலும் லிங்க் கொடுத்திருந்தேன்.

க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா? எனக்கு பர்சனலாக மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.

பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சு.வை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் இருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?

Advertisements

From → Ka.Naa.Su.

6 பின்னூட்டங்கள்
 1. க.நா.சு. வையும் தமிழின் ஒருகாலத்திய விமரிசனக் கலையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் எல்லாமே அந்தந்த காலக்கட்டத்திற்கு அது என்கிற மாதிரி அமைந்து விடுவதாகத் தான் தோன்றுகிறது. இருந்தாலும் மறந்து விட்டு விடாமல் அவற்றின் சிறப்புகளையும் தூக்கிச் சுமந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது தான் இனி வருவதற்கும் சிறப்பு சேர்க்கும் போலிருக்கிறது. எனது ‘பூவனம்’ பதிவுதளத்தில் சமீபத்தில் பதியப்பட்டுள்ள ‘மறம்’ சிறுகதையைப் படித்து தங்கள் கருத்துக்களைப் பதிய வேண்டுகிறேன்.
  அன்புடன்,
  ஜீவி

  Like

 2. 2006-07-ல் க.நா.சு-வின் கட்டுரைத் தொகுப்புகள் ‘இலக்கிய விசாரங்கள்” என்ற பெயரில் இரு பெரும் தொகுப்புகளாக வந்ததும் முதல் வேலையாக எனி இந்தியன் வழியாக வாங்கிப் படித்திருக்கிறேன். மிகக் கறாராக அதே சமயம் குரலை உயர்த்தாமல் மதிப்புரைகள் எழுதிய இவருக்கா தமிழ் இலக்கிய உலகில் இவ்வளவு எதிரிகள் என்று ஆச்சரியமாக இருக்கும். உண்மைக்ளைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும்.

  சு.ரா-வின் ‘க.நா.சு நினைவோடை’ புத்தகமும் குறிப்பிடப்படவேண்டும்.

  கிழக்கு வெளியிட்ட ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ தொகுப்பில் அசோகமித்திரன் மிக அரிதாக தன் உணர்ச்சிகளைக் காண்பித்திருக்கும் இடங்கள் அவர் க.நா.சு-வைப் பற்றி எழுதியவைகள்தான். அதுவும் க.நா.சு இறந்ததற்கான கட்டுரையில் different அ.மி-யைக் காணலாம்.

  இப்போது ஜெ.மோ பெறும் அத்தனை திட்டுக்களையும் க.நா.சு. பெற்றிருக்கிறார். ஜெ. மோ முடிந்த அளவு திருப்பி தருகிறார். ஆனால் க.நா.சு-வால் அதைத் தூசிப் போல உதறித் தள்ள முடிந்திருக்கிறது.

  Like

 3. ராஜ் சந்திரா

  கநாசு அளவுக்கு நான் வசைபாடப்பட்டதில்லை. காரணம் அது இடதுசாரிகளின் பொற்காலம். கநாசுவின் மீது வைக்கப்பட்ட வசைகளை இன்று வாசித்தால் கூசும். அவர் சிஐஏ ஏஜெண்ட் என்பது தான் ஒரே கௌரவமான குற்றச்சாட்டு. அது கைலாசபதி சொன்னது

  கநாசு அவற்றை தூசி போல உதறியவரல்ல. தனிப்பட்டமுறையில் மிகவும் வருந்தினார். ஒருகட்டத்தில் மனமுடைந்து சென்னையையும் தமிழிலக்கியத்தையும் ஒட்டுமொத்தமாக உதறிவிட்டு டெல்லிசென்றார் இருபதா ண்டுக்காலம் தமிழில் ஒன்றுமே எழுதாமல் இருந்தார். ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வாழ்ந்தார். அக்காலகட்டத்தில்தான் வசை கொஞ்சம் ஓய்ந்தது. வெங்கட் சாமிநாதன் வந்து கநாசுவின் மரபை முன்னெடுத்தார். சுந்தர ராமசாமி இணைந்துகொண்டார்

  ஓர் இடதுசாரி முத்திரையை நாமே நமக்கு குத்திக்கொண்டால் எவரையும் எப்படியும் வசைபாடலாம், எவ்வளவு காழ்ப்பை வேண்டுமானாலும் கொட்டலாம் என்பதுதான் எவ்வளவு அருவருப்பானது

  Like

 4. நன்றி ஜெயமோகன்…அப்போது (போலி) இ.சாரிகள், இப்போது அவர்க்ளுடன், (போலி) பகுத்தறிவுவாதிகள், அவ்வளவுதான் வித்தியாசம் :).

  தூசியாக உதறியதற்கு க.நா.சு-விற்கு இன்றளவு ஊடகப் பலம் இல்லை என்ற அளவில் உபயோகித்தேன்.

  நன்றி.

  Like

 5. ராஜ் சந்திரா, இலக்கிய விசாரங்கள் புத்தகம் இன்னும் கிடைக்கிறதா?

  ஜெயமோகன், உங்களைத்தான் நான் வசை காந்தம் என்று நினைத்திருந்தேன். க.நா.சு. உங்களையும் விட பெரிய வசை காந்தம் போலிருக்கிறதே!

  Like

 6. >>ராஜ் சந்திரா, இலக்கிய விசாரங்கள் புத்தகம் இன்னும் கிடைக்கிறதா?

  Sorry…just saw your question today…Udumalai has the 2nd part.
  http://udumalai.com/?prd=&page=products&id=8423

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: