எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்

  1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
  2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  3. சாயாவனம் – சா. கந்தசாமி சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
  4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.
  5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
  6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
  7. கீறல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
  8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
  9. பொய்த்தேவு – க.நா. சுப்ரமணியம்
  10. கோவேறுகழுதைகள் – இமையம் படித்ததில்லை.

4 thoughts on “எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்

  1. ‘கீறல்கள்’ என்றிருக்க வேண்டும். ஐசக் அருமைராஜன் சமூகக் கிறல்களைப் பற்றி இந்த நாவலில் விரிவாகப் பேசுகிறார்.

    Like

  2. இப்போ தான கோபல்ல கிராமம் படிச்சு முடிச்சேன்..ச்சே என்ன அருமையான புத்தகம்…நான் இப்போ கி.ரா.வின் ரசிகன் 🙂
    கோபல்ல கிராமம் – ஊரை சுத்தி பாத்து வந்த பிரமை

    Like

  3. ஜீவி, இப்போது திருத்திவிட்டேன்.
    சுரேஷ், கோபல்ல கிராமம் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.