Skip to content

சுஜாதாவின் “காயத்ரி”

by மேல் மார்ச் 12, 2011

(இது ஒரு RV பதிவு)

நினைவிலிருந்து எழுதுகிறேன். இதை படித்து, யாராவது மேலும் விவரங்கள் கொடுத்தாலோ, இல்லை எழுதினாலோ ரொம்ப சந்தோஷப்படுவேன்.

காயத்ரி பற்றி எனக்கு இருக்கும் அழியாத ஞாபகம் ஜெயராஜின் படம்தான். எனக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். சாதாரணமாக நாங்கள் வாங்காத பத்திரிகை எதிலோ தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. தினமணி கதிர் என்று நினைக்கிறேன். யார் வீட்டிலோ பார்த்தேன். வில்லனின் “அக்கா” மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பாவாடை பிராவுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கும் படம். அப்படியே ஷாக் ஆகி ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்! பிறகு யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேக வேகமாக படித்தேன். அதுவோ தொடர்கதையின் நடுவில் வரும் ஒரு சாப்டர். தலையும் காலும் புரியாவிட்டாலும், “அக்கா” காயத்ரியை மரியாதையாக சொன்னதை கேட்டு நடக்க சொல்லு என்று சொல்வாள். அப்புறம் அந்த பத்திரிகை கிடைக்குமா என்று அலைந்து திரிந்து பார்த்தேன், கிடைக்கவில்லை. கடைசி சாப்டர் மட்டும்தான் படிக்க முடிந்தது. அதில் வசந்த் “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” என்று காயத்ரியிடம் சொல்வது நினைவிருக்கிறது.

நாலைந்து வருஷம் கழித்து புஸ்தகம் கிடைத்தது. யாராவது பார்ப்பார்களோ என்ற பயம் அப்போது போய்விட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அது கிழித்து பைண்ட் செய்யப்பட்டது அல்ல.

விறுவிறுப்பான கதை – காயத்ரியின் டைரியை ஒரு பழைய பேப்பர் கடையில் வசந்த் பார்ப்பார். காயத்ரியின் புகுந்த வீடு ஒரு மர்ம தேசம். விதவையான “அக்கா”, சமையல்காரன், வேலைக்காரி, கணவன், பைத்தியமான மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் மனைவி, எல்லாரும் ஏதோ ரகசியத்தை மறைக்கிறார்கள். காயத்ரி ஏறக்குறைய ஒரு ஜெயிலில் இருப்பார். அவரால் வெளியே போகவோ, கடிதம் எழுதவோ முடியாது. கணேஷும் வசந்தும் காயத்ரி எங்கே என்று கண்டுபிடிப்பார்கள். காயத்ரியை வைத்து ப்ளூ ஃபில்ம் எடுக்கிறார்கள் என்று துப்பறிந்து அவரை விடுவிப்பார்கள்.

ப்ளூ ஃபில்ம் என்றால் என்னவென்று தெரியாத வயது. எப்படி விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

திரைப்படமாக வந்தது. ரஜினிகாந்த் ஆண்டி-ஹீரோ. ராஜசுலோசனா “அக்கா” அசோகன் அவரது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடிப்பார். ஸ்ரீதேவிதான் காயத்ரி. ஜெய்ஷங்கர் கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி வசந்த்!

விமல் அனுப்பியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

Advertisements
21 பின்னூட்டங்கள்
 1. காயத்ரி திரைபடத்தில் அவளை கடைசியில் கொன்று விடுவார்கள். தான் காயத்ரியை காப்பாற்ற எவ்வளவோ முயன்றதாகவும் ஆனால் தயாரிப்பாளர், டைரக்டர் ஒத்துக் கொள்ளவில்லை என சுஜாதாவே கணையாழி கடைசி பக்கக்த்தில் எழுதியதாக ஞாபகம்.

  அதே போலத்தான் ஆர்.கே. நாராயணனின் கைட் நாவலிலும் கதாநாயகன் ராஜு இறக்கத்தான் வேண்டும் என அவரது நண்பர் ஆங்கில எழுத்தாளர் கிரஹாம் கிரீன் முதலிலேயே தீர்ப்பு எழுதி விட்டதாக ஆர்.கே. தனது தேதியில்லாத டைரி என்னும் புத்தகத்தில் எழுதியிருப்பார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  Like

 2. I have seen this film when I was 14 years old. I did not understand much of it then. Later I did not dare to watch it again for fear of the tragic climax.

  Like

 3. காயத்ரி நாவலில் சுஜாதாவும் ஒரு பாத்திரமாக இருப்பார். அவரே பழைய புத்தகக்கடையில் காயத்திரியின் டைரியை பார்த்து கணேஷ்,வசந்த் உதவியுடன் காயத்திரியை மீட்பதாக இருக்கும். கதையின் நாயகன் (ஏதோ R இல் துவங்கும் பெயர் ஞாபகமில்லை) குறித்த வர்ணனைகள் ரஜினிக்கு பொருத்தமாக இருக்காது. படம் எப்படி இருந்ததோ

  Like

 4. கதையை படித்ததில்லை .படத்தை மட்டும் பார்த்திருக்கிறேன் .”வாழ்வே மாயமாம்..” என்று ஒரு அருமையான பாடல் வரும் …த்ரில்லர் போல இருக்கும் .ஸ்ரீதேவியே டைரியை எவரிடமாவது கிடைக்கட்டும் என்று பழைய பேப்பருடன் போடுவார் .

  Like

 5. Bags permalink

  Dondu, RRB, Darshan, poongulali – Thanks for your comments

  Like

 6. ‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதை யோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.

  இவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.

  காயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்தது தானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.

  படத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.

  படம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக் கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).

  (காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..

  காயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க?. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).

  Like

 7. கால சக்கர சுழற்சியில், இதில் வில்லனாக நடித்த ரஜினி , கணேஷாக நடித்த படம் ப்ரியா..

  Like

 8. அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது”
  அதற்கு காரணம் வில்லனின் அறிமுக காட்சியிலேயே அவன் தான் வில்லன் என எல்லோருக்கும் தெரிந்து விடும்.. நாவலில் அப்படி இருக்காது…

  Like

 9. சாரதா, வழக்கம் போல காயத்ரி திரைப்படம் பற்றி பல தகவல்களை கொடுத்து அசத்தறீங்க! பிச்சைக்காரன், மறுமொழிக்கு நன்றி!

  Like

 10. விமல் permalink

  காயத்ரி – PDF வடிவம்

  http://www.mediafire.com/download.php?oluoal8cjj9ekde

  Like

  • விமல், பல மின்நூல்களைக் கொடுத்து அசத்துகிறீர்களே!

   Like

 11. விமல் permalink

  Dear RV,

  சில மாதங்களாக இணையத்தில் இருந்து தேடி எடுத்தது.
  நிறைய புத்தகங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறது.
  இவைகளை தேடி எடுக்க நிறைய பொறுமை வேண்டும்.
  ஒரே தளத்தில் இட்டால் எல்லோருக்கும் பயன்படும்.
  உங்கள் தளத்தில் இட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம் தான்.

  copyright பிரச்சினை வந்தால் நீக்கி விடுங்கள்.

  நன்றி

  விமல்

  Like

  • தொடருங்கள் விமல், காப்பிரைட் பிரச்சினை வந்தால் நீக்கிவிடுவோம்.

   Like

 12. விமல் permalink

  யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம் …

  Like

 13. Dear Vimal,

  In my opinion, Sujatha’s books are copy righted and can not be given for free.

  Thanks for your understanding.

  Like

 14. சுஜாதா ஒரு எழுத்தாளராக வில்லன்களிடம் மாற்றிக் கொண்டு முழிக்கும் அந்த கட்டங்கள் நன்றாய் இருக்கும்

  Like

  • சிவ்,

   ஆம், காயத்ரி நாவலில் அது சுவாரசியமான ஒரு கட்டம்தான்.

   ஒரு காமிக்ஸ் விரும்பியை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

   Like

 15. krish permalink

  R – Raajarathinam

  Like

  • க்ரிஷ், ராஜரத்தினம்தான். எப்படி பெயரை எல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்?

   Like

Trackbacks & Pingbacks

 1. சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்
 2. சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: