ஜான் ஸ்டைன்பெக்கின் “பேர்ல்”

நோபல் பரிசு வென்ற ஜான் ஸ்டைன்பெக் பக்கத்து ஊர்க்காரர். (சாலினாஸ்) Grapes of Wrath என்ற நாவல் ஸ்டைன்பெக்கின் மாஸ்டர்பீசாக கருதப்படுகிறது. யாராவது படித்திருக்கிறீர்களா?

ஆனால் எல்லாரும் புகழ்ந்த Of Mice and Men என்ற புத்தகம் என்னை கொஞ்சமும் கவரவில்லை.கொஞ்ச நாள் முன்பு ஜெயமோகன் இங்கு வந்திருந்தபோது அவரும் ஸ்டைன்பெக்கைப் பற்றி அவ்வளவு உற்சாகமாகப் பேசவில்லை. இதனாலேயே அவர் புத்தகங்களை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்.

சமீபத்தில் யாரோ ஒரு நண்பர் 1947-இல் வெளிவந்த அவரது Pearl என்ற புத்தகத்தை காப்பி அடித்துத்தான் சுஜாதாவைரங்கள்” என்ற புத்தகத்தை எழுதினார் என்று சொன்னார். வைரங்கள் எனக்குப் பிடித்த சுஜாதா புனைவுகளில் ஒன்று. சரி இதுதான் மூல கதை என்றால் மோசமாக இருக்காது என்ற நம்பிக்கையில் படிக்க ஆரம்பித்தேன். சின்ன புத்தகம், நூறு பக்கம் கூட இருக்காது என்பது இன்னும் கொஞ்சம் உற்சாகம் தந்தது.

மிகவும் சிம்பிளான கதை. ஏழை மீனவன் கினோவுக்கு ஒரு பெரிய முத்து கிடைக்கிறது. அந்த முத்தை அவனிடமிருந்து ஏமாற்றியோ இல்லை திருடியோ பெற ஊரே முயற்சிக்கிறது. திருட வரும் ஒருவனை கினோ கொன்றுவிடுகிறான். பிறகு மனைவி, குழந்தையோடு ஊரிலிருந்து தப்பி ஓடுகிறான். அவனை துரத்துகிறார்கள். என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

என்னவோ ஒரு தொன்மத்தைப் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் ஸ்டைன்பெக். அதை எப்படி சாதித்தார் என்று என்னால் விளக்க முடியவில்லை.

புத்தகத்தின் முதல் பாதி எப்படி வெள்ளையர்கள் இந்த மீனவர்களை சுரண்டுகிறார்கள் என்று அருமையாக விவரிக்கிறது.

இருந்தாலும் புத்தகத்தில் ஏதோ குறைகிறது. ஒரு விதத்தில் மெலோட்ராமா நிறைந்த சினிமா பார்ப்பது போல இருக்கிறது.

படிக்கலாம்.

P.S. வைரங்கள் நாவலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

2 thoughts on “ஜான் ஸ்டைன்பெக்கின் “பேர்ல்”

 1. தங்கள் தளத்திற்கு ஜெ. மோ மூலம் வந்தேன். நீண்ட நாட்களாக தங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். வழக்கம் போல சோம்பேறித்தனம் கூடவே இருந்தது. இப்பொழுது அதையும் மீறி எழுதுகிறேன். புத்தகங்களுக்கான ப்ளாக் அற்புதம். நிறைய புதிய அறிமுகங்கள், சில தெரிந்த புத்தகங்களைப் பற்றி பதிவுகள். அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

  தற்பொழுது, “The Grapes of wrath” பற்றி. தாங்கள் இது பற்றி முன்பே வேறொரு பதிவு எழுதியதாக நினைவு. எனினும், நான் அந்த புத்தகத்தை படித்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தாங்கள் கூறியது போலவே தொன்மத்தைப் படிப்பது போன்ற உணர்வை நன்றாகவே உருவாக்குகிறார். மேலும், இது சற்று பெரிய (பேரலை விட) நாவல். எனக்கு பொதுவாகவே பயணக் கட்டுரைகளும், பயணம் சார்ந்த புதினங்களும் வாசிக்கப் பிடிக்கும். இதுவும் அப்படிப்பட்ட ஒன்று என்று அறிந்து இதை படிக்கத் துவங்கினேன். அமெரிக்காவின் “Oaklahoma” வில் 1920-களில் (great depression காலத்தில்) நடக்கும் கதை. mid-west இலிருந்து , கலிபோர்னியாவிற்கு பிழைப்பைத் தேடி வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. அவர்கள் கார் மூலம் பல மாநிலங்களைக் கடந்து கலிபோர்னியாவிற்கு வரும் வழியில் நடக்கும் சம்பவங்களே பாதிக்கு மேல். மீதி கலிபோர்னியாவில் அவர்கள் சந்திக்கும் நிஜம்.

  கொஞ்சம் communism சார்ந்த கருத்துக்கள் அழுத்தமாக இடம் பெற்றாலும், இந்த நாவல் உண்டாக்கிய பாதிப்பு அதிகம். Melodrama-வாக இருந்தாலும் cliched-ஆக தோணவில்லை. ஜெ. மோ இந்த நாவலில் வரும் சில பகுதிகள் குறித்து எழுதியுள்ளார். அவ்வளவாக சிலாகிக்கவில்லை. குறிப்பாக என்னை பாதித்த சில பகுதிகளை சாதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். எனது வாசிப்பு அனுபவக் குறைவினாலோ என்னவோ, எனக்கு இந்த நாவலில் பல பகுதிகள் பிடித்திருந்தன. முக்கியமாக, அந்த முடிவு ஏற்ப்படுத்திய தாக்கம் அதிகம். முகத்திலறைந்தார் போல ஒரு universal truth அது.

  தங்களுக்குப் மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். சீக்கிரம் படித்துவிட்டு, அது பற்றி இங்கு எழுதவும். உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

  -பா

  Like

  1. பாலாஜி,

   காலதாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டும். கிரேப்ஸ் ஆஃப் ராத் இன்னும் படிக்கவில்லை, படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறீர்கள்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.