சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள்

ரொம்ப நாளாச்சு ஒரு லிஸ்ட் போட்டு.

2 கண்டிஷன்தான். தமிழில் எழுதப்பட்ட புனைவாக இருக்க வேண்டும். திரைக்கதைக்கும் ஒரிஜினலுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு புனைவைத்தான் திரைக்கதையாக மாற்றி இருக்க வேண்டும், அது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கவும் வேண்டும். அதாவது பிரியா திரைப்படம் மாதிரி ஒரிஜினல் கதையை கொலையே செய்தாலும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. ஆனால் நான் கடவுளுக்கும் ஏழாம் உலகத்துக்கும் ஒற்றுமை இருந்தாலும், நான் கடவுளை லிஸ்டில் சேர்ப்பதற்கில்லை.

ஆசிரியர், புனைவு, சினிமா என்ற வரிசையில் எழுதி இருக்கிறேன்.

 1. அகிலன், கயல்விழி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
 2. அகிலன், பாவை விளக்கு, பாவை விளக்கு
 3. அண்ணாதுரை, காதல் ஜோதி, காதல் ஜோதி
 4. அண்ணாதுரை, நல்லவன் வாழ்வான், நல்லவன் வாழ்வான்
 5. அண்ணாதுரை, பார்வதி பி.ஏ, பார்வதி பி.ஏ
 6. அண்ணாதுரை, ரங்கோன் ராதா, ரங்கோன் ராதா
 7. அண்ணாதுரை, தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் மகளுக்கு கட்டிய தாலி
 8. அண்ணாதுரை, வண்டிக்காரன் மகன், வண்டிக்காரன் மகன்
 9. அனுராதா ரமணன், சிறை, சிறை
 10. அனுராதா ரமணன், கூட்டுப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள்
 11. சி.ஏ. பாலன், தூக்குமர நிழலில் நாவல், இன்று நீ நாளை நான் (இன்று நீ நாளை நான் அதே பெயரில் மாலைமதி வெளியீடாக முழு நாவலாக வந்தது. தூக்கு மர நிழலில் கதையில் அது ஒரு சிறிய அத்தியாயம் மட்டுமே.)
 12. தேவன், கோமதியின் காதலன், கோமதியின் காதலன்
 13. எல்லார்வி, கலீர் கலீர், ஆட வந்த தெய்வம்
 14. இந்திரா பார்த்தசாரதி, குருதிப்புனல், கண் சிவந்தால் மண் சிவக்கும்
 15. இந்திரா பார்த்தசாரதி, உச்சி வெயில், மறுபக்கம்
 16. ஜே.ஆர். ரங்கராஜு, ராஜாம்பாள், ராஜாம்பாள்
 17. ஜே.ஆர். ரங்கராஜு, சந்திரகாந்தா, சவுக்கடி சந்திரகாந்தா
 18. ஜே.ஆர். ரங்கராஜு, மோகனசுந்தரம், மோகனசுந்தரம்
 19. ஜாவர் சீதாராமன், பணம் பெண் பாசம், பணம் பெண் பாசம் (முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா நடித்தது)
 20. ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்
 21. ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
 22. ஜெயகாந்தன், யாருக்காக அழுதான், யாருக்காக அழுதான்
 23. ஜெயகாந்தன், கருணையினால் அல்ல, கருணை உள்ளம்
 24. ஜெயகாந்தன், உன்னைப் போல் ஒருவன், உன்னைப் போல் ஒருவன்
 25. ஜெயகாந்தன், கைவிலங்கு, காவல் தெய்வம்
 26. கல்கி, பார்த்திபன் கனவு, பார்த்திபன் கனவு
 27. கல்கி, தியாகபூமி, தியாகபூமி
 28. கல்கி, கள்வனின் காதலி, கள்வனின் காதலி
 29. கல்கி, பொய்மான் கரடு, பொன்வயல்
 30. கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள், தில்லானா மோகனாம்பாள்
 31. கொத்தமங்கலம் சுப்பு, ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப் பிள்ளை
 32. லக்ஷ்மி, பெண் மனம், இருவர் உள்ளம்
 33. லக்ஷ்மி, காஞ்சனையின் கனவு, காஞ்சனா
 34. மஹரிஷி, புவனா ஒரு கேள்விக்குறி, புவனா ஒரு கேள்விக்குறி
 35. மஹரிஷி, பத்ரகாளி, பத்ரகாளி
 36. மணியன், இலவு காத்த கிளி, சொல்லத்தான் நினைக்கிறேன்
 37. மணியன், மோகம் முப்பது வருஷம், மோகம் முப்பது வருஷம்
 38. மணியன், இதய வீணை, இதய வீணை
 39. மணியன், லவ் பேர்ட்ஸ், வயசுப்பொண்ணு
 40. மு. கருணாநிதி, வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு
 41. மு. கருணாநிதி, பொன்னர் சங்கர், பொன்னர் சங்கர்
 42. மு. வரதராஜன், பெற்ற மனம், பெற்ற மனம்
 43. நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை, மலைக்கள்ளன், மலைக்கள்ளன்
 44. நாஞ்சில் நாடன், தலைகீழ் விகிதங்கள், சொல்ல மறந்த கதை
 45. நீல. பத்மநாபன், தலைமுறைகள், மகிழ்ச்சி
 46. பொன்னீலன், பூட்டாத பூட்டுகள், பூட்டாத பூட்டுகள்
 47. புஷ்பா தங்கதுரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
 48. புஷ்பா தங்கதுரை, நந்தா என் நிலா, நந்தா என் நிலா
 49. புஷ்பா தங்கதுரை, லீனா-மீனா-ரீனா, அந்த ஜூன் 18
 50. புதுமைப்பித்தன், சிற்றன்னை, உதிரிப்பூக்கள்
 51. புதுமைப்பித்தன், வாக்கும் வக்கும், சரஸ்வதி சபதம்
 52. ரா.கி. ரங்கராஜன், இது சத்தியம், இது சத்தியம்
 53. ராஜாஜி, திக்கற்ற பார்வதி, திக்கற்ற பார்வதி
 54. ராஜேந்திரகுமார், வணக்கத்துக்குரிய காதலியே, வணக்கத்துக்குரிய காதலியே
 55. எஸ்.எஸ். வாசன், சதி லீலாவதி, சதி லீலாவதி
 56. ச. தமிழ்ச்செல்வன், வெயிலோடு போய், பூ
 57. சிவசங்கரி, நண்டு, நண்டு
 58. சிவசங்கரி, ஒரு மனிதனின் கதை, தியாகு
 59. சிவசங்கரி, 47 நாட்கள், 47 நாட்கள்
 60. சிவசங்கரி, ஒரு சிங்கம் முயலாகிறது, அவன் அவள் அது
 61. ஸ்டெல்லா ப்ரூஸ், ஒரு முறைதான் பூக்கும், ஆண்களை நம்பாதே
 62. சு. வெங்கடேசன், காவல் கோட்டம், அரவான் (ஒரு பகுதி மட்டும் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது)
 63. சுஜாதா, பிரியா, பிரியா
 64. சுஜாதா, காயத்ரி, காயத்ரி
 65. சுஜாதா, கரையெல்லாம் செண்பகப்பூ, கரையெல்லாம் செண்பகப்பூ
 66. சுஜாதா, காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள்
 67. சுஜாதா, ஜன்னல் மலர், யாருக்கு யார் காவல்
 68. சுஜாதா, அனிதா இளம் மனைவி, இது எப்படி இருக்கு
 69. சுஜாதா, பிரிவோம் சிந்திப்போம், ஆனந்தத் தாண்டவம்
 70. சுஜாதா, இருள் வரும் நேரம், வானம் வசப்படும்
 71. டி.எஸ். துரைசாமி, கருங்குயில் குன்றத்துக் கொலை, மரகதம்
 72. தங்கர் பச்சான், ஒன்பது ரூபாய் நோட்டு, ஒன்பது ரூபாய் நோட்டு
 73. தி. ஜானகிராமன், மோகமுள், மோகமுள்
 74. துமிலன், புனர்ஜன்மம், போன மச்சான் திரும்பி வந்தான்
 75. உமாசந்திரன், முள்ளும் மலரும், முள்ளும் மலரும்
 76. வாஸந்தி, ஜனனம், யாரோ எழுதிய கவிதை
 77. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கும்பகோணம் வக்கீல், திகம்பர சாமியார்
 78. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வித்யாசாகரம், வித்யாபதி
 79. வடுவூர் துரைசாமி ஐயங்கார், மேனகா, மேனகா
 80. வை.மு. கோதைநாயகி, ராஜ்மோகன், ராஜ்மோகன்
 81. வை.மு. கோதைநாயகி, அனாதைப் பெண், அனாதைப் பெண்
 82. வை.மு. கோதைநாயகி, தயாநிதி, சித்தி
 83. வை.மு. கோதைநாயகி, தியாகக்கொடி, தியாகக்கொடி
 84. வை.மு. கோதைநாயகி, நளினசேகரன், நளினசேகரன்

பேசாமொழி இணைய இதழில் இதை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள். அவர்கள் உபரியாக சேர்த்திருக்கும் புனைவுகள் கீழே.

 1. விக்டர் ஹ்யூகோ, Les Miserables, ஏழை படும் பாடு (சுத்தானந்த பாரதியாரின் தமிழ் மொழிபெயர்ப்பின் பேரும் ஏழை படும் பாடுதான்)
 2. கி. ராஜநாராயணன், கிடை, ஒருத்தி
 3. சி.ஆர். ரவீந்திரன், நண்பா நண்பா, நண்பா நண்பா
 4. ஜெயகாந்தன், ஊருக்கு நூறு பேர், ஊருக்கு நூறு பேர்
 5. பி.எஸ். ராமையா, நாலு வேலி நிலம், நாலு வேலி நிலம்
 6. பி.எஸ். ராமையா, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், (மூலம்: நிகோலாய் கோகோல் எழுதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல்)
 7. பி.எஸ். ராமையா, போலீஸ்காரன் மகள், போலீஸ்காரன் மகள்
 8. சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள், தக்கையின் மீது நான்கு கண்கள்
 9. டி. செல்வராஜ், தேனீர், தேனீர்
 10. சிவசங்கரி, குட்டி, குட்டி
 11. கந்தர்வன், சாசனம், சாசனம்
 12. பூமணி, கருவேலம்பூக்கள், கருவேலம்பூக்கள்

பால் ஹாரிஸ் டேனியல் எழுதிய ‘Red Tea” ஆங்கிலப் புனைவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பரதேசி திரைப்படத்தின் மூலம் இதுதான்.

இன்னும் நிறைய இருக்க வேண்டும். நினைவு வருவதை சொல்லுங்களேன்!

பிற்சேர்க்கை: இன்னும் புத்தகங்கள் இருக்க வேண்டும். விட்டுப் போன பல புத்தகங்களை சொன்னவர்களில் முதன்மையானவர் ஸ்ரீனிவாஸ். மற்றும் ராமச்சந்திரன் உஷா (நுனிப்புல்), டோண்டு, அரங்கசாமி, ரமணன் (பல பழைய படங்களைப் பற்றி சொன்னவர்), ராம்குமரன், கோகுல் எல்லாருக்கும் நன்றி!

P.S. நான் இன்னும் டிவி சீரியல்கள், சினிமா ஆன நாடகங்கள், வேற்று மொழி படங்கள் ஆகியவற்றை சேர்க்கவில்லை.
தொடர்புடைய சுட்டிகள்:
சினிமா பக்கம்
சுஜாதாவின் சினிமா பங்களிப்பு
ஜெயகாந்தனும் சினிமாவும்
திருடப்பட்ட கதைகள் – அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், கஞ்சிவரம்