பிரதீப் சக்ரவர்த்தியின் “தஞ்சாவூர்”


தஞ்சாவூர் எத்தனை கை மாறியிருக்கிறது? சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள். இவர்களுக்கு பின்னர் இங்கிலாந்தின் ஆளுகையில் இருந்தது. முகாலாயர்கள் ஏன் அவ்வளவு நாட்டம் கொள்ளவில்லை? நான் சமீபத்தில் முதன் முறையாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்த பொழுது அதன் பிரம்மாண்டத்தில் மயங்கி நின்றேன். அதன் பெரிய வளாகமும் அதன் 11ஆம் நூற்றாண்டு சிலைகளும், ஓவியங்களும் பிரமிப்பை கொடுத்தன. காற்று அருமையாக வந்தது. அதற்காகவே வடிவமைக்கப் பட்ட கோவில் போல் இருந்தது.

வரலாற்று ஆர்வலர்களுக்கும், சிற்பம், ஓவியம், இலக்கியம் இதில் நாட்டமுடையவர்களுக்கும் தஞ்சாவூர் என்றுமே ஒரு பொக்கீஷம். இதை நான் சொல்வதை விட ஜாம்பவனான பிரதீப்பிடம் கேட்பது தான் சிறந்தது. இதை பற்றி முழு ஆராய்ச்சி செய்து நமக்கெல்லாம் “”தஞ்சாவூர்” என்ற புத்தகத்தின் மூலம் ஒரு வாசக விருந்து கொடுக்கிறார் பிரதீப் சக்ரவர்த்தி. அவருடன் சேர்ந்து பணியாற்றிய விக்ரம் சத்யநாதன் தன் புகைப்படங்களால் கண்களுக்கு விருந்தளிக்கிறார்.

இருவரும் இணைந்து நாம் கேள்வி பட்ட மற்றும், கேள்வி படாத விஷயங்களை பல்வேறு கோணங்களில் அளிப்பதாக விமர்சனங்கள் சொல்கிறது. ஆயிரம் வயதாகிய பிருகதீஸ்வரர் கோவில், சரஸ்வதி மஹால் நூலகம், ஓவியங்கள், மற்றும் தஞ்சையின் சந்து, பொந்துகள், கர்நாடக சங்கீதமும், பரதமும் வளமுற்ற காவிரி ஆற்றங்கரையின் பெருமைகள், இவையணைத்தையும், மேலும் பலவற்றையும் அலசியிருக்கிறார்கள் பிரதீப்பும், விகரமும்.

பிரதீப் சக்ரவர்த்தி திருநெல்வேலியில் 1975ல் பிறந்தார். சென்னை, புது டில்லி மற்றும் லண்டன் முதலிய இடங்களில் தன் கல்வியை முடித்த பின்னர், தகவல் தொழில்நுட்ப துறையில் லீடர்ஷிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  நூற்றுக்கும் மேல் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஹிந்து பத்திரிக்கை வாசிப்பவர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்கும். கர்நாடக சங்கீத்தத்தில் ஈடுபட்டு உள்ள இவர் தோட்டக்கலையிலும் நாட்டம் கொண்டவர். சமீபத்தில் ItsDiff வானொலிக்காக ”தஞ்சாவூர்” பற்றிய ஒரு புதிய தொடரை தொடங்கியிருக்கிறார். இவர் “walks” என்னும் நிகழ்ச்சியை நடத்திஉ வருகிறார். இந்நிகழ்ச்சிகளில் நம்மை அதிகம் கேள்விபடாத கோயில்களுக்கு அழைத்துச் சென்று அதன் வரலாறு, கலை, சிற்பம், முதலியவற்றை விளக்குகிறார்.

விக்ரம் சத்தியநாதன் கோவையில் 1976ல் பிறந்தவர். லண்டனில் MBA படித்த விட்டு தன் சொந்த தொழிலை நடத்தி வருகிறார்.  இயற்கை, வனவிலங்குகள், புகைப்படங்கள் இவருடைய நாட்டங்கள்.

”தஞ்சாவூர்” புத்தகத்தை நீங்களே படித்துப் பாருங்களேன்.

புத்தகம் கிடைக்குமிடம்:
http://www.flipkart.com

பதிப்பகத்தார் விபரம்:
Niyogi Offset Pvt. Ltd.
D-78, Okhla Industrial Area, Phase-I,
New Delhi – 110 020
Ph: +91 011 2681 3351-52
visit us: http://www.niyogibooks.com

ஆலந்தூர் மள்ளன் எழுதிய “சுமைதாங்கி” சிறுகதை

தமிழ்ஹிந்து தளத்தில் சுமைதாங்கி என்று ஒரு சிறுகதை – ஆலந்தூர் மள்ளன் என்பவர் எழுதி இருக்கிறார். பொதுவாக தமிழ்ஹிந்து தளத்தில் சிறுகதை என்ற பேரில் பிரசாரம்தான் நடக்கும். இந்த சிறுகதை பிரச்சாரம், கிரசாரம் எல்லாவற்றையும் தாண்டி நிற்கிறது. யூகிக்கக் கூடிய கதைதான், இருந்தாலும் கதையில் விவரிக்கப்படும் தொன்மம் கதையை ஒரு மேலான இடத்துக்கு கொண்டுபோகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.