வெங்கட் சாமிநாதன் டாப் டென் தமிழ் நாவல்கள் தேர்வு

மூலப் பதிவு: தலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்

வெங்கட் சாமிநாதனுக்கெல்லாம் அறிமுகம் தேவை இல்லை. தமிழின் சிறந்த இலக்கியம் விமர்சகர்களில் ஒருவர் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

 1. மோகமுள் – தி. ஜானகிராமன் கும்பகோணத்து தெருக்களின் தூசி புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது.
 2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் சிறந்த நாவல், விரிவான பதிவு இங்கே.
 3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அருமையான புத்தகம். நான் படிக்கும்போது எனக்கு இருபது இருபத்தைந்து வயது இருக்கலாம். சுராவை நான் பெரும் படைப்பாளியாக கருத ஆரம்பித்தது இந்த புத்தகத்தைப் படித்த பிறகுதான். எனக்கு புளியமரத்தை விடவும் இதுதான் பிடித்திருக்கிறது. இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும்.
 4. கோவேறு கழுதைகள் – இமையம் படித்ததில்லை.
 5. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படித்திருக்கிறேன், ஆனால் சரியாக நினைவில்லை. நினைவிருக்கும் வரையில் நல்ல நாவலே, ஆனால் சூப்பர் டூப்பர் நாவல் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
 6. தூர்வை – சோ. தர்மன் படித்ததில்லை.
 7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் படித்ததில்லை.
 8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ் படித்ததில்லை.
 9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்; அற்புதமான நாவல். ஆனால் சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
 10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள் முக்கியமான புஸ்தகம். நல்ல நாவல் என்று சொல்ல மாட்டேன். கீழ்வெண்மணி பற்றி எழுதப்பட்ட docu-fiction. படிக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கும் என்று நமக்கு தோன்றும். இதை விட புகழ் பெற்ற இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். இதிலோ அந்த ஊரிலேயே வாழ்ந்த ஒருவர் கதையை சொல்வது போல தோன்றும்.

20 thoughts on “வெங்கட் சாமிநாதன் டாப் டென் தமிழ் நாவல்கள் தேர்வு

  1. வெங்கட் சாமிநாதன் டாப் டென் தமிழ் நாவல்கள் தேர்வு பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி விஜயன்!

   Like

   1. திருமாவளவன், தஞ்சை பிரகாஷ் பற்றி சொன்னதற்கு நன்றி! நான் இன்னும் அவரது எழுத்துகளைப் படித்ததில்லை…

    Like

 1. இந்த பதிவுக்கு உரிய மறுமொழி அல்ல. மன்னிக்கவும்.

  பொன்னியின் செல்வன் தொடர்ச்சி என சொல்லப்படும் காவிரி மைந்தன் எழுதிய‌ அனுஷா வெங்கடேஷ் தனது அனுபவங்களை
  மக்கள் தொலைக்காட்சியில் சொல்லியிருக்கிறார். பார்த்தீர்களா?
  இந்த book பற்றி உங்களது பதிவு மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

  Like

  1. சித்திரவீதிக்காரன்,
   வெ.சா.வின் டாப் டென் நாவல்கள் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி! கொற்றவையின் ஆரம்பம் பிரமாதமாக இருந்தது, ஆனால் நடுவில் எனக்கு தொய்வு ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர வேண்டும்…

   Like

  1. அரங்கசாமி,
   தஞ்சை பிரகாஷைப் பற்றி யாராவது நல்ல விமர்சனம், அறிமுகம் எழுதி இருக்கிறீர்களா? ஜெயமோகன்?

   Like

   1. http://www.jeyamohan.in/?p=84
    தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு
    March 18th, 2001 ……….ஜெயமோகன்

    2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு…….நாவல் என்பதை வரையறுத்து நான் ஒரு நூல் எழுதியுள்ளேன் ‘நாவல் ‘ (1992), அவ்வரையறையை ஏற்கும், படைப்பூக்கத்துடன் மீறும் படைப்புகளே இங்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன.

    இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை. இதில் நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி, வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம். இவ்வடிப்படையிலேயே இங்கு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொழித்திறனும் வடிவ ஒழுங்கும் இருந்தாலும் கூட வாழ்வு குறித்த சுயமான தேடல் இன்றி வாசகனை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட படைப்புகள் பொழுதுபோக்கு எழுத்தாக கருதப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொரு நூலைப்பற்றியும் தேவை ஏற்படின் ஒரு புத்தகம் அளவுக்கு என்னால் விவாதித்து நிறுவ முடியும் என்பதையே இப்பட்டியலின் ஆதாரவலிமை என்று கூறுவேன்; இவை வாசகனின் சிபாரிசுகளல்ல, விமரிசகனின் சிபாரிசுகள்.

    –ஜெயமோகன்
    ……………………………………………
    41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.

    கலைத்துப் போடப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களும் சம்பவக் குதறல்களும் நிரம்பிய இந்த ‘முதிராத ‘ நாவல் ஒரு அம்சத்தால் முக்கியமாகிறது தமிழ் மனதின் அகக் கோணலை, (பெர்வர்ஷன்) கூற முயன்றமையால்.

    1997ல் பிரசுரமாயிற்று.

    ………ஜெயமோகன்

    Like

 2. ஆர்வி, மேலே உள்ள லிஸ்டில் நான்கு நாவல்கள் படித்திருக்கிறேன். மற்ற நாவல்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். செந்நெல் புதிதாக இருக்கிறது. படிக்கவேண்டும். அவர் எழுதிய மரக்கால் (நந்தனார் சரித்திரம் என்று நினைக்கிறன்) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  Like

 3. As you have asked for a review of thanjai prakash’s works, i googled thanjai prakash ( in tamil ) and found hundreds of sites about him.

  Giving below as found in an internet site who is unknown to me.
  http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_21.html

  தஞ்சை பிரகாஷ் கதைகள்
  இதுவரை நீங்கள் இந்தப் புத்தகம் படிக்கவில்லை என்றால் உடனே வாங்கிப் படித்து விடுங்கள்.

  கிராஸ் வோர்ட் புக் ஸ்டோரில் ‘கிராஸ் வோர்ட் ரெக்கமெண்ட்ஸ்’ என்று ஒரு பகுதி இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள புத்தகங்கள் மிக நன்றாக உள்ளவை என்று அவர்கள் உத்தரவாதம் தருவார்கள். படித்துப் பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்று சொல்லிப் புத்தகம் வாங்கிய பதினைந்து நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்தால் பணம் வாபஸ்! பொதுவாக அப்படி ஆவதில்லை. அந்தப் பிரிவில் இருக்கும் புத்தகங்கள் நிஜமாகவே நன்றாக இருக்கும். தமிழில் அது போல் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ‘தஞ்சை பிரகாஷ் கதைகளை’ நிச்சயமாக அந்தப் பிரிவில் வைக்கலாம்.

  உங்களில் பலருக்கு நினைவு இருக்கலாம். பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகா, ஜெயராம் வீட்டில் தஞ்சை பிரகாஷ், ஜி நாகராஜன் கதைகள் அடங்கிய புத்தகங்களைப் பார்த்துப் பரவசப்படுவார். அதே படத்தில் ஜெயராம் சேரனிடம் ஒரு இடத்தில சினேகாவின் வாசிப்பு அனுபவத்தைப் பற்றிச் சொல்லிச் சிலாகிப்பார். எஸ்ரா கதாவிலாசத்தில் இவருடைய பற்றி எறிந்த தென்னை மரம் கதையைப் பற்றி எழுதியுள்ளார். மற்ற தஞ்சை மாவட்ட எழுத்தாளர்கள் (தி ஜா , கு ப ரா, எம் வி வெங்கட்ராம் முதலியோர்) புத்தகம் எப்படியோ கைக்குக் கிடைத்துப் படிக்கவும் செய்திருந்தேன். தஞ்சை பிரகாஷ் கதைகள் மட்டும் கிடைக்கவே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. படிக்க இப்போதுதான் ஒழிந்தது.
  தொகுப்பில் மொத்தம் 31 கதைகள் உள்ளன. அவற்றில் வெளிவராதது ஐந்து. அந்த ஐந்தினுள் முடிவுறாத ஒரு கதையும் உண்டு.

  வெளியீடு: காவ்யா
  முதல் பதிப்பு ஜூலை 2004
  விலை ரூபாய் இருநூறு

  தஞ்சை பிரகாஷ் ஒரு சிறந்த கதைசொல்லி ஆக அறியப்படுகிறார். கேரளத்துக் குமரன் ஆசான் விருது, கதா விருதுகள் இவரை அலங்கரிக்கின்றன. தஞ்சை பிரகாஷின் துணைவியார் மங்கையர்க்கரசி பிரகாஷ் அழகான முன்னுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் பிரகாஷின் ஆளுமையும் என்ன மாதிரியான கதைகள் உள்ளே இருக்கின்றன என்பதற்கான முன்னோட்டமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் மனிதனுக்கும் காமத்திற்குமான தொடராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளன தொகுப்பாசிரியரின் (காவ்யா சண்முகசுந்தரம்) கூற்றுப்படி.

  ஒவ்வொரு கதையின் ஆழமும் பிரமிக்க வைக்கிறது. தாராளமாக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக்கு இந்தக் கதைகளை எடுத்துக்கொள்ளலாம்.

  முதல் கதை அங்கிள் என்னை மிகவும் கவர்ந்தது. முடிவு மிக அபாரம். காமம் சாகும் கதை. அங்கிள் பக்கத்து வீட்டுச் சின்ன பெண்ணைத் தன் வசப்படுத்தப் பார்க்கிறார். ஓரிரு முறை முயற்சியும் செய்கிறார். அவளோ வேறொருவனிடம் ஏமாந்து வயிற்றில் கருவோடு அங்கிளிடம் தஞ்சம் அடைகிறாள். ‘அங்கிள்’ என்கிற கேவலுடன் அவள் அவரை அணைக்கும்போது அவருடைய காமம் சாகிறது. ‘அந்த’ சுகம் சாகிறது.

  ஜானுப்பாட்டி அழுது கொண்டிருக்கிறாள் என்ற கதையில் பேத்தியை ஒரு காமுகனிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய ஒரு பாட்டியின் தவிப்பு தெரிகிறது. ஜானு அந்தக் காமுகனிடம் பேத்திக்கு ‘அது’ என்றால் என்னவென்று காட்டிவிட்டால் அவள் பின்னால் நிலை கொள்ள மாட்டாள் என்று பொரிந்து தள்ளும் இடம் மிக அருமை. பேத்தியிடம் அது பற்றிப் பேச முடியாமல் தொடர்ந்து ஜானு அழுவதாகக் கதை முடிகிறது.

  வடிகால் வாரியம் கதையில் கூடாக் காமம் கொலை வரைக்கும் கூட இழுத்துச் சென்று விடும் என்கிற உண்மை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் இதை நாள்தோறும் செய்தித்தாட்களில் பார்ப்பதால் இது ஒரு பெரிய விஷயமாக நமக்குப் படாமல் இருக்கலாம். இந்தக் கதையில் காபி போடும் செய்முறை ஒரு இடத்தில் வருகிறது. பில்ட்டர் காபி எங்கள் ஊர்ப் பக்கம் ரொம்பப் பிரசித்தம். காபியின் சுவை ‘ ஆனந்தமான கசப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது. அதை நான் மிகவும் ரசித்தேன். எனக்குக் காபி கசப்பாகத்தான் இருக்க வேண்டும். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்தில் பாம்பே ஞானம் (படத்தில் ஷாமின் அம்மா)’கசந்தால்தான் காபி, இனிச்சா அதுக்குப் பேர் பாயசம்’ என்பதும் நினைவுக்கு வருகிறது.

  இதுவரை படித்ததிலேயே மிகவும் பிடித்தது ‘கடைசிக்கட்டி மாம்பழம்’ என்ற கதைதான். பத்து பெண்களைப் பெற்ற ஒரு பெண்ணிற்கும் திருமணமே ஆகாத ஒரு ஆணிற்கும் இருபது வருடங்கள் நடக்கும் சதுரங்க ஆட்டம் தான் கதை. இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதில்லை. பேசிக்கொள்வதில்லை கதை முடியும் வரை. ஒருவர் மனதில் ஒருவர் உள்ளனர் எனபது இருவருக்குமே தெரியும். அதைக் கதை முடிவில் சொல்லும் விதம் மிக அருமை.

  “நீ கும்புடுற சாமியும் நாங் கும்புடுற சாமியும் ஒண்ணுன்னு ஒனக்கும் எனக்கும் மட்டுந்தாண்டி தெரியும்”
  நியூசன்ஸ் கதையின் கரு நம் அனைவருக்கும் பரிச்சயமானதுதான். பெண்ணைக் கண்கொத்திப் பாம்பாகக் கவனிப்பது. கதைப்படி ஒருவன் பெண்ணை நடுரோட்டில் வைத்து முத்தமிட்டு விடுகிறான். பெண்ணின் தந்தை அவளைக் கூட்டிக்கொண்டு காவல் நிலையம் வந்துவிடுகிறார். அவன் மேல் புகார் கொடுக்கும்படி வற்புறுத்துகிறார்.அவள் தரும் விடை எல்லாருக்கும் இடி இறங்குவதுபோல் இருக்கிறது.

  “மன்னி குளிக்கரப்போ பாக்கறா, ஒழுங்கா இருக்கேனா? அம்மா ராத்திரி தூங்கறேனான்னு பாக்கறா, அப்பா ஒழுங்கா வரேனான்னு பாக்கறா, இவர் தேவலை, கட்டிப்பிடிச்சு அப்படியே முத்தி… வேறென்ன?”

  என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம் ஒரு சுவாரஸ்யமான கதை. இந்தத் தொகுப்பின் முதல் கதையான அங்கிள் கதையில் வருவது போல ஒரு அங்கிள் பிரகாஷைப் பார்க்க வருகிறார். தன் தரப்பு நியாயத்தையும் பிரகாஷ் அவரைத் தவறாகச் சித்தரித்து இருக்கக் கூடாது என்றும் ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகிறார். “நல்லவன் என்று நிரூபிப்பதில் அவன் எவ்வளவு முதிர்ந்தவனானாலும் குழந்தை போல வேக வெறி கொள்கிறான்”

  அரசலாற்றில் தண்ணீர் வற்றி இருக்கும்போது முழங்கால் அளவுக்கு ஓடும். பகல் முழுதும் இரைக்கு வெளியே வராத மீன்கள் இரவில் வரும். இருட்டியவுடன் ஒரு சைக்கிள் டயரைக் கொளுத்திக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய பட்டாளமே ஆற்றுக்குக் கிளம்பிவிடும். தண்ணீர் மட்டத்துக்கு மேல் அலையும் மீன்களை வெட்டுவதற்கு என்றே பிரத்யேகமாக ஒரு அரிவாள் வைத்திருப்பார்கள். அவ்வாறு வெட்டப்பட்டுப் பிடிக்கும் மீனிற்கு வெட்டுமீன் என்றே பெயர். இந்தத் தொகுப்பில் உள்ள ‘உம்பளாயி’ கதையைப் படித்ததும் இந்த மலரும் நினைவுகள். விதவிதமான மீன்களைப் பற்றிய வர்ணனை இந்தக் கதையில் இடம்பெறுகிறது.

  “ஆரா மீன் சேற்றில் புதையும். குரவையும் புதையும் ஆனால் தலையை மேலே நீட்டிக்கும். வெள்ளை உலுவை சேற்றில் அலையும் (இந்த மீனைப் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!). வெட்டித் துண்டு போட்டால் கூடச் சட்டியில் இருந்து வெளியே துள்ளிக் குதிப்பது வெறால் மீன் ஒன்றுதான்”

  இன்னும் எழுத ஆசைதான். நீங்களும் கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

  தஞ்சை பிரகாஷ் கதைகள் பற்றிய வேறு பதிவுகள் ஏதேனும் இருந்தால் அந்த சுட்டிகளைத் தந்து எனக்கு உதவுங்களேன்! நன்றி !

 4. தஞ்சை சிவன், கோபியே இங்கே மறுமொழி இட்டிருக்கிறார், ஆனால் தன பதிவு பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாரே? தன்னடக்கமோ என்னவோ 🙂

  Like

 5. \\கோபியே இங்கே மறுமொழி இட்டிருக்கிறார், ஆனால் தன பதிவு பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாரே? தன்னடக்கமோ என்னவோ \\

  :-))

  \\கோபி, நான் மரக்கால் பற்றி கேள்விப்பட்டதில்லை. தேடித் பார்க்க வேண்டும்.\\

  சென்னை புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி 2011) வாங்கிவிட்டேன். நந்தனார் சரித்திரம்தான். படிக்க இன்னும் ஒழியவில்லை:-(

  Like

 6. கரமுண்டார்வீடு, செந்நெல் தவிர மற்றவைகளை படித்திருக்கிறேன். புளியமரத்தின்கதை, புயலிலே ஒரு தோணி, பொய்தேவு விடுபட்ட முக்கிய நாவல்கள். வானம்வசப்படும், கோவேறுகழுதைகளைவிட பல மடங்கு முக்கியமானவைகள் என நினைக்கிறேன்.

  Like

  1. அஷோக் குமார், செந்நெல் முக்கியமான ஆவணம். ஆனால் புத்தகம் என்ற வகையில் பிரமாதமாக இருக்காது. நானும் கரமுண்டார் வீடு படித்ததில்லை.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.