ராஜமார்த்தாண்டன் சிபாரிசுகள்

மூலப்பதிவு – தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்

ராஜமார்த்தாண்டன் முக்கியமான இலக்கிய – குறிப்பாக கவிதை விமர்சகர். நமக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம் என்பதால் எனக்கு இவரைப் பற்றி தெரிந்ததெல்லாம் secondhand information-தான். என்றாவது ஒரு நாள் இவர் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” கவிதைத் தொகுப்பை தம் கட்டி படித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமியின் பக்தர் போலிருக்கிறது, பத்தில் மூன்று புத்தகம் சுரா எழுதியதுதான். (இரண்டு ஜெயமோகனுடையது)

  1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் அருமை. என் பதிவு இங்கே. கந்தர்வனும் சிபாரிசு செய்கிறார்.
  2. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி அருமை.
  3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் அருமை. வேதம் படிக்கும், ஒரு விதவையுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பும் மகன், அவனது சோரம் போகும் அம்மா ஆகிய இரு பாத்திரங்களை வைத்து விளையாடி இருக்கிறார்.
  4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி அருமை. வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.
  5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி ரொம்ப நாளாக ஷெல்ஃபில் தூங்குகிறது. இன்னும் படிக்கவில்லை.
  6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன்.
  7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அருமையான புத்தகம். வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.
  8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் ஜெயமோகன் நாலைந்து அற்புதமான நாவல்களை எழுதி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் – விஷ்ணுபுரத்தை விட, ஏழாம் உலகத்தை விட, காடு நாவலை விட.
  9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன் சா.கந்தசாமியின் சிபாரிசும் கூட.
  10. உபபாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன் நல்ல புத்தகம். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு fascination உண்டு. மகாபாரதத்தை வைத்து எவ்வளவு மோசமாக எழுதினாலும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். இது நன்றாகவே எழுதப்பட்டிருக்கும், ஆனால் மகாபாரதத்தை வைத்து இதை விட நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன.