Skip to content

சுந்தர ராமசாமியின் “நினைவோடை – ஜீவா”

by மேல் ஏப்ரல் 25, 2011

சுந்தர ராமசாமி சில ஆளுமைகளை – கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, எழுத்தாளர்கள் க.நா.சு., சி.சு. செல்லப்பா, நண்பர் கிருஷ்ணன் நம்பி மற்றும் சிலரைப் பற்றிய தன் நினைவுகளை நினைவோடை என்ற சீரிஸில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எல்லாம் சின்ன சின்ன புத்தகங்கள், சுலபமாக ஒரு இருபது முப்பது நிமிஷத்தில் படித்துவிடலாம். இவை எதுவும் வாழ்க்கை வரலாறு இல்லை. சுந்தர ராமசாமிக்கு அவர்களோடு இருந்த தொடர்பு, சுராவின் கண்ணில் இவர்கள் என்றுதான் இருக்கிறது.

ஜீவாவைப் பற்றி என் தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஓரளவு தலைவர்கள், சமகால தமிழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ள எனக்கே கூட ஜீவா ஒரு பேர்தான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என்ன சாதித்தார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டாரா என்பது கூடத் தெரியாது. சுரா ஜீவாவின் ஆளுமையை சுலபமாகக் காட்டிவிடுகிறார்.

ஜீவாவின் பங்களிப்பு ஒரு தொழிற்சங்கவாதி என்றோ, அறிவுஜீவி என்றெல்லாம் இல்லை. அவர் ஒரு people person. எல்லாருடனும் கலந்து பழகுபவர். பேச்சாளர். அதுவும் அன்றைக்கு மக்கள் மனதை கவரக் கூடிய விதத்தில் பேசுவதில் வல்லவர்கள் – அண்ணாதுரை, கருணாநிதி, ம.பொ.சி. என்று பலர் இருந்தார்கள். இவர் அவர்களிலேயே சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். கூட்டத்தை கவரக்கூடிய charisma உள்ளவர். தான் சித்தாந்தத்தை கரைத்துக் குடித்தவன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. எப்பேர்ப்பட்டவனுக்கும் ஏதோ தெரிந்திருக்கும், அதைப் பற்றி பேச வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். வரட்டு சித்தாந்தத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். உண்மையிலேயே இவரை மாதிரி ஆளுக்காகத்தான் ஓட்டு விழும். மனிதர்களின் இதயத்தை தொடக்கூடியவர். நல்ல மனிதர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஆனால் இவர் மாதிரி ஆட்களின் பங்களிப்பு வெகு விரைவில் மறந்துவிடும். அவரைப் பார்த்துப் பேசி பழகி பேச்சைக் கேட்டவர்களுக்குத்தான் நினைவிருக்கும். அவரது legacy என்று சொல்ல அந்த நினைவுகளைத் தவிர வேறு எதுவுமில்லை. அந்த நினைவுகளைத்தான் சுரா பதிவு செய்திருக்கிறார்.

சுரா கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்திருக்கிறார். அதற்கு ஜீவா ஒரு முக்கிய காரணம். சின்ன வயது சுராவுக்கு ஜீவா ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியோடு கசப்பு ஏற்பட்ட பிறகும் ஜீவா இவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். கடைசி வரை நல்ல உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை சிறந்த, ஆனால் சிம்பிளான கோட்டோவியம் மாதிரி இங்கே காட்டி இருக்கிறார்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நாற்பது ரூபாய். புத்தகத்தின் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.

ஜீவாவைப் பற்றி ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு வர வேண்டும். அதற்கு தகுதியானவர் அவர் என்று அவரைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கே தெளிவாகத் தெரிகிறது. இப்போதைக்கு இதையாவது படியுங்கள்!

பக்சின் குறிப்பை இங்கே படிக்கலாம்.

பிற்சேர்க்கை: கே. ஜீவபாரதி ஜீவா எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்திருக்கிறார். அதைப் படித்தபோது ஜீவா அலங்காரப் பேச்சு, எதுகை மொகனை, இவற்றை எல்லாம் நம்பியவர் இல்லை என்று தெரிகிறது. விவரங்களைச் சேகரித்து நிறைய பேசி இருக்கிறார். புத்திசாலித்தனமாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுகளுக்கு இன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்னையில் ட்ராம் சர்வீஸ் நின்றபோது தொழிலாளர்கள் பட்ட பாடு என்பதில் இன்றைய மனிதர்களுக்கு என்ன இருக்கிறது?

Advertisements
2 பின்னூட்டங்கள்
 1. kesavamani permalink

  சு.ரா.நினைவோடை வரிசையில் ஜீவா பற்றிய நினைவுகளை சு.ரா. அழகாக சொல்கிறார். ஜீவாவை தெரியாதவர்கள் கூட, இதன் மூலம் தங்கள் மனங்களில் ஜீவா பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கி கொள்ள முடியும். ஜீவாவை அக்கட்சி எப்படி பயன்படுத்தி கொண்டது என்பதை அறியும் போது நம் மனதில் ஜீவாவின் மேல் ஆழ்ந்த அனுதாபம் ஏற்படுகிறது. தன் பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியன பற்றி துளியும் கவலைபடாத பெரும் மனிதராக ஜீவா நம் கண் முன் விரிகிறார்.

  சு.ரா. முதன்முதலில் ஜீவாவை சந்திக்கும்போது, ஜீவா ஒரு யானையாகவும் சு.ரா. எறும்பாகவும் நம் மனக்கண்ணில் காட்சி தருகிறார்கள். அனால் போகப்போக ஜீவாவின் உருவம் சிறிதாகிகொண்டே வந்து முடிவில் சு.ரா. பிரமாண்டமாக நமக்கு தெரிகிறார்.

  முன்பின் தெரியாத நபரிடம் யாருமே எடுத்தவுடன் பேசுவது அரிது. அனால் ஜீவா யாரிடமும் தயக்கமில்லாமல் பேசுபவர் என்பதை விவரிக்க வரும் சு.ரா. இவ்வாறு கூறுகிறார்:

  “…..அந்த அம்மாவுக்கு இவருடன் பேசுவதில் தயக்கம் இருந்தது. இவர் நிக்கர் போட்டுகொண்டு மீசையுடன் இருந்தார். அவர் அப்படியே வாழையை சுற்றி பார்வையை ஓட விடுவது போல் பாவனை செய்வார். அவரது நோக்கம் அந்த அம்மாவுடன் ஓர் உரையாடலை தொடங்க வேண்டும் என்பதுதான். அதுக்கு சம்பந்தமே இல்லாததுபோல் முகத்தை வைத்துகொண்டு அந்த அம்மா வடக்கே பார்த்து கொண்டிருந்தால், இவர் தெற்கே பார்த்து முகத்தை வைத்து கொண்டிருப்பார். அப்புறம் அந்த அம்மாவின் உலகத்திற்கு ஒத்துவரகூடிய கேள்வி ஒன்றை கேட்பார். ஈய பாத்திரம் தேய்ப்பது சுலபமா பித்தளை பாத்திரம் தேய்ப்பது சுலபமா என்பது போல் இருக்கும் அந்த கேள்வி. உடனே அந்த அம்மா ஈய பாத்திரம் தேய்ப்பதுதான் சுலபம் என்றோ பித்தளை பாத்திரம் தேய்ப்பதுதான் சுலபம் என்றோ சொல்லகூடும். அப்படி ஆரம்பித்து பத்து நிமிடத்துக்குள் அவள் மனதில் நெருக்கமான இடத்தை பிடித்துகொண்டு விடுவார்.”

  ஜீவாவின் எளிமை, யாரிடமும் சகஜமாக பேசும் அவரது குணம், தன் கட்சிக்கு ஆட்கள் சேர்க்கவேண்டும் என்பது தவிர வேறு எதிலும் ஆசை கொள்ளாத அவரின் பற்றுஅற்ற தன்மை, பல்வேறு சமயங்களில் கட்சியை மீறி தான் ஒன்றும் செய்ய இயலாத நிலை, ஆகியனவும் இன்ன பிற குணங்களும் சு.ரா.வால் எளிமையான மொழியில் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

  ஜீவாவை அறியாதவர்கள் இதன் மூலம் ஜீவாவை ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.

  Like

  • கேசவமணி, எனக்கு ஜீவாதான் பிரதானமாகத் தெரிந்தார்.

   சில சமயம் வோர்ட்பிரஸ் சில பின்னூட்டங்களுக்கு என் அனுமதியை எதிர்பார்க்கிறது. அதனால் உங்கள் மறுமொழி தெரிய கொஞ்சம் நேரமாகலாம். டென்ஷன் ஆகாதீர்கள்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: