லக்ஷ்மி ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளார். அவரும் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். ஆனால் அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளர் இல்லை. அவர் எழுதிய மிக சிறந்த நாவல்களாக கருதப்படும் மிதிலா விலாஸ், பெண் மனம் போன்ற அத்தனையும் என் கண்ணோட்டத்தில் வெறும் fluff. அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)
காஞ்சனையின் கனவும் அப்படித்தான். நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாவல் இல்லை. ஆனால் இந்த புத்தகத்தில் தெரியும் அந்தக் கால விழுமியங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. கதையின் நாயகனுக்கு ஒரு தாசியின் பெண்ணோடு தொடுப்பு. தாசி குலத்துப் பெண்ணானாலும் அவள் கற்புக்கரசி. அப்படி ஒரு பெண்ணை “வைத்துக்கொண்டு” இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்கிறான். இது கதையில் யாருக்கும் தவறாகத் தெரியவில்லை! இன்றைக்கு இப்படி ஒரு நாவல் வந்தால் பெண்ணியவாதிகள் கொதித்தெழுவார்கள்.
சிம்பிளான, பெரிய முடிச்சுகள் எதுவும் இல்லாத கதை. ஊரில் ஒரு பண்ணையார். தொழில் செய்யப் பார்க்கிறார். அவருக்குத்தான் தாசி குலப் பெண்ணோடு தொடுப்பு. அந்த பெண் இவரை கணவனாக வரித்திருக்கிறாள். நடுவில் இவர் ஒரு ஏழைப் பெண்ணைப் பார்த்து மயங்கி அவளை கல்யாணம் செய்து கொள்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் அன்பாக இருக்கிறார். மனைவியும் துணைவியும் இன்னொருத்தி வந்துவிட்டாளே என்று அழுவதைக் கூட பண்ணையார் இல்லாதபோதுதான் செய்வார்கள், அப்படிப்பட்ட பத்தினி தெய்வங்கள். (முடியல!) பண்ணையார் அந்தஸ்து பார்க்கிறார், அதனால் அவர் தன் மனைவியின் தாத்தாவைத் தவிர்க்கிறார். மனைவியின் அண்ணன் ஒரு டாக்டர். அந்தக் காலத்தில் டாக்டர்கள் கூட ஏழையாக இருந்தார்கள் போலிருக்கிறது. சரி லக்ஷ்மியே ஒரு டாக்டர் அவருக்குத் தெரியாதா? டாக்டர் சீதாவோடு அவனுக்கு காதல். சீதா பண்ணையாருக்கு உறவு. பண்ணையார் வீட்டுக்கு சீதா வரும்போது இவர் அவளையும் பார்த்து சபலப்படுகிறார். ஏற்கனவே வைப்பு விஷயத்தில் சோகமாக இருக்கும் கர்ப்பிணி மனைவி வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அண்ணனும் தவறாகப் புரிந்துகொண்டு எங்கோ போய்விடுகிறான். அப்புறம் உண்மை எல்லாம் தெரிகிறது. வைப்பாட்டி உயிரை விடுகிறாள். எல்லாரும் இணைந்து சுபம்!
கே.ஆர். ராமசாமி (ஹீரோ), லலிதா (ஹீரோயின்), பத்மினி (தாசியின் பெண்), மனோகர், நம்பியார் நடித்து காஞ்சனா என்ற திரைப்படமாகவும் வந்தது. ராண்டார்கை இந்தப் படத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார்.
ஜெயமோகன் காஞ்சனையின் கனவு நாவலைத் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். அவர் அப்படி சேர்க்காவிட்டால் இந்த நாவலைப் பற்றி பதிவு எழுதி இருக்கவே மாட்டேன். அவர் நல்ல இலக்கியம் என்று சுட்டிக் காட்டுபவை எனக்கு அனேகமாக பிடித்திருக்கின்றன. ஆனால் அவர் பொருட்படுத்த வேண்டிய வணிக எழுத்து என்று சுட்டிக் காட்டுபவை பல முறை தண்டமாகத் தெரிகிறது. இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் அத்தனை புத்தகங்களையும் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு ஆசை. இலக்கியத்தை தேர்ந்தெடுக்க மிகவும் கறாரான அளவுகோல் வைத்திருக்கும் அவர் வணிக எழுத்து என்று வந்துவிட்டால் எப்படியாவது பாஸ்மார்க் போட்டுவிடலாம் என்று நினைக்கும் வாத்தியாரைப் போல இருக்கிறார். 🙂 சின்ன வயதில் அவருக்கு பிடித்திருந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கிறாரோ என்னவோ. 🙂
என் கண்ணில் லக்ஷ்மியே இதை விட நல்ல நாவல்களை – மிதிலா விலாஸ், பெண் மனம் – மாதிரி எழுதி இருக்கிறார். இதைத் தவிர்க்கலாம். படமே 1952-இல் வந்திருக்கிறது. கதை நாற்பதுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். வைப்பாட்டியை அப்போது எப்படி பார்த்திருப்பார்கள் என்ற insight தவிர எனக்கு புத்தகத்தில் வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.
உடுமலை தளத்தில் புத்தகம் கிடைக்கிறது. விலை 105 ரூபாய்.
தொடர்புடைய சுட்டிகள்:
லக்ஷ்மியின் வாழ்க்கைக் குறிப்பு
காஞ்சனா திரைப்படத்தைப் பற்றி ராண்டார்கை
லக்ஷ்மிக்கும் மற்றொரு வணிக எழுத்தாளருக்கான ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் சற்று ஆகாது. லக்ஷ்மி பெண்களை உயர்த்தி ஆண்களைக் கொஞ்சம் அச்சுபிச்சு + வேஸ்ட் ஆக எழுதினால், ஹேமா ஆனந்த தீர்த்தன் பெண்களையும் ஊறுகாய் போல வைத்து கொஞ்சம் வேறு மாதிரி எழுதுவார்.
ஒருமுறை குங்குமச் சிமிழ் இதழில் (அது குங்குமச்சிமிழா மாலைமதியா என்பது சரியாக நினைவிலில்லை) “கௌதம் உன்னை கோர்ட்டில்” என்று நாவல் எழுதினார் லக்ஷ்மி.
உடனே ஹேமா ஆனந்த தீர்த்தனுக்கு வேகம் வந்து விட்டது. அடுத்த இதழில் ஹேமா ஆனந்த தீர்த்தன் எழுதிய நாவலின் பெயர் என்ன தெரியுமா?
“சரயு உன்னை நடுத்தெருவில்…”
ஆமாம். இப்போது ஏன் – அது வணிகமோ அல்லது இலக்கியமோ – எழுத்தாளர்கள் இப்படி போட்டி போட்டுக் கொண்டு எழுத மாட்டேன் என்கிறார்கள். ஒருவரை ஒருவர் வசை பாடுவதை விட (Except ஜெயமோகன் & எஸ்.ரா.அவர்கள் இருவருமே பக்குவம் உள்ளவர்கள்) இப்படி போட்டி போட்டுக் கொண்டு எழுதினால் இன்னும் படைப்புகள் வீரியமாக இருக்காதா?
LikeLike
ரமணன்,
ஹேமா ஆனந்ததீர்த்தன்! மறந்து போன பெயரை எல்லாம் நினைவுபடுத்துகிறீர்கள்!
LikeLike
“லெஷ்மி பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவர்களது பிரச்சனைகளையும் அதன் தீர்வுகளையும் மையமாக வைத்துக் கதைகள் எழுதுவார்; ரொம்ப நல்லா இருக்கும். நீ கண்டிப்பாகப் படிக்கனும்” என்று என் தோழியின் அம்மா ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காகவே நான் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகம் “காஞ்சனையின் கனவு” 🙂
LikeLike
சுபத்ரா, காஞ்சனையின் கனவு பெண்களுக்கு நம்பிக்கையூட்டுவது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் லக்ஷ்மியைப் பற்றி உங்கள் அம்மாவின் கருத்தை ஒரு தலைமுறைக்கு முந்தைய பெண்களிடம் கேட்டிருக்கிறேன்.
LikeLike
Dear RV,
லஷ்மியின் புத்தகம் கிடைக்காதா எனத் தேடிக்கொண்டிருந்த போது தற்செயலாகக் கிடைத்த ஒரு புத்தகம் தான் “காஞ்சனையின் கனவு”.
LikeLike
சுபத்ரா, காஞ்சனையின் கனவை விட பெண் மனம், மிதிலா விலாஸ் போன்றவை பரவாயில்லை (என் கண்ணில்)
LikeLike