மணிபல்லவம்

சரித்திர நாவல்கள் என்று ஆறேழு பதிவுகள் எழுதியபோது ஜெயமோகன் ஒரு மறுமொழியில் சொல்லி இருந்தார் –

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும். அக்கால அறிவுலகம் பதிவாகிய நாவல் அது

அவரது கருத்தைப் படித்ததிலிருந்து இந்த நாவலைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. நண்பன் பக்சிடம் புத்தகமும் இருந்தது. ஆனால் அறுநூறு பக்கத்துக்கு மேல் இருந்தது, அதுதான் பிரச்சினை.

எப்படியோ ஒரு நாள் தம் கட்டி ஆரம்பித்தேன். சும்மா கிடுகிடுவென்று படிக்க முடிந்தது. ஏதாவது stuff இருந்தால்தானே நேரமாகும்? கல்கியின் தளத்திலிருந்து மாறுபட்டவை என்று அறுநூறு பக்கத்து நாவலில் ஒரு ஆறு பக்கம் தேறலாம். நா.பா.வுக்கு அரண்மனைச் சதி என்ற genre-ஐத் தாண்டியும் எழுதலாம் என்ற பிரக்ஞை இருந்திருக்கிறது, அப்படி எழுதவேண்டும் என்று ஆர்வமும் ஆசையும் இருந்திருக்கிறது, என்ன எழுதலாம் என்ற ஐடியாவும் இருந்திருக்கிறது, ஆனால் எழுதத்தான் தெரியவில்லை/முடியவில்லை.

அரண்மனைச் சதி என்ற பாணியிலிருந்து விலகி எழுதவேண்டும் என்று நினைத்த நா.பா. அந்தச் சதி வேலைகளை சிம்பிளாக ஒரு செல்வந்தர்-வில்லன் வீட்டுக்கு மாற்றிவிடுகிறார். இதையெல்லாம் வேறுபாடு என்று எப்படி அவரால் நினைக்க முடிந்ததோ தெரியவில்லை. சரித்திர நாவலில் சரித்திர மனிதர்கள் யாருமில்லை. (ஆனால் பூம்புகாரின் geography பற்றி – இங்கே இந்த வனம், அங்கே அந்தக் கோவில் – என்று சில விவரங்கள் தருகிறார்.) மனிதர்கள் இருந்தால் நாவலின் காலம் உறுதியாக நிர்ணயப்படுத்தப்படும். இப்போது நாவல் ஒரு நூறு இருநூறு வருஷங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு பாத்திரமாவது caricature என்ற அளவுக்கு மேல் போகவில்லை. ரஜினி, விஜய், அஜீத் மாதிரி என்ட்ரி கொடுக்கும் அழகான ஹீரோ இளங்குமரன் (நா.பா.வின் ஹீரோக்கள் எப்போதுமே அழகாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்து பெண்கள் தெருவில் சொத்சொத்தென்று மயங்கி விழுந்து கொண்டே இருப்பார்கள்) ஓபனிங்கில் ஒரு யவன மல்லனை வீழ்த்துவது, அவனைப் பார்த்தவுடனே காதல் கொள்ளும் ஹீரோயின் சுரமஞ்சரி, திமிராக அவளை மறுக்கும் ஹீரோ (நா.பா.வின் முக்கால்வாசி ஹீரோக்கள் அப்படித்தான் – திமிராக இருப்பதுதான் ஆண்மை என்பது நா.பா.வின் நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு motif), இளங்குமரனை காதலிக்கும் இரண்டாவது ஹீரோயின் முல்லை, இளங்குமரனின் பிறப்பில் ஒரு உப்புச்சப்பில்லாத மர்மம், எம்ஜிஆர் படத்தில் வரும் அசோகன்-நம்பியார் மாதிரி வில்லன்கள் (நகைவேழம்பர், பெருநிதிச்செல்வர்), அதே படத்தில் வரும் மேஜர் சுந்தரராஜன் மாதிரி இளங்குமரனை வளர்க்கும் ஒரு முனிவர் என்று மோசமான cliches நிறைந்த ஒரு நாவல்.

லாஜிக் என்பது துளியும் இல்லை. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். இளங்குமரன் போகும் கப்பலை நகைவேழம்பரின் கப்பல் தாக்குகிறது. ஹீரோவின் கப்பல் காப்டன் தீயம்புகளை வீசி வில்லனின் கப்பலைத் தீப்பிடிக்க வைக்கிறார். கப்பல் எரிகிறது, கப்பலில் இருக்கும் ஏறக்குறைய அனைவருக்கும் உயிரிழப்பு, படுகாயம். அப்போது ஒருவர் நகைவேழம்பரைக் கொல்ல வேலை எடுத்து வீசப் போகிறார். கப்பல் காப்டன் தடுக்கிறார் – புனிதமான புத்த பூர்ணிமை தினம் அன்று ஒரு உயிரை கொலை செய்ய வேண்டாமாம். ஒரு வரி முன்னால் காப்டன் எறிந்த தீயம்பு அந்தக் கப்பலில் அடுப்பு மூட்டி சமைக்கவா?

கதையின் ஒரே நல்ல விஷயம் – இளங்குமரன் தர்க்க முறைய கற்று “ஞானி”யாகிறான் என்பதுதான். ஒரு ஆறேழு பக்கத்துக்கு தர்க்கங்கள் – விஷ்ணுபுரத்துக்கு முன்னால் இப்படி ஒரு விஷயம் எந்த தமிழ் புனைவிலும் சொல்லப்பட்டதில்லை. ஆனால் வாதங்களில் எனக்கு லாஜிக் குறைவாகவே தெரிந்தது. நா.பா. வாசகனுக்காக oversimplify செய்தாரா என்று தெரியவில்லை.

அதிலும் இதே மாதிரிதான் – ஆசையும் ஆணவமும் அற்றவனாக, சாந்த சொரூபியாக, உலகில் அனைவர் மீதும் அன்பே உருவானவாக பரிணாமித்திருக்கிரானாம். அவன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் உலகின் எல்லா மதத்தவரையும் “ஞானிகளையும்” தர்க்கப் போரில் வென்று நாவலோ நாவல் என்று தன் கொடியை நாட்டுவதுதானாம். அன்பே உருவான சாந்த சொரூபிக்கு எதுக்கய்யா போட்டியும் வெற்றியும்? இதில் உள்ள முரண்பாடு நா.பா.வுக்கும் அப்போது படித்தவர்களுக்கும் தெரியவே இல்லையா? ஹீரோவை எதிர்த்து வாதிடுபவர்கள் ஆணவம் நிறைந்தவர்கள், அவர்களை எதிர்க்கும் ஹீரோ தியாகச் சுடர். “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என்று பாடாததுதான் பாக்கி.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை முன்னூறு ரூபாய். சென்னை லைப்ரரி தளத்தில் இலவசமாக மின்புத்தகம் கிடைக்கிறது.

நா.பா.வின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்த நாவல் குப்பை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே எழுதி இருக்கிறார். குறிஞ்சி மலர் போன்றவை இதை விட பல மடங்கு பெட்டர். இதில் அவரது தன்னைப் பற்றியே கொண்டிருக்கும் பகல் கனவுதான் தெரிகிறது. ஜெயமோகனின் ரசனையும் என் ரசனையும் ஓரளவு ஒத்துப் போகும். இந்த நாவல் விஷயத்தில் மட்டும் ஏனோ எங்கள் கருத்து முற்றிலும் எதிரும் புதிருமாக இருக்கிறது.

8 thoughts on “மணிபல்லவம்

  1. என் ஓட்டு உங்களுக்குத் தான். உணர்ந்த உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நா.பா.வின் சரித்திரக் கதைகள், அவரது சமூகக் கதை பாணிகளிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதபடி சிரமப்படுத்துபவை.

    Like

    1. பிருந்தாபன்,
      மணிபல்லவம் உங்களுக்கு ஒரு உச்சம் என்றால் அது உங்கள் ரசனை. எனக்கு முதல் வரியில் தீயம்பு எறிந்துவிட்டு அடுத்த வரியில் புனிதமான புத்த பூர்நிமையில் உயிர்க்கொலையைத் தவிர்க்கலாம் என்று ஆலோசனை சொல்லும் கப்பல் தலைவனும், ரொம்ப நல்லவனாக மாறிவிட்ட இளங்குமரன் ஞானப் “போரில்” எல்லாரையும் வெல்லத் துடிப்பது மாதிரி பல விஷயங்களில் உள்ள முட்டாள்தனமும் முரண்பாடும், ஹீரோவைப் பார்த்தவுடன் காதல் வசப்படும் ஹீரோயின், எம்ஜிஆர் படம் மாதிரி எல்லாப் பெண்ணும் அவரை நினைத்து கனவு காண்பது ஆனால் எம்ஜிஆர் பெண்களை நினைத்துக் கூடப் பார்க்காதது மற்றும் நம்பியார் மாதிரி கையைப் பிசையும் நகைவேழம்பர் மாதிரி மோசமான cliches எல்லாம் இதை மறுதலிக்கச் செய்கின்றன, அவ்வளவுதான்.

      ஜீவி, மறுமொழிக்கு நன்றி!

      Like

  2. எப்படிப் பல பேருக்கு ஜெயமோகன் நாவல்கள் குப்பை என்று தோன்றுகிறதோ அப்படித்தான் நா.பா வின் நாவல்கள் உங்களுக்குப் புரியவில்லை என்று தான் நான் சொல்வேன். ஜெயமோகன் நாவல்கள் ஏன் சிறந்தவை என்று கேட்டால் நிச்சயம் உங்களால் logical ஆக அதனை நிறுவ முடியாது. அப்படித்தான் நா.பா வும். என் வரையில் மணி பல்லவம் ஒரு படைப்பின் உச்சம். பொன்னியின் செல்வனில் மட்டும் என்ன வாழ்ந்தது? அருள் மொழியின் அழகைப் பற்றி கல்கி எத்தனை முறை சொல்கிறார். வந்தியத்தேவனின் குயுக்தி வேறு யாருக்கு வரும்? தவறு சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் ‘taste’ இது இல்லை என்று தெரிகிறது. அதனால் தயவு செய்து நா.பா வைப் படிக்காதீர்கள். படித்துவிட்டு பேப்பருக்குப் பிடித்த கேடு என்கின்ற மாதிரி எழுதாதீர்கள். அவரின் தரம் கல்கிக்குத் (பத்திரிகை) தெரிந்திருந்தது. எங்கோ ஒரு பள்ளியில் ஆசிரியராய் இருந்தவரைக் கொண்டு வந்து உதவி ஆசிரியர் ஆக்கி அழகு பார்த்தது கல்கி. அவரின் தமிழ் ஆளுமை என்னை வியக்க வைத்திருக்கிறது (கல்கி மொழி ஆளுமையில் கடைசி இடந்தான்).
    எனக்குப் பிடித்த சரித்திர நாவல் வரிசை,
    1) வீரபாண்டியன் மனைவி (சோழர் கால “அரசியல்” பற்றிப் பேசும் நாவல் என்று சொல்லலாம். ஒரு துன்பியல் காதல் காவியம் என்றும் சொல்லலாம். இதுவே தமிழின் “most intelligent” சரித்திர நாவல் என்று அடித்துச் சொல்வேன்).
    2) மணி பல்லவம்.
    3) பொன்னியின் செல்வன்/சிவகாமியின் சபதம்.
    4) பாமினிப் பாவை (இவரின் தமிழ் ஆளுமையும் அபாரம்).

    Like

  3. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
    அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://sagakalvi.blogspot.com/

    Please follow

    (First 2 mins audio may not be clear… sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

    Online Books
    http://www.vallalyaar.com/?p=409

    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.