Skip to content

சுஜாதா நாவலில் கிழக்கு பதிப்பகம் குளறுபடி

by மேல் ஜூன் 10, 2011

உள்ளூர் நூலகத்துக்குப் போனபோது சுஜாதாவின் “இதன் பெயரும் கொலை” என்ற நாவல் கண்ணில் பட்டது. நான் படிக்காத ஒன்று. புரட்டிப் பார்த்தபோது 25-ஆவது கணேஷ்-வசந்த் நாவல் என்று தெரிந்தது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அவர்கள் professional என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

ஒரு நூறு பக்கம் வரைக்கும் எல்லாம் சரிதான். திடீரென்று பார்த்தால் பக்கத்தில் உள்ள பாராக்கள் முன்பின்னாக இருந்தன. கதை திடீரென்று ஜம்ப் ஆயிற்று. என்னடா என்று பார்த்தால் 102-ஆவது பக்கத்துக்குப் பிறகு 107 -ஆவது பக்கம் வருகிறது. கொஞ்ச நேரம் கழித்து 103-ஆவது பக்கம் வருகிறது. இந்த மாதிரி மூன்று முறை.

கடைசியில் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல பாதிக் கதையோடு நிறுத்திவிட்டார்கள். வில்லனைப் பிடித்தார்களா, பிரேர்ணா என்ன ஆனாள் போன்ற மர்மங்களைப் பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் கணேஷுக்கு அபூர்வமாக உருவாக்கப்பட்ட “ஜோடி” இன்ஸ்பெக்டர் இன்பா என்ன ஆனாள் என்பதைத் தெரிந்துகொள்ளாவிட்டால்தான் மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது.

போன வருஷம்தான் (2010) வெளியிட்டிருக்கிறார்கள்.கிழக்கு பதிப்பகத்துக்கு ஒரு திருஷ்டி போலிருக்கிறது.

கிழக்கு பதிப்பகம் பத்ரி இந்த பதிவை கவனித்து உடனடியாக பதிலும் அளித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் ஒரு மாபெரும் பிழை நிகழ்ந்திருந்தது எங்களது புரடக்‌ஷனில். கடைசி பல பக்கங்கள் பைண்ட் செய்யப்படாமலேயே கடைகளுக்குச் சென்றுவிட்டன. சிங்கப்பூரில் நூலகத்தில் இதனைப் படித்த ஒரு வாசகர் கூப்பிட்டுச் சொன்னதும், கடையில் இருந்த புத்தகங்களை எல்லாம் திரும்பப் பெற்று, பைண்டிங்கைப் பிரித்து கடைசிப் பக்கங்களைச் சேர்த்து, மீண்டும் பைண்ட் செய்து அனுப்பிவைத்தோம். ஆனால் அதற்குள் புத்தகங்களை வாங்கிச் சென்ற சுமார் 200 பேர்களை எப்படிச் சென்று சேர்வதென்று தெரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்து யாரேனும் – நூலகமோ அல்லது தனியாரோ – குளறுபடியான அந்தப் புத்தகத்தை வைத்திருந்தால், அதனை எங்களுக்கு அனுப்பி, பதிலுக்கு சரியான புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். நன்றி.

தவறுக்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் தமிழ் இணைய உலகில் அதிகம். இப்படி பொறுப்பாக பதில் சொன்ன பத்ரிக்கு நன்றி! கிழக்கு பதிப்பகத்தார் professionals என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பத்ரி உடனடியாக பதில் அளித்தாலும் இதை இணைப்பதில் எனக்குத்தான் தாமதம் ஆகிவிட்டது. அதற்காக பத்ரி என்னை மன்னிக்க வேண்டும்.

கடைசியில் ஒரு வழியாக புத்தகத்தை முழுதாகப் படித்துவிட்டேன். அனிதா இளம் மனைவி நாவல் இதே முடிச்சை இன்னும் அருமையாக விவரித்தது. இன்பாவுக்கு கணேஷ் ஏறக்குறைய propose செய்கிறார், ஆனால் அத்துடன் நின்றுவிடுகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

Advertisements

From → Sujatha

3 பின்னூட்டங்கள்
 1. balajisrini permalink

  இதன் பெயரும் புத்தகக் கொலை 😉

  Like

 2. இந்தப் புத்தகத்தில் ஒரு மாபெரும் பிழை நிகழ்ந்திருந்தது எங்காது புரடக்‌ஷனில். கடைசி பல பக்கங்கள் பைண்ட் செய்யப்படாமலேயே கடைகளுக்குச் சென்றுவிட்டன. சிங்கப்பூரில் நூலகத்தில் இதனைப் படித்த ஒரு வாசகர் கூப்பிட்டுச் சொன்னதும், கடையில் இருந்த புத்தகங்களை எல்லாம் திரும்பப் பெற்று, பைண்டிங்கைப் பிரித்து கடைசிப் பக்கங்களைச் சேர்த்து, மீண்டும் பைண்ட் செய்து அனுப்பிவைத்தோம். ஆனால் அதற்குள் புத்தகங்களை வாங்கிச் சென்ற சுமார் 200 பேர்களை எப்படிச் சென்று சேர்வதென்று தெரியவில்லை.

  உங்களுக்குத் தெரிந்து யாரேனும் – நூலகமோ அல்லது தனியாரோ – குளறுபடியான அந்தப் புத்தகத்தை வைத்திருந்தால், அதனை எங்களுக்கு அனுப்பி, பதிலுக்கு சரியான புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். நன்றி.

  –பத்ரி (கிழக்கு பதிப்பகம்)

  Like

 3. அட… உடனே கவணித்து பதில் சொல்லியிருக்கிறார் பத்ரி. நல்ல விஷயம் தான்.
  ஆணால், இந்த தவறை புத்தகம் வெளியாகும் முன்னரே கவணித்திருந்தால் நன்றாக
  இருந்திருக்கும்.

  எச்சரிக்கை ..வாசகர்கள் ..விழிப்புடன்தான் இருக்கிறார்கள்.

  அன்பன்
  பலராமன்-கடலூர்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: