எழுத்து இதழில் செப்டம்பர் 1959-இல் வாடிவாசல் நாவலுக்கு வெளிவந்த விளம்பரம். சொல்புதிது குழுமத்தில் கிடைத்தது என்று நினைக்கிறேன், சரியாக ஞாபகம் இல்லை.
- ஜல்லிக்கட்டு இல்லை ஜெல்லிக்கட்டு.
- ஆனால் புஜ வலு இல்லை புய வலு.
- தூய தமிழில் எழுதப்பட்டிருக்கிறது – ஆனால் இரண்டாவது வரியில் “அதுக்கு” என்று இருக்கிறது, “அதற்கு” என்று இல்லை.
- விலை ஒரு ரூபாய்!
அதே வார்த்தைகள் பிழை திருத்தப்பட்டு (“அதுக்குவேண்டும்” என்பது “அதுக்கு வேண்டும்” என்று மாறி இருக்கிறது) காலச்சுவடு பதிப்பகத்தின் மீள்பதிப்பின் பின் அட்டையிலும் இருக்கிறது. படம் மட்டும் மாறி இருக்கிறது.
இன்று விலை ஐம்பது ரூபாய். அப்படி என்றால் ஐம்பது வருஷங்களுக்கு முன் இரண்டு ரூபாய்க்கு இருந்த வாங்கும் திறன் இப்போது நூறு ரூபாய்க்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா?
தொடர்புடைய சுட்டி:
வாடிவாசல் புத்தகத்தைப் பற்றி
அமரர் சி.சு.செல்லப்பா பற்றியும், ‘எழுத்து’ இதழை தமிழ்ச் சமூகத்தில் அறிமுகப்படுத்த அவர் பட்ட பாடு பற்றியும். வறுமையிலும் செல்லப்பா பிறர் கை எதிர்பார்க்காவிருந்த சாற்றாண்மை பற்றியும், ‘யதார்த்தா’ கி. பென்னேஸ்வரன், சி.சு.செ. பற்றி எடுத்த ஆவணப்படத்தைத் தொடர்ந்து நடந்த உருக்கமான நிகழ்வு பற்றியும் என் தளத்தில் ‘எழுத்தாளர்’ பகுதியில் காணலாம்.
LikeLike