Skip to content

கொத்தமங்கலம் சுப்பு

by மேல் ஜூலை 29, 2011

இது கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டாம். (நவம்பர் 1910-இல் பிறந்திருக்கிறார்.) 64 வயதில், 1974-இல் மறைந்திருக்கிறார்.

சுப்பு ஜெமினி படங்களில் பல பணிகளை வகித்திருக்கிறார் – நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார், கதை-வசனம்-பாடல்கள் எழுதி இருக்கிறார். வில்லுப்பாட்டை உயிர்ப்பித்தவர் அவர்தான் என்று கேள்வி. பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. ஆனால் சிலிகான் ஷெல்ஃபில் அவர் எழுதிய புனைவுகளைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும்.

தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே ஒரு நாவலால்தான் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொஞ்சமாவது நினைவு வைத்துக்கொள்ளப்படுவார் என்று நான் கருதுகிறேன். அதுவும் என் தலைமுறையிலேயே நாவலை விட சினிமாதான் நினைவிருக்கிறது.

தி. மோகனாம்பாள் அப்படி ஒன்றும் பிரமாதமான நாவல் இல்லை. வளவளதான். ஆனால் நாவல் தொடர்கதையாக வந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிக்கல் ஷண்முகசுந்தரம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மூலமாக வைத்து உருவாக்கப்பட்டதாம். இன்றைக்கு ராஜரத்தினம் பிள்ளையே நமது பிரக்ஞையில் இல்லைதான், ஆனால் அன்று அந்த விஷயம் கதையின் கவர்ச்சியை அதிகரிக்கத்தான் செய்திருக்கும்.

தி. மோகனாம்பாள் காட்டும் உலகம் – தாசி என்ற ஒரு பாரம்பரியம், கலைகளை ஆதரித்த சந்தடி சாக்கில் தாசிகளோடு ஜாலியாக இருக்கும் பெரும் பண்ணையார்கள், கர்னாடக இசையை ரசித்த சாதாரண மக்கள், நாதசுரம், பரதம் இல்லை இல்லை சதிர், திருவிழாக்கள், தஞ்சாவூர் பின்புலம் எல்லாம் கொஞ்சம் அன்னியமாகத்தான் தெரிகிறது. ஆனால் படித்தால் அதற்காகத்தான் படிக்க வேண்டும்.

இன்று தி. மோகனாம்பாளைப் படிப்பவர்கள் நாஸ்டால்ஜியா, சினிமாவால் வந்த curiosity, அந்தக் கால mores பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எந்த மாதிரி நாவல்கள் வெற்றி பெற்றன என்று ஆராய்ச்சி மாதிரி காரணங்களுக்காகத்தான் படிக்க வேண்டும்.

தி. மோகனாம்பாள் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

தி. மோகனாம்பாளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சமூக romance-களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். எனக்கு இதை அந்த அளவில் வைப்பது கஷ்டம்.

சுப்பு எழுதிய மிஸ் ராதா என்ற ஒரு நாவல், மஞ்சிவிரட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் படித்திருக்கிறேன். எதுவும் சுகப்படவில்லை. மஞ்சிவிரட்டு சிறுகதைத் தொகுப்பை வ.ரா. ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார். வ.ரா.வின் ரசனை பற்றி சந்தேகமாக இருக்கிறது.🙂

ராவ்பகதூர் சிங்காரம் என்ற நாவலும் வெற்றி பெற்றது என்று கேள்வி. அது சிவாஜி கணேசன் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்று சினிமாவாகவும் வந்ததாம்.

நண்பர் விஜயன் தி. மோகனாம்பாள் பின்புலத்தை பந்தநல்லூர் பாமா என்ற புனைவிலும் வைத்து எழுதி இருக்கிறார் என்று தகவல் தருகிறார்.

என் கண்ணில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொத்தமங்கலம் சுப்பு ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம். காலாவாதியாகிவிட்ட எழுத்து என்றுதான் கணிக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி:
தில்லானா மோகனாம்பாள் திரைப்பட விமர்சனம்
சுப்புவின் ஒரு கட்டுரை
கொத்தமங்கலம் சுப்பு தளம்
கொத்தமங்கலம் சுப்புவின் திரைப்படப் பங்களிப்பு பற்றி கிருஷ்ணன் வெங்கடாசலம் (தோழி அருணாவின் அப்பா)
தென்றல் மாத இதழில் சுப்பு பற்றி (Registration Required)

பின்குறிப்பு: இன்டர்நெட் பிரச்சினை; அடுத்த பதிவு எப்போது வரும் என்று சொல்வதற்கில்லை. பக்ஸ் எழுதினால் உண்டு.

13 பின்னூட்டங்கள்
  1. கொத்தமங்கலம் சுப்பு பற்றி கிருஷ்ணன் வெங்கடாசலம்…

    http://koodu.thamizhstudio.com/thodargal_8_9.php

  2. சுப்பு வெறும் எழுத்தாளர் மட்டுமில்லை. சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தா, கவிஞர். நாட்டுப்புறக் கவிதைகள் எழுதுவதில் மிகத் தேர்ந்தவர். ஜெமினியில் நம்பர் 2 ஆக இருந்தவர்.அவரது மகன் கொத்தமங்கலம் விஸ்வநாதனும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகள் செய்து வருகிறார்.

    கீழ்கண்ட தளங்களில் மேலதிகத் தகவல்கள் உள்ளன.

    http://www.kothamangalamsubbu.com/

    http://tamilonline.com/thendral/Auth.aspx?id=118&cid=14&aid=6652&m=m&template=n

  3. தில்லானா மோகனாம்பாளுக்காக வாரவாரம் விகடன் எப்பொழுது வரும் என்று காத்துக்கிடந்தது நினைவில் நிற்கிறது… தி.மோ. வெற்றிக்கு முக்கிய காரணம், கொத்தமங்கலம் சுப்புவின் அந்தப் பாத்திரப்படைப்புத் திறமை!

    அந்த நினைவுகளை மீட்டுத் தந்த சுட்டிகளுக்கு நன்றி. பேராசிரியர் பசுபதி பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.

  4. அருணா permalink

    ஆர்.வி

    பாலஹனுமான் குறிப்பிடும் கிருஷ்ணன் வெங்கடாசலம் என் அப்பா. அவர் அங்கங்க எழுதுகிறேன் என்று சொன்னார். நான் இப்ப தான் படிக்கிறேன்.

  5. அருணாவின் அப்பா கிருஷ்ணன் வெங்கடாசலம் தன்னைப் பற்றிக் கூறுகிறார்….
    (http://koodu.thamizhstudio.com/thodargal_8_index.php)

    என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

    2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

    ‘அமுதசுரபி’ எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ‘ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சில கட்டுரைகள் ‘உயிரோசையில்’ வெளிவந்தது.

  6. எனது தளத்தில் எழுத்தாளர் பகுதியில் கிருஷ்ணான் நம்பி பற்றி எழுத வேண்டும் என்று தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். அது பற்றி அந்த சமயத்தில் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே” கவிதையில் கூடக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது திரு. கிருஷ்ணன் வெங்கடாசலம் பற்றி அவர் தளம் பற்றி அருணா பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்திருந்திருக்கிறது. பி.எஸ். ராமையா பற்றி என் தளத்தில் எழுத்தாளர் பகுதியில் எழுதிய பொழுது அமெரிக்காவிலிருந்து அதைத் தன் மகனுடன் சேர்ந்து படித்த பி.எஸ்.ரா.வின் மகன் திரு.ராமையா சுப்ரமணியன் மனம் நெகிழ்ந்து எழுதியிருந்தார். அதே மாதிரி ர.சு.நல்லபெருமாளின் மகள் திருமதி அலமேர்மங்கையும் அவர் தந்தையைப் பற்றி எழுத வேண்டும் என்று நான் நினைத்த எண்ணத்தை மீ.ப.சோமுவைப் பற்றி எழுதிய பதிவில்குறிப்பிட பொழுது தன் தந்தையைப் பற்றிய தகவல்களைத் தரத் தொடர்பு கொண்டிருக்கிறார். இணையத்தில் எழுதுவதின் அருமை பெருமைப்பட வைக்கிறது. ‘இந்த எழுத்தாளர் பகுதியைப் பற்றி அடிக்கடி நினைவு கொண்டு குறிப்பிடும் ஆர்வியின் தளத்தில் இந்த விவரங்களைக் குறிப்பிடுவதும் பொருத்தமாகத் தான் தெரிகிறது.

  7. அருணா,

    சிறந்த இலக்கியப் பின்னணி கொண்ட நீங்கள் ஏன் பெரிய அளவில் எழுதக்கூடாது?. பெண் எழுத்தாளர்கள் அருகி வரும் இக்கால கட்டத்தில் நீங்கள் அதைச்சற்று நிலைநிறுத்தலாம் அல்லவா?.

  8. knvijayan permalink

    தி.மோ பாணியில் இன்னுமொரு நாவல் எழுதியுள்ளார்.பந்தநல்லூர் பாமா என்ற பெயரில்.அதவும் so -so தான்.வெள்ளைக்காரன் காலத்து தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தமிழன் எப்படி minor வாழ்க்கை நடத்தினான் என்பதற்கு சுப்புவின் எழுத்துக்கள்தான் gazattier .

  9. தமிழ் நாவல்/சிறுகதை/புத்தகப் பிரியர்களுக்காக இந்த மின்னஞ்சல் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    http://groups.google.com/group/tamilvasagan

  10. ரமணன், ஸ்ரீனிவாஸ், விஜயன், நீங்கள் கொடுத்த தகவல்களையும் சேர்த்துவிட்டேன்.

    ஜீவி, அருணா, உங்கள் கருத்துப் பரிமாற்றங்களை ரசித்தேன்…

    ரமணன், உங்கள் குழுமத்தில் விரைவில் சேர்கிறேன்…

  11. ஆர்வி. மிக்க நன்றி. ஆனால் அது என் குழுமம் அல்ல. நானும் அதில் ஒரு வாசகனே! பட், சமீப காலமாக அது சரியாக இயங்குகிறதா எனத் தெரியவில்லை.

  12. அனானி permalink

    கொ.சுப்பு எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டவைதானே? அப்ப பிடிஎஃப், இ-பப் பண்ணலாமே? யாரும் பண்ணவில்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: