பார்த்தசாரதி ஜெயபாலன் எழுதிய “ழார் பத்தாயின் குதிரை”

ஒரு விதத்தில் பார்த்தால் இது கிசுகிசு டைப் பதிவு. பூடகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்கள் யார் என்ற ஊகங்கள்தான்.

விமலாதித்த மாமல்லன் அருமையாக எழுதக் கூடியவர். ஆனால் நான் அவரது தளத்தைப் பார்ப்பது கொஞ்சம் அபூர்வம்தான். நிறைய கவிதைகள் வரும், எனக்கு கவிதை படிக்கும் அளவுக்கெல்லாம் அறிவு கிடையாது. இல்லாவிட்டால் ஆக்ரோஷமாக யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டிருப்பார், குறிப்பாக ஜெயமோகனைப் பற்றி நொட்டை சொல்லி நிறைய பதிவுகள் வரும். மனிதர் திறமையை, நேரத்தை வீணடிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றும். சரி, அவர் நேரம், அவர் இஷ்டம்.

அவருடைய தளத்தில் சமீபத்தில் பார்த்தசாரதி ஜெயபாலன் என்பவர் எழுதிய ழார் பத்தாயின் குதிரை என்ற கதையைப் பதித்திருந்தார். கதை எனக்கு டைம் பாஸ் அளவில்தான் இருந்தது. ஆனால் நிறைய எழுத்தாளர்களைப் பற்றி references இருந்தது. அந்தக் காலத்தில் குமுதத்தில் கிசுகிசு படித்து யார் இது என்று யோசித்தது போல இங்கேயும்.

சில excerpt-களையும், அவர்கள் யார் என்ற என் ஊகத்தையும் தந்திருக்கிறேன். ஒருவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ழார் பத்தாய் (Georges Bataille) யார் என்று கூடத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இந்தப் பேரை எப்படி எழுதுவது? பற்றி தகவல் தந்த ராஜ் சந்திராவுக்கு நன்றி!

முதலில் ஒருவர் ஏறினார். கையில் சாட்டை ஒன்று தரப்பட்டது.
….
மணலும், காற்றும் மட்டுமே உள்ள ஒரு கட்டற்ற பெருவெளியில் பாய்ந்தோடிய அக்குதிரைகள் ஒரு புளிய மரத்தைக் கண்டதும் நின்று விட்டன. அதற்கு மேல் நகரவில்லை. அவ்வளவுதான். அவர் இறக்கி விடப்பட்டார்.

இது சுந்தர ராமசாமி.

இரண்டாமவர். குஸ்தி வாத்தியாரோ எனும்படியான தோற்றம் கொண்டிருந்தார்.
….
இப்போது அக்குதிரைகள் சென்ற வழியெல்லாம் இலைகள் நிரம்பியிருந்தன. சீரான வேகத்தில் சென்ற அக்குதிரைகள் சிறிது ஒய்வெடுத்து விட்டு மறுபடியும் ஏவுகணைகள் போன்று சீறின. ஒரு இடத்தில் முட்டையும், பழைய பேப்பரும் விற்பனை செய்யும் கடையைக் கண்டதும் அவை நின்று விட்டன. அவர் இறக்கி விடப்பட்டார்.

இது விமலாதித்த மாமல்லனேதான்.

மூன்றாமவர். மோட்சம் அளிப்பதற்காகவே வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல் காணப்பட்டார்.

முதல் இருவரும் தேரை ஓட்டும் போது வாயைத் திறக்கவில்லை. ஆனால் இவர் ஓயாது சொற்பொழிவாற்றிய வண்ணம் வந்தார். அவர் செய்த உபதேசத்திற்கு குதிரைகள் தான் தூங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் தூங்கியபடியே உபன்யாசம் செய்து வந்தார். வாய் எதையோ பிதற்றியபடியே இருந்தது.

ஒரு இடத்தில் குதிரைகள் வளைவைக் கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தவர் புரண்டு படுத்தார். குதிரைகள் நின்று விட்டன.

இது ஜெயமோகன்.

நான்காமவர். இவர் முகம் மிகவும் சாந்தமாகக் காணப்பட்டது. அத்தனை குதிரைகளையும் அன்போடு தடவிக் கொடுத்தார்.

குதிரைகள் நெகிழ்ந்தன. தேரில் ஏறியவர் குதிரைகளை சாட்டையால் விளாசவில்லை.வலது காலை எடுத்து இடது கால் மேல் போட்டுக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிரபலமாகப் போகும் பப்புவா நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் நூலைப் படித்தபடி வந்தார். குதிரைகள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தன. ஒரு இடம் வந்தது. அந்த இடத்தில் வெயில் தவிர வேறு எதுவும் இல்லை. பாறைகளில் வெயில். கள்ளிச் செடிகளில் வெயில். வெயில் அந்தப் பிரதேசக் கிண்ணத்தில் வழிந்து வழிந்து நிரம்பிக் கொண்டிருந்தது.

குதிரைகள் நிற்கவில்லை. இவராகவே குதித்து விட்டார்.

இது எஸ். ராமகிருஷ்ணன்.

ஐந்தாமவர். இவரைக் கண்டதும் அத்தனை குதிரைகளின் முகத்திலும் இனம் புரியாத பீதி (இந்த “இனம் புரியாத பீதி” எனும் வார்த்தைப் பிரவாகம் ஆரம்ப நிலை எழுத்தாளர்களால் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியது என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.ஆகவே “இனம் புரியாத பீதி”).

சாட்டையைக் கம்பீரமாக வாங்கிக் கொண்டார். சுற்றி ஒரு முறை பார்த்தார். ஆசனத்தில் அமர்ந்து ‘ஹொய்” என்ற பலத்த சத்தத்துடன் சாட்டையை வீசினார். அவ்வளவுதான். குதிரைகள் தேரிலிருந்து பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாகப் பறந்தன. காற்றினும் கடிய வேகத்தில் அவை மறைந்தன. ஒரே ஒரு குதிரையைத் தவிர. அது ழார் பத்தாயின் குதிரை. தேருடன் பலமாகப் பிணைத்து விட்டார்களோ என்னவோ. பரிதாபமாக அசைய முடியாமல் அப்படியே நின்றது.

ஐந்தாமவர் விடுவதாக இல்லை. ‘ஹொய்’ என்று மறுபடியும் சாட்டையை வீசினார்.

முன் இரண்டு கால்களையும் சட்டென்று மடித்து தரையில் சாய்ந்து விட்டது.

இப்போது வரை அவர் ‘ஹொய்’ என்று சாட்டையை வீசிக் கொண்டே இருக்கிறார்.

இது யார் என்று தெரியவில்லையே? ராஜ் சந்திரா சொல்வதை வைத்துப் பார்த்தால் இது சாரு நிவேதிதா ஆக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

பார்த்தசாரதி ஜெயபாலனுக்கு வாழ்த்துக்கள்!

பின்குறிப்பு: வி. மாமல்லனின் இலை போன்ற சிறுகதைகளை நான் விரும்பிப் படிப்பவன். உயிர்மை வரை போய் அவரது சிறுகதைத் தொகுப்பை வாங்க இன்னும் நேரம் கிடைக்காதது என் துரதிருஷ்டம்.

5 thoughts on “பார்த்தசாரதி ஜெயபாலன் எழுதிய “ழார் பத்தாயின் குதிரை”

  1. >>ழார் பத்தாய் யார் என்று கூடத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இந்தப் பேரை எப்படி எழுதுவது?

    http://en.wikipedia.org/wiki/Georges_Bataille
    இவர் பெயரை அவ்வப்போது சாருவின் பதிவுகளில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். எனக்கு நம் சித்தர்களின் தத்துவங்களையே படிக்கவில்லை. அப்புறம்தான் பத்தாய்.

    Like

  2. அட என்ன சாரு.. உங்களால் இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை? இல்லை, தெரியாத மாதிரி நடிக்கிறீர்களா? அவர் தான், அவரே தான்… அவரே தான் ஐயா…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.