எம்.ஏ.சுசீலாவின் “தேவந்தி” – படிக்க விரும்பும் புத்தகம்

திருமதி எம்.ஏ. சுசீலா ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை. தேர்ந்த வாசகி. அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தேவந்தி என்று தொகுப்பாக வந்திருக்கிறது.

ஒரு சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது. சீதையின் அக்னிபிரவேசத்தை கருவாகக் கொண்டு ஒரு மாறுபட்ட கோணத்தில் இந்தக் புதிய பிரவேசங்கள் என்ற கதையை எழுதி இருக்கிறார். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் கதையால் inspire ஆனாராம்.

நடை கொஞ்சம் பழசு. “ஆதவன் தன் கிரணங்களால் பூமியை தழுவிக் கொண்டான்” ஸ்டைல். இது சாபவிமோசனம் இல்லைதான். என் anthology-யில் வராதுதான். ஆனால் கோணம் நன்றாக இருக்கிறது. படித்துப் பாருங்களேன்!

தொடர்புடைய தளம்: எம்.ஏ. சுசீலாவின் தளம்