இரா. நடராசனின் “ஆயிஷா”

விகடனில் ஆயிஷா என்ற குறுநாவலைப் பற்றிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. நான் பெரிதாக ரசிக்கவில்லை, எனக்கு இது இலக்கியம் இல்லை. டிபிகல் “முற்போக்கு” புனைவுதான்.

ஆனால் என் அம்மா அப்பா பள்ளி ஆசிரியர்கள். நான் இந்த மாதிரிப் பள்ளிகளில் படித்தவன்தான். என் தலைமுறையில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. வகுப்புக்கு வராமல் ஓபி அடிக்கும் வாத்தியார்களையும் பார்த்திருக்கிறேன், உண்மையான அக்கறை உள்ளவர்களையும் பார்த்திருக்கிறேன். இன்று என் கல்லூரி batch’s 25-ஆவது ஆண்டு reunion வேறு.

என்னுடைய பள்ளி ஆசிரியர்களான வரதாச்சாரி, மரியசூசை (மூன்றாம் வகுப்பு, கணிதம், சரித்திரம், அரசு தொடக்கப் பள்ளி, லாடாகரனை எண்டத்தூர்), வேல்முருகன், அந்தோணிசாமி (ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகள், ஆங்கிலம், உடற்பயிற்சி, அரசு மேல்நிலைப் பள்ளி, மானாம்பதி), மதன்மோகன், சூர்யா (ஒன்பது, பத்தாம் வகுப்புகள், கணிதம், அறிவியல், கார்லி மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்), நடராஜன், ஜெயசீலன் (11-12-ஆம் வகுப்புகள், இயற்பியல், உயிரியல், செயின்ட் ஜோசஃப் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு) ஆகியோரை இந்தப் புத்தகம் நினைவுபடுத்தியது. அதற்காக இதை எழுதிய திரு. இரா. நடராசனுக்கு நன்றி!

திரு. இரா. நடராசனின் தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதைப் படிக்கும்போது உங்கள் ஆசிரியர்களின் நினைவு வந்தால் இந்தப் படைப்பு வெற்றிதான்.

13 thoughts on “இரா. நடராசனின் “ஆயிஷா”

 1. //நான் பெரிதாக ரசிக்கவில்லை, எனக்கு இது இலக்கியம் இல்லை. டிபிகல் “முற்போக்கு” புனைவுதான்.//

  நானும் பல கிராமத்துப் பள்ளிகளில் படித்தவன் தான். பழைய, இருக்கும் ஒரு சில ஆசிரியர்களுடன் போன் தொடர்பில் இருப்பவன் தான். ஏன், எனது தந்தையும் ஒரு ஆசிரியர் தான். குடும்பமே ஆசிரியர் குடும்பம் என்று சொல்லலாம். ஆனால் இந்தக் கதை மிக மிக மிகச் செயற்கையாக இருக்கிறது. ஆர்.வி எப்படி இதை நீங்கள் முற்போக்கில் சேர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. சு.,சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமியின் முற்போக்கு எழுத்துகளோடு இதனை ஒப்ப முடியவில்லை. இது வலிந்து எழுதப்பட்ட மிகைக் கற்பனை என்ற வகையிலேயே நான் இதனை மதிப்பிடுகிறேன்.சிறப்பாகச் சொல்வதற்கு இதில் ஒன்றுமில்லை. மிகை உணர்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு மிகு புனைவு. அவ்வளவுதான்.

  Like

  1. தாங்கள் ஆசிரியர் குடும்த்தை சேர்ந்ததால் மிகை கற்பனையாக தெரியும்……எது கற்பனை?ஆசிரியர்கள் புத்தகத்தை அப்படியே ஒப்பித்துவிட்டு போவதா???நான் இன்ஜினியரிங் படிக்கிறேன்……….இதில் குறிப்பட்ட படிதான் என் கல்வி வாழ்க்கையில் ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்……..ஒரு சிலர் விதிவிலக்காக…….விதிவிலக்குகள் உதாரணங்கள் ஆக முடியாது.

   Like

   1. //…எது கற்பனை?ஆசிரியர்கள் புத்தகத்தை அப்படியே ஒப்பித்துவிட்டு போவதா???//

    ஐயா.. எனது கருத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் அதைக் கற்பனை என்று சொல்லவில்லை. அதுதான் உண்மை. நான் கற்பனை என்று சொன்னது ”ஆயிஷா” என்ற பாத்திரப்படைப்பையும், அவள் ஆசிரியையையும் தான். அப்படியெல்லாம் ஆசிரியர்கள் இருந்திருந்தால் இன்று நாடு எங்கோ போயிருக்கும்.

    Like

 2. சில வருடங்களுக்கு முன்பு படித்தது..எப்படி இதை ஒரு செயற்கையான ஆக்கம் என்று கூறுகிறீர்? விஞ்ஞான தாகம் கொண்ட ஒரு மாணவி ஒரு சராசரியான ஆசிரியையை சிறந்த ஆசிரியையாக மாற்றும் இக்கதை எவ்விதத்திலும் செயற்கையாக தோன்றவில்லை.. குறிப்பாக இறுதியில் ஆயிஷா இறக்கும் பகுதி மிகுந்த உணர்ச்சிகரமானது.

  ஒரு வேளை இதை விட சிறந்த ஆக்கங்கள் உள்ளனவா?

  Like

 3. ஆயிஷாவின் பாத்திரப் படைப்புதான் செயற்கையானது. இதில் சந்தேகமென்ன? இதற்கு யாரேனும் ஆசிரியர்கள் பதில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  Like

 4. ஷங்கரன், ரமணன் சொல்வதைப் போலத்தான் நானும் நினைக்கிறேன்.
  ரமணன், மிகை உணர்ச்சி நிரம்பிய படைப்பு என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம். மனதில் நினைத்தது வார்த்தையில் சரியாக வரவில்லை.

  Like

  1. சங்கரன், ஆயிஷா புத்தகத்தைப் பற்றி நான், ரமணன், நீங்கள் மூவரும் ஒத்த கருத்து உள்ளவர்களாக இருப்பது மகிழ்ச்சி!

   Like

 5. நல்லது ஆர்வி.

  ஆயிஷா பற்றி ஜெயமோகன்/எஸ்.ரா எல்லாம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லையே. ;-(

  Like

 6. ஆயிஷா என்ற கதையை சிறுவர்களுக்கான கதை என்று நான் சொல்ல மாட்டேன். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான கதை. ஏனென்றால் அவர்கள் தான் சிறுவர், சிறுமிகளை புரிந்து கொள்வதேயில்லை. நான் பாரதி புத்தகாலயத்திலிருந்து பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அதில் எனக்கு சிறுவர்களுக்கான புத்தகங்கள் தான் மிகவும் பிடிக்கும். எஸ்.ரா’வின் கிறுகிறுவானம், கதைக்கம்பளம் மற்றும் பல புத்தகங்கள் முக்கியமானவை. நம் வீட்டுச்சிறுவர்களுக்கு கதைகளை அறிமுகம் செய்வது நம் கடமை. நன்றி.

  Like

  1. சித்திரவீதிக்காரன், // ஆயிஷா என்ற கதையை சிறுவர்களுக்கான கதை என்று நான் சொல்ல மாட்டேன். // நீங்கள் சொல்வது சரியே.

   Like

 7. ஆசிரியர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்…….படிக்கும்போது தோன்றும் குற்ற உணர்ச்சியிலாவது தங்கள் கடமையை சரியாக செய்யட்டும்!!!!

  Like

  1. வீணாப் போனவன், நானும் ரமணனும் இங்கே முக்கியமாகப் பேசுவது படைப்பின் இலக்கியத் தரம் பற்றி. அது காட்டும் சமூக நிலையை அல்ல.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.