எனக்கு டைம்பாஸ் படிப்பு என்றால் அனேகமாக pulp fiction , த்ரில்லர்கள்தான். சிறு வயதில் இரும்புக்கை மாயாவியிலிருந்து ஆரம்பித்த பழக்கம் இன்னும் விடவில்லை. ஏறக்குறைய மூளையை ஆஃப் செய்துவிட்டு டிவி பார்ப்பது போல. நாஸ்டால்ஜியா இன்னும் நிறைய இருக்கிறது.
தமிழில் pulp fiction பாரம்பரியம் வடுவூரார் காலத்திலிருந்து இருக்கிறது. ஆனால் முக்கால்வாசி நேரம் இவற்றைப் படித்தது ஏமாற்றம்தான் அடைந்திருக்கிறேன். தமிழின் சிறந்த த்ரில்லர் எழுத்தாளர் என்று சுஜாதாவைத்தான் – குறிப்பாக கணேஷ்-வசந்த் கதைகளைத்தான் – கருதுகிறேன். ஆனால் அவர் கதைகளையும் இன்று படிக்கும்போது நிறைய சொதப்பி இருப்பது தெரிகிறது. நல்ல ஆக்ஷன் சீன் உள்ள சிறுகதை என்றால் ஜெயமோகனின் “அவதாரம்” நினைவு வருகிறது. அருமையான ஒரு சண்டைக் காட்சியை சித்தரித்திருப்பார்.
இப்போது இந்த மார்க்கெட்டின் ராஜா யார் என்று தெரியவில்லை. ராஜேஷ்குமாரா? ஆனால் சுபா என்ற பேரில் எழுதும் இந்த இரட்டையர்களுக்கு பெரிய மார்க்கெட் இருந்தது. அனேகமாக இப்போதும் இருக்கலாம். இவ்வளவு பாப்புலராக இருக்கிறார்களே, இவர்கள் எழுத்தை என்றாவது சாம்பிள் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் சில புத்தகங்கள் கிடைத்தன. இவர்கள் என்னை ஏமாற்றவில்லை, நான் படித்த டஜன் கதைகளும் வேஸ்ட். 🙂 நான் படித்த வரையில் இவர்கள் நல்ல pulp fiction-ஐ இது வரை எழுதவில்லை. ஒரு குழந்தைத்தனமான மர்மம், “கிளுகிளுப்புக்கு” வைஜயந்தி என்ற ஒரு பெண் என்று ஒரு ஃபார்முலாவை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறகு எதற்கு இந்தப் பதிவு என்கிறீர்களா? மூன்று காரணங்கள். ஒன்று, தமிழில் நீங்கள் படித்த நல்ல த்ரில்லர்கள் ஏதாவது உண்டா என்று தெரிந்துகொள்ள. இரண்டாவது, சிலிகான் ஷெல்ஃப் ஆரம்பித்த பிறகு படித்ததை எல்லாம் அனேகமாக பதிவு செய்யும் பழக்கம் வந்துவிட்டது. மூன்றாவது, மொக்கை எழுத்தைப் பற்றி எல்லாம் பதிவு போடும் வத்தலகுண்டு பித்தன் என்ற பேரை எப்படி தக்க வைத்துக் கொள்வது? 🙂
வாசகர்களை இவர்கள் அநியாயத்துக்கு குறைத்து மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக அன்புள்ள அச்சமே என்ற கதையில் கணவன் பணக்கார மனைவியை ஆவி கீவி என்று பயமுறுத்தி பைத்தியம் பிடிக்க வைக்கிறான். அடுத்த நாளே மாமனாரின் ஆவி வருகிறது. அதைப் பார்த்து இவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது. இந்த மாமனாரின் ஆவி ஒரு நாலு நாள் முன்னால் வந்திருந்தால் தன் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாமே!
சில கதைகளில் potential தெரிந்தது. உதாரணமாக நிலா வரும் நேரம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. திருமணமான பெண்களின் செக்ஸ் வேட்கைகளைப் பற்றி நிறைய எழுதி இருந்தார். கடைசியில் அதை க்ரைம் நாவலாக முடிக்க வேண்டிய கட்டாயம், கதை சொதப்புகிறது.
படித்ததில் பெஸ்ட் என்றால் தீர்க்க வேண்டிய கணக்குதான். ஒரு வரைபடத்தை (map) திருட வரும் இரண்டு பேரை ஏறக்குறைய வேட்டை ஆடுகிறார். ஆக்ஷன் சீன்கள்தான் பெரும்பாலும்.
இவர்களை முழுமையாக நிராகரிக்கிறேன்.ஆனால் இவர்களின் ஃபார்முலா வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
படித்த கதைகளின் லிஸ்ட் கீழே.
- குளிர குளிர குற்றம்: தங்கையை கற்பழித்த நாலு பேரை பழி வாங்கும் அண்ணன். வேஸ்ட்.
- அன்புடன் உன் அடிமை: வேஸ்ட். ஒரு பெண்ணை கெடுத்த இரண்டு பேரை ஹீரோ கொல்கிறான். அதை பாராட்டும் ஒரு இன்ஸ்பெக்டர் பிறகு அவன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது காப்பாற்றுகிறார்.
- அடிபட்ட புலி: வேஸ்ட். கொஞ்சம் கொஞ்சம் Bound என்ற சினிமாவை நினைவுபடுத்துகிறது. மாஃபியா ஆள் வைப்பாட்டி, ஜெயிலிலிருந்து திரும்பி வரும் பக்கத்து வீட்டு திருடனால் கவரப்படுகிறாள். அவர்கள் திருடப் போடும் திட்டம்…
- திருப்பித் தாக்கு: மகா வேஸ்ட். காதலன், காதலி, பர்மிஷன் தர மறுக்கும் அப்பா. காதலி தற்கொலை செய்து கொள்கிறாள், காதலனை கிட்டத்தட்ட பைத்தியம் ஆக்குகிறார்கள்.
- தீர்ப்பு நாள்: (நரேந்திரன்) ஒரு திரைக்கதை காணாமல் போய்விடுகிறது. ஒரு சினிமா நடிகனின் மனைவி கடத்தப்படுகிறாள். நரேந்திரன் திரைக்கதை மனைவியின் கடந்த கால வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது என்பதை கண்டுபிடிக்கிறான்.
- என்னைத் தேடு: (நரேந்திரன்) வெட்டி. பறக்கும் தட்டு, வேற்று கிரக மனிதர்கள் என்று புரளி கிளப்பி ஒரு வீட்டில் இருக்கும் பல கோடி மதிப்புள்ள சிலையை திருடப் பார்க்கிறார்கள்.
- உயிர்மூச்சு: விஞ்ஞானி, செயற்கை முத்து செய்யும் ஃபார்முலா, நரேந்திரன்-வைஜயந்தி என்று போகும் கதை
- வசந்தம் வரும்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் தேறவில்லை.
- பனிமலையில்: அமைச்சரின் மகள் கடத்தப்படுகிறாள். அதை கண்டுபிடிக்கும் போலீஸ்.
- கொஞ்சுகிற கைதான் கொல்லும்: (நரேந்திரன்) ஒரு கால் கர்ளை கொலை செய்கிறார்கள். அவள் அப்போது ஒருவனுக்கு மனைவியாக இருக்கிறாள். கணவன் மீது சந்தேகம் விழுகிறது. கணவனின் உயிர் நண்பனின் பிணம் வேறு கிடைக்கிறது. பிறகு?
- ஈர உதடுகள்: கால் கர்ளை உண்மை தெரியாமலே காதலிக்கும் ஃபோட்டோகிராஃபர். நல்ல வாழ்க்கைக்கு திரும்ப நினைப்பவளை தடுக்கிறான் அவள் முதலாளி. முதலாளி கொலை, இவள் ஜெயில், இவன் காத்திருக்கிறான். வேஸ்ட்.
- பௌர்ணமிப் பாதை: கொள்ளை அடித்த பணத்தை மறைத்து வைத்திருக்கும் ரவுடிகளின் தலைவன், அதை கண்டுபிடிக்க முயலும் அவன் பெண், ஹீரோ.
தொடர்புடைய சுட்டிகள்:
பட்டுக்கோட்டை பிரபாகர்
இந்திரா சவுந்தரராஜன்
இவர்களின் சில கதைகள் தேவலாம் ரகம், அதாவது காமிச்ஸ்களுக்குக் கொஞ்சம் மேலே. ஆனால் Wolverine, Daredevil, Dark Knight காமிக்ஸ் (நான் திரைப்படங்களைச் சொல்லவில்லை) அளவுகூட characterization இருக்காது. ஒற்றைப் பரிமாணத்திலேயே எல்லாக் காரக்டர்களுக்கும் ஒரு மனிதக் குரங்கின் அளவே (நன்றி பி.ஏ. கிருஷ்ணன்) மூளை இருக்கும். எதிர்ப்பார்க்கப்பட்ட திருப்பம், ஏதாவது ஆங்கிலப் பல்ப் புத்தகத்திலிருந்து உருவப்பட்டத் திருப்பங்கள் மட்டுமே. ஆனால் வெகு சுவாரசியமாக எழுத்துக்களை அமைக்கக் கூடியவர்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் ஆரம்பித்து வைத்த பாணி. இவர்கள் பதிவில் நீங்கள் சுஜாதாவை சேர்ப்பதை ஜெமோ-வே ஒத்துக் கொள்ளமாட்டார் :).
மிகக் காமெடியான விஷயம் என்னவென்றால் ‘சுபா’-விற்கு சாகித்ய அகாதமி விருது கொடுக்கவேண்டும் என்று ஒரு வாசகக் கும்பல் அலைந்ததுதான். அந்தக் கடிதத்தை இவர்கள் பிரசுரித்து புல்லரித்திருந்தார்கள். இணையத்தில் (லிங்க் மறந்துவிட்டது) அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு நாளெல்லாம் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தேன்.
LikeLike
arumaiyaana nadaiyil solla vantha karuththai thelivaaka kuriyulleerkal… vaalththukkal
LikeLike
ராஜ், சுஜாதாவை இவர்கள் வரிசையில் சேர்க்கவில்லை. அவர் லெவல் வேறு. ஆனால் pulp fiction genre-இல் அவரும் எழுதி இருக்கிறார் என்றுதான் சொல்ல வந்தேன்.
சரவணன், பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி!
LikeLike
கௌசிகனின் (இந்த வாண்டு மாமா தான் எனது சிறு வயதுக் கற்பனை உலகை அழகாக்கியவர்) “சுழிக்காற்று” படித்திருக்கிறீர்களா? எழுபதுகளில் கல்கியில் தொடராக வந்த murder mystery. ஆஹா ஓஹோ ரகம் இல்லை என்றாலும் தமிழில் ‘whodunnit’ வகையை சரியாகப் புரிந்து எழுதிய ஒரே கதை (சுஜாதா எழுதியவை whodunnit வகை என்று நூறு சதம் சொல்ல முடியாது) என்று சொல்வேன். நான் எனக்கு 13 வயது இருக்கும் போது படித்தது. அப்போது கொலையாளியை என்னால் கடைசிப் பக்கம் வரை கண்டு பிடிக்க முடியவில்லை (வளர்ந்தவர்களுக்கு அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்). வாசிப்பவர்களை புத்திசாலிகள் என்று உணர்ந்து எழுதியது.
LikeLike
அட நீங்க சுஜாதாவின் எழுத்துக்கள் சில இடங்களில் சொதப்பி இருப்பதாக எழுதியிருக்கீங்களா? ஒரு கும்பல் வரும் பாருங்க, உங்களை ஒட்டுரதுக்கு…
நான் சமீப காலமாக உங்க பதிவுகளின் விமர்சனம் படித்து புத்தகம் வாங்கி படித்து வருகின்றேன்.என்னுடைய கருத்துகளும் பல நேரங்களில் உங்களுடன் ஒத்து போகிறது..நீங்கள் இதுவரை வெட்டுப்புலி படிக்கவில்லையா?
LikeLike
பிருந்தாபன், சுழிக்காற்று படித்ததில்லை. இப்போது கிடைக்கிறதா? வாண்டு மாமாதான் எனக்கு முதல் ஸ்டார் எழுத்தாளர்.
சுரேஷ் குமார், ஒத்த ரசனை உள்ளவரைப் பார்ப்பது மகிழ்ச்சி! வெட்டுப்புலி பற்றி எழுத வேண்டும்…
// அட நீங்க சுஜாதாவின் எழுத்துக்கள் சில இடங்களில் சொதப்பி இருப்பதாக எழுதியிருக்கீங்களா? ஒரு கும்பல் வரும் பாருங்க, உங்களை ஒட்டுரதுக்கு… // அவ்வளவு தூரம் யாரும் பொருட்படுத்துவதில்லை. 🙂
LikeLike
சுழிக்காற்று வானதி பதிப்பகத்தில் கிடைக்கும். பழைய பதிப்பு (நூல் முதல் பதிப்பே விற்கவில்லை. என்ன செய்வது. ராஜேஷ்குமார் மட்டும் தான் நன்றாக விற்கிறது :(). தி. நகர் பக்கம் போனால் வாங்கி விடுங்கள்.
LikeLike
சுழிக்காற்று பற்றிய தகவலுக்கு நன்றி, பிருந்தாபன்!
LikeLike
சுபாவின் கதைகளை ஓகோ என்று சொல்ல முடியாது. விவேக்கின் பாதிப்பில் உருவான ஹீரோ தான் “நரேந்திரன்”. ”செல்வா”வின் சாகசக் கதைகள் மகா அறுவையாக இருக்கும். ஆனால் இன்ஸ்பெக்டர் துரையரசன் (லைட் கம்பத்தில் பாதி உயரம் என வர்ணிப்பர் சுபாக்கள்) வரும் கதைகள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கும்.
சுபா அதிக கவனம் பெற்றது மாலைமதி மற்றும் சூப்பர் நாவலினால் தான். அதற்கு முன்பே கல்கியில் திரை விமர்சனம், பேட்டிக் கட்டுரைகள், சிறுகதை, தொடர் எழுதி பிரபலம். என்றாலும் அதிகம் கவனிக்கப்பட்டது தங்கள் நாவல்களின் தலைப்புகளினால் தான்.
காப்பாற்று.. காப்பாற்று…, தூண்டில் கயிறு, வேட்டை மான், வைஜெயந்தி எஸ்.ஓ.எஸ், என் மன்னனுகென ஒரு நிலா, மரண வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில், நீரில் மிதக்கும் நிலா, துப்பாக்கி நாட்கள், சிகப்பாய்ச் சில மேகங்கள்… என்று இந்தப் பட்டியல் வெகு நீளமானது.
திறமையுள்ளவர்கள்தான். ஆனால் தற்போது அதிகம் சினிமாவில் கவனம் செலுத்துவதால் எழுத்தில் சோபிக்க முடியவில்லை. இவர்களது நாவல்கள் ஆங்கில நாவல்களின் அப்பட்டமான காப்பி என்ற குற்றச்சாட்டு முன்பு எழுந்ததுண்டு. நரேந்திரன், ஜான் பாண்டியன், ராமதாஸ், ஜூனியர் (நாய்க்குட்டி) எல்லாமே காபிதான் என்று முன்பு ’டேபிரேக்’ நாவலில் ஒருவர் ஆதாரத்தோடு எழுதியிருந்தார். இந்த க்ரைம் வாசகர்களில் எனக்குத் தெரிந்து சரக்கு உள்ள எழுத்தாளர் பி.கே.பிரபாகர்தான். சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் பின்னால் தான்.
LikeLike
ரமணன், // எனக்குத் தெரிந்து சரக்கு உள்ள எழுத்தாளர் பி.கே.பிரபாகர்தான். சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் பின்னால் தான். // ஆமோதிக்கிறேன். பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றிய பதிவு இங்கே. https://siliconshelf.wordpress.com/2010/09/21/பட்டுக்கோட்டை-பிரபாகர்/
LikeLike
நண்பரே திருப்பித் தாக்கு நாவேலின் எழுத்தாளர் யாரென்று சொல்லுங்களேன் , நன்றி ராஜசேகர்
LikeLike