இரு நூலகங்கள்

சென்னைக்கு சென்றபோது புதிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் கன்னிமாரா நூலகத்தையும் போய்ப் பார்த்தேன்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆரம்பித்து ஒரு வருஷம் இருக்கலாம். இன்னும் யாரும் உறுப்பினர் ஆக முடியாது. எல்லா புத்தகங்களுக்கும் இருப்பிடம் – அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் மாதிரி – என்ற எண்ணத்துடன் துவங்கப்பட்டதாம். தமிழ்ப் புத்தகங்கள் கூட குறைவாகத்தான் இருக்கின்றன. எந்தப் புத்தகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. அற்ப விஷயம் கூடத் தெரியவில்லை – க.நா. சுப்ரமண்யத்தின் புத்தகங்கள் “K” எழுத்தின் கீழும் வைக்கப்பட்டிருக்கின்றன, “S ” எழுத்தின் கீழும் வைக்கப்பட்டிருக்கின்றன. புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது பேர் ஒன்று மேலிருந்து கீழாகப் படிக்கும்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கீழிருந்து மேலாக. இரண்டு முறையிலும் வைத்தால் கழுத்தை திருப்பி திருப்பி படிக்க வேண்டி இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ள என்ன ஸ்பெஷல் பயிற்சி வேண்டும்?

கன்னிமாராவிலோ எக்கச்சக்க புத்தகங்கள். ஆனால் எந்தப் புத்தகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. தேடிப் பிடிக்கும் புத்தகங்களோ மக்கிக் கொண்டிருக்கின்றன. புத்தகம் இருந்து என்ன பயன்? நுழையும்போதே ஃபினாயில் வாசனை வேறு ஊரைத் தூக்குகிறது.

நூலகம் என்பது எனக்குத் தெரிந்து இரண்டு வகையினருக்காக. ஒன்று பொது ஜனம், அவர்களுக்கு பாப்புலர் புத்தகங்கள் இருக்க வேண்டும், கிளாசிக் புத்தகங்கள் இருக்க வேண்டும், அவர்களுக்கு இரண்டு வகை புத்தகங்களும் சுலபமாக கிடைக்க வேண்டும், உறுப்பினராவது சுலபமாக இருக்க வேண்டும். இரண்டாம் வகை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள். அவர்களுக்கு அரிய புத்தகங்கள், references எல்லாம் சுலபமாகக் கிடைக்க வேண்டும். அண்ணா நூலகத்தில் கட்டடம் கட்டுவதில்தான் குறியாக இருந்திருக்கிறார்கள், பயனர்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இருந்த மாதிரி தெரியவில்லை. புத்தகங்கள் மேஜை நாற்காலி மாதிரி கட்டடத்தை நிரப்பும் ஒரு பொருள் என்ற viewpoint-தான் தெரிகிறது. கன்னிமாராவிலோ பயனர்களைப் பற்றி மட்டுமல்ல, புத்தகங்களைப் பற்றியும் அலட்சியம்தான் தெரிகிறது.

எனக்கு வயிறு எரிகிறது, என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

54 thoughts on “இரு நூலகங்கள்

  1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உலகத்தரம் வாய்ந்த நூலகமாக உருவாக்க என்று சொல்லிக்கொண்டு அன்றை பள்ளிக்கல்வி அமைச்சர், கன்னிமாரா நூலகத்தின் முன்னாள் நூலகர் ஆவுடையப்பன் என்று அன்று அதிகாரத்தில் இருந்த பலரும் எத்தனை முறை சிங்கங்கபூருக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்தார்கள் என்பதை அறிந்தீர்கள் என்றால் உங்கள் வேதனை இன்னமும் அதிகரிக்கும்.

    Like

    1. உலகம் பூரா சுற்றி வந்திருக்கலாம். ஊழலும் நடந்திருக்கலாம். ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நூலகம் ஏற்படுத்திக் கொடுத்திருகிறது என்பதனை மறுக்கவோ அல்லது மறைக்க முடியாது. ஒரு நாளைக்கு சராசரி ஆயிரம் பேருக்குக் குறையாமல் வருகின்றார்கள். தரை தளத்தில் உள்ள செல்ப் ரீடிங் ஹாலில் வாசகர்கள் தங்களது சொந்த புத்தகத்தையோ அல்லது சொந்த லாப்டாப்பையோ கொண்டு வந்து வைத்துக் கொண்டு படிக்கலாம். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நூலகம் திறந்திருப்பதால், மாணவர்கள் காலை 9 மணிக்கே வந்து இந்த செல்ப் ரீடிங் ஹாலை அமைதியாக ஆக்கிரமித்துப் படித்துக் கொண்டிருப்பதனைத் தினமும் பார்க்கலாம்.

      Like

  2. அடேடே நீங்கள் தேவநேயப் பாவாணர் அரங்கத்தை உள்ளடக்கிய கட்டிடத்தில் உள்ள சென்னை மாவட்ட மத்திய நூலகத்துக்கு வராமல் போய் விட்டீர்களே. பயனர்கள் சுகமாகத் தூங்குவதைப் பார்க்கலாம்.

    மற்றப்படி புத்தகங்களை தேடி எடுப்பது இங்கும் கடினம்தான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Like

  3. அதே சமயம் அருகிலேயே உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அமெரிக்க மைய நூலகத்தையும் அவற்றை மெயிண்டெயின் பண்ணும் நேர்த்தியையும் பார்த்து இன்னும் அதிகமாக வயிறெரியலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Like

    1. பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அமெரிக்க மைய நூலகத்திலும் இல்லாத USP இந்த ACL உண்டு. மேலதிக விபரங்களுக்கு இன்றைய ஹிந்து நாளிதழில் வந்துள்ள Anna library a second home for many students என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

      http://www.thehindu.com/news/cities/Chennai/article2614184.ece

      Like

      1. இன்றைய ஹிந்து இதழில் வந்த கட்டுரை Readers bowled over by Braille section of libraryhttp://www.thehindu.com/news/cities/Chennai/article2616108.ece

        Like

  4. //புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது பேர் ஒன்று மேலிருந்து கீழாகப் படிக்கும்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கீழிருந்து மேலாக. இரண்டு முறையிலும் வைத்தால் கழுத்தை திருப்பி திருப்பி படிக்க வேண்டி இருக்கிறது //
    இதற்கு நூலகப் பணியாட்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல. புத்தகங்களைப் பதிப்பவர்களே ஒரு standard ஐ பின்பற்றுவதில்லை. நானும் இது ஏன் என்று பல முறை யோசித்தும் விடை தெரியவில்லை. அதாவது ஒரு புத்தகத்தை நேராக வைக்கும் போது அதன் பக்கத்தில் (side) எழுதியிருக்கும் பெயர் சில புத்தகங்களில் மேலிருந்து கீழாகவும் சிலவற்றில் கீழிருந்து மேலாகவும் இருக்கிறது. ஆங்கில நூல்களிலும் இந்த குழப்பம் உண்டு. நூலகப் பணியாளர்கள் நூல்களை அடுக்கும் போது முகப்பு நேராக இருக்கும் படி வைக்கிறார்கள். அவ்வளவுதான்.

    Like

  5. கடந்த ஆட்சியில் நடந்த எத்தனையோ தண்டச் செலவுகளில் இதுவும் ஒன்று. முக்கியமான விஷயம் இவர்களெல்லாம் அதை உருவாகியதோடு சரி (அதாவது பாக்கெட்டுக்குப் பணம் போனால் சரி)அதன்பிறகான மேல் நடவடிக்கைகளில் அக்கறை கொள்வதில்லை. நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். பார்வையற்றவர்கள் பிரிவில் உள்ள நூல்கள், அதைப்படிக்கும் வசதி எல்லாம் சிறப்பாகவே உள்ளன. குழந்தைகள் பிரிவும் பரவாயில்லை. (அதை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா?) மற்றபடி எந்த நோக்கத்துக்காக அது ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தால் நிலைமை மாறும். அதெல்லாம் நடக்குமா? அதுவரை நினைத்து நினைத்து இளநீர் குடிக்க வேண்டியதுதான். 😦

    Like

    1. //கடந்த ஆட்சியில் நடந்த எத்தனையோ தண்டச் செலவுகளில் இதுவும் ஒன்று. // இல்லை. தேவைக்கு அதிகமாகவே செலவுகள் செய்திருந்தாலும், இது ஒரு நல்ல முதலீடுதான். ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேலாக இங்கு வருகின்றார்கள். படிக்கும் பழக்கம் வருகிறதோ இல்லையோ, மக்கள் ஒரு பொது இடத்தில் அமைதியாகவும், ஒழுங்குடனும் இருக்க வேண்டுமென்ற உதாரணத்துடன் நடந்து கொள்கின்றார்கள். அந்த வகையில் இந்த நூலகம் ஒரு நல்ல முயற்சி.

      Like

  6. விருபா, ஆவுடையப்பன் போன்றவர்கள் ஊர் சுற்றியபோது ஒரு நூலகத்தையாவது பார்த்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கலாம்…
    டோண்டு, இரண்டு நூலக அனுபவத்துக்குப் பிறகு வேறு எங்கும் போக மனமில்லை. உங்கள் எண்ணை முயற்சி செய்தபோது கிடைக்கவில்லை, அடுத்த முறை…
    பிருந்தாபன், // ஒரு புத்தகத்தை நேராக வைக்கும் போது அதன் பக்கத்தில் (side) எழுதியிருக்கும் பெயர் சில புத்தகங்களில் மேலிருந்து கீழாகவும் சிலவற்றில் கீழிருந்து மேலாகவும் இருக்கிறது. // அதுவும் உண்மையே.
    ரமணன், // பார்வையற்றவர்கள் பிரிவில் உள்ள நூல்கள், அதைப்படிக்கும் வசதி எல்லாம் சிறப்பாகவே உள்ளன. குழந்தைகள் பிரிவும் பரவாயில்லை. // அங்கே எல்லாம் போகவில்லை, பார்த்திருந்தால் கொஞ்சம் வயிறு எரிவது குறைந்திருக்கலாம்.

    Like

    1. //அங்கே எல்லாம் போகவில்லை, பார்த்திருந்தால் கொஞ்சம் வயிறு எரிவது குறைந்திருக்கலாம்.//

      ஆர்வி, இங்கு குறைந்தது சில மணி நேரங்களாவது ஒவ்வொரு பிரிவிலும் செலவு செய்யாமல், எதற்காக அவசரம், அவசரமாக கருத்துக் கந்தசாமியாகப் பதிவு இடுகின்றீர்கள் என்று புரியவில்லை.

      Like

  7. In October 2010, soon after the inauguration, the library (Anna Centenary Library) placed an order involving 35,174 books worth £1.275 million with the Cambridge University Press (CUP), resulting in the biggest sale in CUP’s history to an academic library in India and the biggest invoice CUP has ever issued – at 2,794 pages long. A single order worth a million euros was placed with the world’s largest publisher of books, Springer, which publishes in the fields of science, technology and medicine.

    இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் தெரியவில்லை! – சிமுலேஷன்

    Like

  8. சிமுலேஷன், பெரிய ஆர்டர்தான், இந்த புத்தகம் எல்லாம் அடுக்கி வைத்தாயிற்றா என்றுதான் தெரியவில்லை.

    Like

  9. ஆர்வி.. இந்த நூலகம் துவங்கப்பட்ட சில நாள்களில் சென்று பார்த்து, பிரமித்து இட்ட பதிவு.

    http://ramanans.wordpress.com/2010/09/22/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

    இப்போது மறுபடி சென்று பார்த்ததில் அந்த பிரமிப்பு சுத்தமாக இல்லை. விழலுக்கு இறைத்த நீர்.. என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

    Like

  10. நூலகம் என்றால் ஒரு கட்டிடம் என்று தான் சாதாரணமாக வெளியே போய்வரும் ஆட்கள் நினைப்பார்கள். அவர்களில் ஒருவரால் அவர்களில் சிலரைக்கொண்டு கட்டப்பட்ட நூலகம் போல. ))

    Like

  11. //நூலகம் என்றால் ஒரு கட்டிடம் என்று தான் சாதாரணமாக வெளியே போய்வரும் ஆட்கள் நினைப்பார்கள். அவர்களில் ஒருவரால் அவர்களில் சிலரைக்கொண்டு கட்டப்பட்ட நூலகம் போல..//

    சார்.. எப்படி இப்படி.. 😉

    Like

  12. // நூலகம் என்றால் ஒரு கட்டிடம் என்று தான் சாதாரணமாக வெளியே போய்வரும் ஆட்கள் நினைப்பார்கள். //ஜெயமோகன், குசும்பு அதிகம் சார் உங்களுக்கு!

    Like

  13. ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ பற்றிய விளம்பரங்களும், அதுபற்றிய அரசியல்வாதிகளின் விவரிப்புகளும் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன, உள்ளே போய்ப்பார்க்கும் வரை. போய்ப்பார்த்தபின் எதிர்பார்ப்புக்கள் புஸ்வாணமாகியது.

    ஒவ்வொரு பகுதியும் பிரமிப்பை ஏற்படுத்துவதற்குப்பதில், தண்டச்செலவு என்ற உணர்வையே ஏற்படுத்தின, ஏற்படுத்துகின்றன. ஆர்.வி. சொன்னதுபோல ஒரே ஆசிரியருக்கு, பல இடங்களில் ஒதுக்கீடுகள் உள்ளன. பல்சுவைப்பகுதிகளில் சில மருத்துவ நூல்களையும், நில ஆய்வு குறித்த பகுதியில் சில சரித்திர நூல்களையும் காண முடிந்தது.

    அதுசரி, இந்தக்கட்டிடமும் நவீன மருத்துவமனையாவது எப்போது?.

    Like

      1. இங்கு பதிவிடும் மற்றவர்களைப்பற்றி எனக்குத் தெரியாது.

        ஆனால், நான் ‘ஜெயலலிதா எதிர்ப்பாளி’ என்பது எனது பல்வேறு பதிவுகளைப் படித்தோருக்கு நன்கு தெரியும்.

        நூலகத்தை யார் ஏற்படுத்தியிருந்தாலும், நேரில் கண்டவற்றைச் சொல்லித்தானே ஆக வேண்டும்?.

        Like

  14. பாவம் நூலகங்கள்
    பங்களிப்பு நல்க வேண்டியோரின்
    பரிவின்மையால்
    பலருக்குக் கட்டிடமாகவேத் தெரியும்
    பரிதாபங்கள்

    Like

  15. //அதுசரி, இந்தக்கட்டிடமும் நவீன மருத்துவமனையாவது எப்போது?.//

    சாரதா… உங்கள் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும்.

    Like

    1. இந்தக் கட்டிடம் நவீன மருத்துவமனையாவது எப்போது என்று கேட்டிருப்பதில் ஆற்றாமையை விட, அவ்வாறு ஆகி விடவேண்டுமென்ற ஆவலே அதிகமாகத் தெரிவதாகத் தெரிகின்றது.

      Like

      1. சிமுலேஷன் சார்,,
        இந்தப் பின்னூட்டம் இட்ட நேரத்தில், புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றப்போவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தபோது, ‘கலைஞர் ஏற்படுத்தியதால், இந்த நூலகக் கட்டிடத்தையும் அப்படி மாற்றுவாரோ?’ என்று ஜெயலலிதாவைக் கிண்டலடித்து எழுதிய வரிகள் அவை. ஆனால் இப்போது அதுவே உண்மையாகி விட்டது

        Like

  16. நூலகம் இடம் மாற்றம் குறித்து இட்லி வடையில் வந்த கட்டுரைக்கு ஒரு சுவையான பின்னூட்டம்….

    சிகரங்களில் உறைகிறது காலம்;
    அகத்திணை ;
    பார்வைகள்;
    கருகும் மருதாணி;
    கருவறை வாசனை;
    ராஜா;
    ரோமாபுரி பாண்டியன் ,
    தென்பாண்டி சிங்கம்
    வெள்ளிக்கிழமை ,
    நெஞ்சுக்கு நீதி ,
    இனியவை இருபது ,
    சங்க தமிழ் ,
    குறளோவியம்,
    பொன்னர் சங்கர் ,

    மேற்கண்ட புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நூறு பிரதியாவது இருக்கும் என நினைக்கிறேன்.அதை எல்லாவற்றையும் தூக்கி கடாசி இருந்தாலே முடிந்தது வேலை.அதை விடுத்து மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்துவது போல!!

    Like

  17. //மேற்கண்ட புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நூறு பிரதியாவது இருக்கும் என நினைக்கிறேன்.//

    மேற்படி நூலகத்தைப் பார்வையிடாமலேயே கருத்துக் கந்தசாமியாகள அள்ளி வீசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லைஅ.

    Like

    1. இங்கு நல்ல பல நூல்கள் மட்டுமின்றி சுதேசமித்திரன், பிரசண்ட விகடன் போன்ற பல பழைய பத்திரிகளின் பழைய தொகுப்புக்க்களும் உள்ளன. நான் ஒவோரு முறை செல்லும் போதும் குறைந்த பட்சம் 2-3 மணி நேரங்களாவது செலவிடுகின்றேன். இட்லிவடை போன்ற வலைத்தளத்தில் பின்னூட்டமிடும் அடிப்பொடிகள் ஒரு நாளாவது கோட்டூர்புரம் சென்று ஓரிரு ம்ணி நேரங்களாவத்து செலவு செய்த பின்னர் பின்னூட்டப் பொட்டியில் கை வைத்தால் நலம்.

      Like

  18. இந்த நூலகத்தில் 1250 பேர் அமரக் கூடிய ஒரு பெரிய ஆடிட்டோரியமும், தரைத் தளத்தில் 150 பேர் அமரும் வகையில் ஒரு பிரம்மாண்டமான கான்பரன்ஸ் ஹாலும் இரண்டாம் தளத்தில் புத்தக வெளியீட்டிற்காக ஒரு மினி ஹாலும் உள்ளது. 1250 அமரும் ஹாலுக்கான ஒரு நாள் வாடகை மட்டும் 2 லட்சம் ரூபாய். மற்றவற்றிற்கான வாடகை இன்னமும் நிர்ண்யம செய்யப்படவில்லை. ஒரு நான் ப்ராவிட் ஆர்கனைசைசேஷனுக்கான இங்குள்ள மினி ஹால வாடகைக்கு வேண்டுமென்று கடந்த 3-4 மாதங்களாக முயன்று கொண்டிருகின்றேன். ஆனால் அரசாங்கத்தால் வாடகை நிர்ணயம் செய்யப்படாததால் வாடகைக்கு அளிக்க இயலாது என்பது நூலக இயக்குநரின் பதில். மேலும் TVS போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் 1250 அமரும் ஆடிட்டோரியத்தினை தங்களது கூட்டங்களுக்காக வாடகைக்கு வேண்டெமெனப் பல நாட்களாகக் கேட்டு வருகின்றனர். ஆனால் நோ ரெஸ்பான்ஸ். அதாவது மாதத்துக்கு 80 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படும் இந்த கட்டிடத்துக்கு ஒரு பைசா கூட வருமானம் வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவதாகத் தெரிகின்றது. அப்போதுதானே தண்டச் செலவு இது என்று சொல்லி இடிக்கவோ அல்லது மாற்றவோ செய்ய முடியும்

    Like

  19. ஞானியின் கண்டனம் – ஓ பக்கங்கள் (கல்கி)
    =========================================
    கருணாநிதி கட்டினார் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, கோட்டூர்புரத்திலிருந்து இடம் மாற்றும் ஜெயலலிதாவின் அராஜகத்துக்குக் கண்டனம். அடுத்த தேர்தலுக்கு கருணாநிதிக்கு வோட்டு சேகரித்துக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் ஜெ.

    Like

  20. // //அதுசரி, இந்தக்கட்டிடமும் நவீன மருத்துவமனையாவது எப்போது?// சாரதா, உங்களுடைய பல திறமைகளில் ஞானதிருஷ்டியும் உண்டா?

    சிமுலேஷன், பொங்கி எழுந்துவிட்டீர்களே! என் கண்ணில் நூலகம் நல்லபடியாக செயல்படவில்லை. ஆனால் ஜெயலலிதா நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நினைப்பது சின்னத்தனமான அரசியல் என்பது எல்லாருக்கும் தெரிகிறது. கட்டிடமாவது இருந்தால் நாளைய தலைமுறையினராவது அதை சிறப்பாக செயல்பட வைக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவும் போய்விட்டால் இப்படி சாத்தியக் கூறு இருப்பதே தெரியாமல் போய்விடும்…

    ஸ்ரீனிவாஸ், ஞானியின் கருத்தை இங்கே கொடுத்ததற்கு நன்றி!

    Like

  21. //சாரதா, உங்களுடைய பல திறமைகளில் ஞானதிருஷ்டியும் உண்டா?//

    டியர் ஆர்.வி.,
    இப்படியெல்லாம் கேட்டு உசுப்பேற்றி விடாதீர்கள். அப்புறம் நானும் காவிப்புடவை கட்டிக்கொண்டு ஆஸ்ரமம் ஆரம்பிக்க, நீங்களும் ‘அருள்வாக்கு அகிலாண்டேஸ்வரி, சத்யதேவி சாரதானந்தா சுவாமிகள்’ பற்றி ஸ்பெஷல் ஆர்ட்டிக்கிள் எழுத வேண்டி நேரிடும்.

    Like

  22. சிமுலேஷன் சார் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ பற்றி தெரிவித்த பாஸிட்டிவ் கருத்துக்களுக்கு நடுவில் நான் கேள்விப்பட்ட நெகட்டிவ் கருத்துக்கள். நண்பரொருவர் கூறியிருந்தவை…

    //தினமும் 200 பேர்களுக்கும் குறைவாக வந்துபோகக்கூடிய இந்நூலகத்தில் எந்நேரமும் எட்டு தளங்களிலும் ஏர்-கண்டிஷன் ஓடிக்கொண்டிருக்கிறது. (சிமு சார் தினமும் 1500 பேர் வருவதாகச்சொல்லியிருக்கிறார். இருவரில் ஒருவர் தவறான ஸ்கேலைக்கொண்டு ‘அளக்கிறார்கள்’ என்பது தெரிகிறது).

    வருபவர்களில் பலர் இலவச ஏ.சி.யை அனுபவிக்கவே வருவது போல சேரில் அமர்ந்து கண்களை மூடி தியான நிலையில் அமர்ந்துள்ளனர். சினிமா தியேட்டர்களில் ஏ.சி.யை அனுபவிக்க, குறைந்தது கட்டணம் என்ற பெயரில் 30 ரூபாயாவது எடுத்து வைக்க வேண்டும். இங்கே இலவசம்.

    ஆட்கள் அதிகம் செல்லாத சில பகுதிகள், காதலர்கள் சிலரின் புகலிடமாக, மிக மெல்லிய குரலில், உரையாட (கடலைபோட..?) உதவுகிறது.

    இந்நூலகத்தில் இண்ட்டர்நெட் வசதி இலவசம் என்பதால், இளைஞர்கள் பலர் தங்கள் லேப்டாப்புடன் வந்து, பொழுதன்னைக்கும் சாட்டிங், நெட்கேம்ஸ் போன்றவற்றில் பொழுதைக்கழிக்கின்றனர்.

    தமிழகத்தின் கோடியில் கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்ட இந்நூலகத்தால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன் இல்லை. இதற்கான செலவைக்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கிளை நூலகங்களையும் மேம்படுத்தினால், பலன் பரவலாக்கப்படும்.//

    இவையனைத்தும் நண்பரொருவரால் வேறொரு தளத்தில் சொல்லப்பட்டிருந்தவை. ஆனால் இதே நூலகம் ஜெயலலிதாவால் வேறொரு இடத்துக்கு மாற்றப்படும்போது, இதே ‘மைனஸ்கள்’ நடக்காதா என்று கேட்டால், ‘நிச்சயம் நடக்கும்’ என்பதுதான் பதில். அவ்வாறு மாற்றுவதைவிட அந்த நண்பர் சொன்னதுபோல கிளை நூலகங்களின் தரத்தை மேம்படுத்தி, பயனை பரவலாக்கலாம்.

    Like

    1. இலவச ஏ.சியை அனுபவிப்பதற்கும், இலவச இண்டர்நெட் வசதியை அனுபவிப்பதற்கும், கடலை போடுவதற்கும் 1-5% மக்கள் வரலாம். ஆனால் 95% பேர் நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தவே வருகின்றார்கள். கடலை போட மக்கள் கோயிலுக்குக் கூடத்தான் வருகின்றார்கள்.

      அது சரி. இந்த நெகட்டிவ் கருத்துக்கள் யார் சொன்னது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதனை எடுத்துக் ‘கோட்’ செய்யும் போது உங்கள் கருத்தும் இதுவே என்று எடுத்துக் கொள்ளத் தோன்றுகின்றது.

      பாசிட்டிவ் மட்டுமே பேச வேண்டுமென்று நானும் நினைக்கவில்லை. அப்படியிருந்தால் லக்கிலுக்கைக் கூடக் கோட் செய்திருக்கலாம்.

      Like

    2. //தினமும் 200 பேர்களுக்கும் குறைவாக வந்துபோகக்கூடிய இந்நூலகத்தில் எந்நேரமும் எட்டு தளங்களிலும் ஏர்-கண்டிஷன் ஓடிக்கொண்டிருக்கிறது. (சிமு சார் தினமும் 1500 பேர் வருவதாகச்சொல்லியிருக்கிறார். இருவரில் ஒருவர் தவறான ஸ்கேலைக்கொண்டு ‘அளக்கிறார்கள்’ என்பது தெரிகிறது).//

      ஹிந்து நாளிதழ் ஓரளவு ஆத்தெண்டிக் விபரங்கள் தருமென நம்புவீர்களென்று நினனக்கின்றேன். ஹிந்து தரும் விபரங்கள் இங்கே.

      http://www.thehindu.com/news/cities/Chennai/article2610994.ece

      Like

  23. அண்ணா நூற்றாண்டு நூலகம், இடமாற்றம் ஏன்? – அமைச்சர் சி.வி.சண்முகம்
    (துக்ளக் – 10-Nov-2011)

    “தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டும் திட்டமே, ஊழலுக்காக உருவாக்கப்பட்ட மற்றொரு திட்டம்தான். 168 கோடி ரூபாயில் கட்டத் திட்டமிடப்பட்டு 197 கோடி ரூபாய் அந்நூலகத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது. எனினும், முந்தைய அரசு அதற்காக ஒதுக்கிய தொகை 20 கோடி ரூபாய்தான். மீதி 177 கோடி ரூபாய், நூலகத் துறையில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிளை நூலகங்கள் அமைக்கவும், ஏற்கெனவே செயல்படும் நூலகங்களுக்குப் புதிய புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நூலகத் துறையின் இருப்பில் இருந்த தொகையை, ஒரே பில்டிங்கில் கொண்டு போய் கொட்டினார்கள். இதன் காரணமாக 2009, 2010-ஆம் ஆண்டுகளில் நூலகத் துறை புதிய புத்தகங்களே வாங்கவில்லை.

    “புதிய தலைமைச் செயலகம் கட்டும் கான்ட்ராக்ட்டைக் கொடுத்த அந்தக் கம்பெனியிடமே, இந்த நூலகக் கட்டிட வேலையையும் கொடுத்ததில் இருந்தே, இந்த திட்டத்தில் தி.மு.க. அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

    “மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள இடம் 8 ஏக்கர் பரப்பளவுடையது. அதாவது 3 லட்சத்து 48 ஆயிரத்து 448 சதுர அடி பரப்பளவு கொண்டது. நூலகம் அமைந்துள்ள தரைத்தளம் 41,700 சதுர அடி கொண்டது. அதன் மீது 8 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. மீதி 3 லட்சத்து ஆயிரம் சதுர அடி இடம் பயன்பாடற்றுள்ளது. இந்நூலகம் இங்கு இயங்க, கட்டிடத்திற்கு பராமரிப்புச் செலவு மட்டும் வருடத்துக்கு, 7 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். பாதுகாப்பு சிஸ்டத்திற்கு மட்டுமே 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும் தனியார் நிறுவனம் கூட இவ்வளவு செலவிடுவதில்லை.

    Like

  24. அன்புள்ள சிமுலேஷன்,

    // //அங்கே எல்லாம் போகவில்லை, பார்த்திருந்தால் கொஞ்சம் வயிறு எரிவது குறைந்திருக்கலாம்.//
    ஆர்வி, இங்கு குறைந்தது சில மணி நேரங்களாவது ஒவ்வொரு பிரிவிலும் செலவு செய்யாமல், எதற்காக அவசரம், அவசரமாக கருத்துக் கந்தசாமியாகப் பதிவு இடுகின்றீர்கள் என்று புரியவில்லை. //

    ப்ரெய்லி பகுதிக்குப் போய் நான் என்ன செய்ய? அது நன்றாக இயங்குகிறதா இல்லையா என்று புரிந்து கொள்ளக் கூடியவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு பிரிவிலும் சில மணி நேரம் செலவு செய்யும் அளவுக்கு நேரம் இல்லை, சிமுலேஷன் சார். மொத்தமாகவே சில மணி நேரம்தான் பட்ஜெட்.

    நூலகத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் நமக்குள் இசைவு இல்லை என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் நூலகத்தின் நோக்கம் பெரிய ஹால் வைத்து நிகழ்ச்சி நடத்துவதோ உயர்தர கட்டிடம் கட்டுவதோ கம்ப்யூட்டர் வசதிகளோ இல்லை. பல தரப்பட்ட நூல்கள் பயனர்களுக்கு சுலபமாகக் கிடைப்பதுதான். ஒரு வருஷம் ஆகியும் யாரும் மெம்பர் ஆக முடியாது, புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் விதம், கேடலாகை சுலபமாக மேய முடியாதது எல்லாம் எனக்கு நூலகம் நல்ல படியாக செயல்படவில்லை என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின.

    நான் அமெரிக்க லைப்ரரிகளைப் பார்த்து கெட்டுப் போய்விட்டேனோ என்னவோ. நான் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் போன்றவற்றுக்குப் போகவில்லை. ஆனால் இங்கே ஒரு சிறு நகரத்தில் இதை விட பல மடங்கு குறைவான செலவில் நூலகங்கள் இன்னும் பிரமாதமாக செயல்படுகின்றன என்றுதான் எனக்கு தோன்றியது. புத்தகங்களை விட கட்டிடம்தான் முந்தைய ஆட்சியினருக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

    அதுவும் கிராம நூலகங்களுக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை எடுத்து இதை கட்டி இருக்கிறார்கள் என்றால் அது பெரிய அநியாயம்.

    அதற்காக ஜெயலலிதாவின் திட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. இந்த இன்ப்ரச்ற்றுச்டுரே-ஐ எதிர்காலத்திலாவது சிறப்பாக செயல்படுத்த இருக்கும் வாய்ப்பை அவர் சின்னத்தனமான அரசியல் காரணங்களுக்காக ஒழிக்கவே பார்க்கிறார்.

    ஸ்ரீனிவாசன், எக்கச்சக்க செலவாகும் போலிருக்கிறது. பிற நகர, கிராம நூலகங்களை மறக்காமல் இருந்தால் சரி.

    Like

  25. இந்த நூலகத்தைக் குறை கூறுபபர்களின் பெரும்பான்மையினரின் குற்றச்சாட்டு, கிராமங்களில் செலவழிப்பதற்குப் பதிலாக இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நூலகம் சென்னையில் மட்டும் தேவையா என்பது.

    ஒரு மாநிலத்தின் தலைநகரில் இப்படி ஒரு பிரம்மாண்டமான நூலகம் கட்டுவதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை. In a pahsed manner மாவட்டத் தலைநகரங்களிலும் கட்டலாம். (ஊழல் செய்யாமல்)

    அடுத்தது உறுப்பினர் அட்டை தரவில்லை; புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துப் போக முடியவில்லை என்பது. எனக்கு என்னமோ இங்கு இருக்கும் விலை உயர்ந்த புத்தகங்களைப் பார்க்கும் போது, இபோதைக்கு மெம்பர்ஷிப் கொடுக்காமல் அங்கேயே உட்கார்ந்து படிக்கச் சொல்வதுதான் சிறந்தது என்றும் தோன்றுகின்றது.

    Like

  26. நூலகங்களுக்கு செல்லும் வழக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது. இனி, ராசிபலன் எழுதுபவர்களிடம் சொல்லி நூலகங்களுக்கு சென்றால் நலம் பெருகும், இந்த நாவல் படித்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என எழுதச்சொன்னால் தான் மக்கள் புத்தகங்கள் பக்கம் கொஞ்சப்பேராவது வருவார்கள். இல்லாவிட்டால், தொல்லைக் காட்சிகளிலிருந்து மக்களை மீட்பது கடினம். வீட்டுக்கு வீடு நூலகம் வைக்க வாஸ்து நிபுனர்களிடம் பரிந்துரைக்கச் சொல்லவேண்டும். பகிர்விற்கு நன்றி.

    Like

  27. சிமுலேஷன், சுட்டிகள் கொடுத்து அசத்துகிறீர்கள்.

    // இந்த நூலகத்தைக் குறை கூறுபபர்களின் பெரும்பான்மையினரின் குற்றச்சாட்டு, கிராமங்களில் செலவழிப்பதற்குப் பதிலாக இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு நூலகம் சென்னையில் மட்டும் தேவையா என்பது. //
    அது என் குற்றச்சாட்டு இல்லை. கிராம நூலக நிதி என்று ஒதுக்கி வைத்திருப்பதை எடுத்து இதற்கு செலவு செய்வதித்தான் நான் ஆட்சேபிக்கிறேன்.

    சித்திரவீதிக்காரன், படிக்கும் பழக்கம் இப்போதெல்லாம் முன்னை விட அதிகரித்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இன்னும் அதிகரிக்க வேண்டும் இன்று நீங்கள் சொல்வதை முழமையாக ஆமோதிக்கிறேன்.

    Like

  28. பிங்குபாக்: நாஞ்சில்நாடன்
  29. பிங்குபாக்: இருவகை எழுத்து
  30. உண்மைதான்.. தேவையான ஒரு நூலை எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது… பெரும்பாலும் இருப்பதில்லை.. இது இப்போது அல்ல, திமுக ஆட்சியிலேயே இந்த நிலைமையில் தான் இருந்தது.. இப்போது நிலைமை இன்னும் மோசம் என்று கேள்விப்படுகிறேன்… எதையுமே வெட்டிப் புகழுக்காக மட்டுமே செய்து பழகிய திராவிடக்கட்சிகளிடம் இதற்குமேல் எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்…

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.